என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, January 5, 2015

என் புதிய நூல் “இங்கே நிம்மதி!” வெளியீடு!


ங்கே நிம்மதி, எங்கே நிம்மதி?” என்று தேடி அலைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்காய் பெருகி வருகிறது. நிம்மதிக்காக மனிதர்கள் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். பெருமளவு பொருள்களையும், சொத்துக்களையும் சேர்த்துப் பார்க்கிறார்கள், புகழ் பின்னால் ஓடி அதை அடைந்து பார்க்கிறார்கள், குடி, போதை, செக்ஸ் ஆகியவற்றை பல விதங்களில் அனுபவித்துப் பார்க்கிறார்கள், ஆன்மீகம், சாமியார்கள் என்றெல்லாம் அடைக்கலம் புகுந்தும் பார்க்கிறார்கள். இத்தனை செய்தும் நிம்மதி அவர்களுக்கு தொடுவான தூரத்திலேயே நின்று விடுகிறதே ஒழிய சென்று அடைய முடிகிற இலக்காகத் தெரியவில்லை.


இந்த நிலையைப் போக்க குட்டிக் கதைகள் மூலமாகவும், உதாரணங்கள் மூலமாகவும் பல கோணங்களில் வாழ்க்கையையும், சூழ்நிலைகளையும், பிரச்னைகளையும் அலசி, யதார்த்த உண்மைகளை உணர்த்தி, பக்குவப்படுத்தி, ’இங்கே இருக்கிறது நிம்மதி’ என்று நிம்மதிக்கான வழிகளில் உங்கள் கையைப் பிடித்து இந்த நூலின் 42 கட்டுரைகள் உங்களை அழைத்துச் செல்லும்.

160 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.130/-

நிம்மதியில்லாத தருணங்களில் உங்களை அமைதிப்படுத்தவும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் இந்த நூல் உதவும்.  வாங்கி வைத்திருந்து அடிக்கடி படித்து மனதை பக்குவப்படுத்திக் கொள்ளவும், நீங்கள் அக்கறை கொண்டவர்களுக்குப் பரிசளிக்கவும்  இந்த நூல் உகந்தது.

நூலை வாங்கவும், தங்கள் ஊர்களில் எந்தெந்த கடைகளில் இந்த நூல் கிடைக்கும் என்பதை அறியவும், பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்

Mobile: 9600123146, 7667886991

email: blackholemedia@gmail.com


அன்புடன்,

என்.கணேசன்

(9.1.2015 முதல் 21.1.2015 வரை நடக்கவிருக்கும் சென்னை புத்தகக்கண்காட்சி 2015ல் அரங்கு எண் 653ல் தள்ளுபடியுடன் இந்த நூலையும் என் மற்ற நூல்களையும் வாங்கிக் கொள்ளலாம்)

7 comments:

 1. இந்நூல் பலருடைய வாழ்வில் நிம்மதியை அளிக்கவும் , விற்பனையில் சிறந்த நிலையை அடையவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விஷ்ணுJanuary 5, 2015 at 7:01 PM

  அட்டைப்படமும் தலைப்பும் சூப்பர் அண்ணா. இந்த புத்தகம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அருமையான தலைப்பு...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 4. As no ebook available, it would be beneficial for readers like me (who are not in India), if the episodes are published in your blog. Could be asking for too much!!! Just eager to read !!!

  ReplyDelete
 5. Since ebook is not available, if the articles in this books are published in your blog, it will be very helpful for readers like me who have no access to buy your book. It may be asking for too much, but curious to read your writing!!!

  ReplyDelete
 6. நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.

  பாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.


  இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.

  Regards,
  gopalelango.blogspot.com

  ReplyDelete