சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 27, 2014

பரம(ன்) ரகசியம் – 90


பாபுஜியின் இடத்தை அவர்கள் அடைந்த போது மணி 11.10. பௌர்ணமி திதி 11.42க்கு முடிகிறது என்றும், அதற்குள் அவர்கள் செயல்பட்டாக வேண்டும் என்றும் ஈஸ்வர் அறிந்திருக்கவில்லை. இந்த இரவு முடிவதற்குள் ஏதாவது செய்து முடித்து விட வேண்டும் என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் இந்த கடைசி சில நிமிடங்களில் மேலும் தெரிந்த மாற்றம் பார்த்தசாரதியை வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த பேரமைதி அவருக்கு இப்போதும் புத்தரை நினைவுபடுத்தியது. ஆனால் இன்றைய பேரமைதி முன்பெல்லாம் தெரிந்ததை விட மும்மடங்கு பொலிவுடன் இருந்ததாக அவருக்குப் பட்டது.  போதி மரத்தடியில் மகாநிர்வாணம் அடைந்த போது புத்தர் இப்படியே இருந்திருப்பார் என்று ஏனோ அவருக்குத் தோன்றியது. இயல்பாகவே அழகான அவன் இப்போதைய பொலிவில் ஒரு கந்தர்வனைப் போல ஜொலித்தான்.  
  
உண்மையில் அங்கே நெருங்க நெருங்க அவனிடம் ஏற்பட்டிருந்த எண்ண ஓட்டங்கள் தான் அந்த மாற்றத்திற்குக் காரணமாய் இருந்தன. அவன் சாதாரணனாகத் தோன்றலாம். ஆனால் அவன் மூலம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று பசுபதி, சித்தர் போன்றவர்கள் முடிவு செய்தால் அவன் எப்படி சாதாரணமானவனாக இருக்க முடியும். சுமக்க முடியாத சுமைகள் தரப்படுவதில்லை என்று சித்தர் சொன்னாரே. ஒன்று நடக்க வேண்டும் என்று தெய்வ சித்தம் இருக்குமானால் அதை நடத்தும் போது அந்தத் தெய்வமும் கூட இருக்கிறது என்றல்லவா பொருள். சிந்தனை இந்தப் போக்கில் போன போது அவன் ஒரு பேரமைதியோடு கூடிய அசுரபலத்தை தன்னுள் உணர்ந்தான்.

பார்த்தசாரதி போலீஸ் ஐடி கார்டைக் காட்டியதும் செக்யூரிட்டு ஆட்கள் பாபுஜிக்குப் போனில் தெரிவிக்க முயன்றார்கள். ஆனால் பாபுஜி அவர்களுக்குப் பேசக் கிடைக்கவில்லை. செக்யூரிட்டி ஆட்கள் போன் செய்கிறார்கள் என்றவுடனேயே பாபுஜி விஷயத்தை ஊகித்து நம்பீசனிடம் சொன்னார். அவங்க வந்துட்டாங்க. என்ன செய்யப் போறீங்க....

“அவங்களை வரவேற்க இவங்களை தயார் பண்ணிட்டேன்என்று சொன்ன நம்பீசன் ஹோமகுண்டத்தில் உக்கிரமாய் எரிந்து கொண்டிருந்த தீயைக்  காட்டினார். அருகில் வந்து அதில் தோன்றிய உருவங்களைப் பார்த்த நம்பீசனுக்கும், ஜான்சனுக்கும் கிலி ஏற்பட்டது. முழுவதும் ஆட்களும் அல்லாமல், விலங்குகளும் அல்லாமல், பறவைகளும் அல்லாமல், மூன்றின் எலும்புக்கூடுகளும் கலந்த விசித்திர உருவங்கள் விகாரமாய் தோன்றின.

“என்ன இது?என்று கேட்க பாபுஜி நினைத்தார். ஆனால் நாக்கு மேல் எழும்பவில்லை.... ஜான்சன் உடனடியாக முகத்தைத் திருப்பிக் கொண்டார். மாய மந்திரங்கள் அவருடைய ஆராய்ச்சியில் இருந்திருக்கின்றன என்றாலும் இது போன்ற கோர உருவங்களை அவரும் எதிர்கொண்டதில்லை.  

செக்யூரிட்டி ஆட்கள் பாபுஜியிடம் இருந்து தகவல் வராமல் போகவே, போலீஸ்காரர்களைத் தடுக்க வழியில்லாமல் மெயின் கேட்டைத் திறந்தார்கள்.

உள்ளே நுழைவதற்கு முன் ஈஸ்வர் அமைதி மாறாமல் பார்த்தசாரதியிடம் கேட்டான். “சார் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்லையா?

பார்த்தசாரதி சொன்னார். இருக்கு ஈஸ்வர். நீங்க சிவலிங்கத்தைக் கவனியிங்க. மீதி எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்...

அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். மனித-மிருக-பறவைகளின் எலும்புக்கூடுகளின் கலவை உருவங்கள் அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தன. சில உருவங்கள் ஓடி வந்தன. சில உருவங்கள் பறந்து வந்தன. சில உருவங்கள் நடந்து வந்தன. சில உருவங்கள் தீயைக் கக்கின. சில உருவங்கள் விசித்திர ஓசைகளையும், ஓலங்களையும் எழுப்பின.

பார்த்தசாரதியும் அவருடன் வந்த இரண்டு போலீஸ்காரர்களும் பேய் ஆவி சினிமாக்களில் வரும் சில காட்சிகளுக்குத் தயாராக இருந்தார்களே ஒழிய இப்படி இரத்தம் உறைய வைக்கும் உருவங்களுக்குத் தயாராக இருக்கவில்லை. பார்த்தசாரதிக்கு உடனே திருவரங்கத்தான் நினைவு வரவில்லை. மரணம் தான் நினைவுக்கு வந்தது. உடனே மனைவி மக்கள் நினைவுக்கு வந்தார்கள். அவருடன் வந்த போலீஸ்காரர்கள் தலைதெறிக்க திரும்ப வெளியே ஓடினார்கள். அவர்கள் மிகவும் தைரியசாலிகள் தான்.  ஆனால் அவர்கள் தைரியம் இந்த சூழ்நிலைக்குப் போதவில்லை.

அந்த நிலையிலும் பார்த்தசாரதிக்கு ஈஸ்வரை விட்டு விட்டு தனியாக ஓட மனம் கேட்கவில்லை. இதயம் இப்படியே துடித்தால் உடைந்தே சிதறி விடும் என்று தோன்ற ஈஸ்வர் என்ன செய்கிறான் என்று பீதியுடன் பார்த்தார். ஏன் என்றால் கிட்டத்தட்ட எல்லா பேய்களும்(?) அவனையே தான் குறி பார்த்து நெருங்கின. ஆனால் அவன் அந்தக் கோர உருவங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. புத்தனாகவே மாறி அவன் அங்கு ஒரு சிறு பரபரப்பைக் கூடக் காட்டாமல் நடந்தான். 

பறந்து வந்த ஒரு குள்ள மனித எலும்புக்கூடு விசித்திரமாய் நரி போல் ஊளை இட்டுக் கொண்டே அவரை நெருங்கிய போது அதை ஈஸ்வர் சொன்னது போல் குழந்தைகளின் பூச்சாண்டியாக பார்த்தசாரதியால் நினைக்க முடியவில்லை. முகத்தில் மட்டும் முகமூடி போட்டுப் பயம் காட்டும் குழந்தைகள் எங்கே, தத்ரூபமாய் ரத்தத்தைக் குடிப்பது போல் வரும் இந்த அமானுஷ்யப் பேய்கள் எங்கே? அந்த உருவம் அவர் உடம்புக்குள் புகுந்து கொண்டது போல் இருந்தது. அவரை மிக்ஸியில் போட்டு அது அரைப்பது போல் அவர் உணர்ந்தார். தலை மட்டும் அப்படியே இருக்க உடம்பெல்லாம் பம்பரமாகச் சுற்றுவது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை.

ஒன்று உள்ளே புகுந்ததற்கே இந்தப்பாடு என்றால் அத்தனையும் அவனுள் புகுந்து கொள்ளப் பார்க்கின்றனவே அவன் நிலைமை என்ன ஆகும் என்று அந்தப் பயங்கர நிலையிலும் அவனைப் பார்த்தார். அவனைப் பல கோர உருவங்கள் சுற்றிக் கொண்டு பயமுறுத்திக் கொண்டிருந்த போதும் அவன் நடையை அவை தடை செய்யவில்லை. அவற்றிற்கு அவனுக்குள்ளே நுழைய முடியவில்லை. அமைதி மாறாமல் ஓம்என்ற ஓங்கார த்வனி கேட்கும் திசை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். அந்த உருவங்கள் காதைக் கிழிக்கிறது போல் கூச்சல் இட்டுக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் அவற்றை எல்லாம் ஊடுருவிச் சென்று அந்த ஓமில் லயித்தது.

பார்த்தசாரதிக்கு அவன் இதெல்லாம் உடனடியா நமக்கு இயல்பா வந்துடாது. மனசுல பயிற்சி செய்துக்கறது நல்லது....என்று எச்சரித்தது நினைவுக்கு வந்தது. என்ன தான் பயிற்சி செய்திருந்தாலும் இதைச் சமாளிக்க தன்னால் முடிந்திருக்காது என்று தோன்றியது. அவரால் மட்டுமல்ல சாதாரணமாய் யாராலும் சமாளிக்க முடிந்திருக்காது... அவன் சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அதனால் அவன் பக்கம் சித்தர்கள் நின்று அவனைக் காக்கிறார்கள் என்று தோன்றியது.

உயிர்பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் கூட நேராக கைலாயத்திற்கோ, வைகுண்டத்திற்கோ போய் விடலாம் என்று சொல்வதை அவர் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் இதென்ன அபத்தம் என்று தோன்றும். வாழும் காலமெல்லாம் எப்படி எல்லாமோ இருந்து விட்டு கடைசி  நேரத்தில் இறைவனை நினைத்தாலும் அப்படி போக முடியும் என்றால் முதலில் இருந்தே நினைக்கும் அவசியமே இல்லையே என்று தோன்றி இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் இறைவனை நினைக்க முடிவது அவ்வளவு சுலபமல்ல என்பது புரிந்தது. அதற்கு முன்பே பல காலமாக, ஏன் பல ஜென்மங்களாகவே கூட மனதில் பதியப்பட்டு இருந்தால் தான் அது நிகழ முடியும் என்பது புரிந்தது….
  
நம்பீசன் தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் ஈஸ்வரைப் பார்த்தார். அவர் இது போன்ற ஒருவனை இதுவரை பார்த்ததில்லை. அனுபவம் மிக்க ராஜ யோகிகளும் சித்தர்களும் மட்டுமே சிக்காத சித்து விளையாட்டு இது. மனதில் சிறிது சலனமோ, பயமோ இருந்தாலும் அவர் அனுப்பிய சக்திகள் அவனுக்குள்ளே புகுந்து நரகம் என்ன என்பதைக் காட்டியிருக்கும். மாறாக அந்த சக்திகள் அவன் நடையின் வேகத்தைக் கூட அதிகப்படுத்தவில்லை. ராணுவ வீரர்கள் அணிவகுப்பின் போது தான் அப்படி ஒரு சீரான அவசரமில்லாத நடையை அவர் பார்த்திருக்கிறார்.

பாபுஜி அவரைப் பார்த்துப் பைத்தியம் பிடித்தது போல கத்தினார். “யோவ். காசை வாங்கிட்டு என்ன வேடிக்கை பார்க்கிறே. அவனை எதாவது செய்யிய்யா....

நம்பீசன் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 11.32. இன்னும் பத்து நிமிடங்கள் தாக்குப் பிடித்தால் போதும்.... “பத்தே பத்து நிமிஷம் ஏதாவது செஞ்சு அவனைத் தடுத்து நிறுத்துங்க. அவன் அந்த சிவலிங்கத்தை நெருங்காம பார்த்துக்குங்க. அவன் நெருங்கிட்டா அந்த சிவலிங்கத்தை நீங்க எப்பவுமே இனி பார்க்க முடியாதுன்னு ப்ரஸ்னம் சொல்லுது... மந்திரத்தால இனி செய்ய முடிஞ்சது எதுவும் இல்லை....

லட்சக்கணக்கில் பணம் வாங்கி விட்டு கடைசியில் அவரிடமே எதாவது செய்யச் சொல்லும் நம்பீசனைப் பார்க்கும் போது பாபுஜிக்கு ரத்தம் கொதித்தது. ஆனால் கோபப்படவும் நேரமில்லை. பத்து நிமிடம் தான் இருக்கின்றது என்ற அந்தத் தகவலையாவது சொல்கிறானே இந்தப் படுபாவி என்று வயிறெரிந்த அவர் துப்பாக்கியை எடுக்க தனதறைக்கு ஓடினார். ஓடும் போது ஜான்சனைப் பார்த்துக் கத்தினார். “ஜான்சன். எதையாவது செஞ்சு அவனை நிறுத்துங்க

ஜான்சன் ஆராய்ச்சியாளரே ஒழிய குண்டரல்ல. அவர் நகரவில்லை. அவர் ஈஸ்வரைப் பார்த்து பிரமித்தபடி நின்றிருந்தார். இவன் மனிதன் தானா? இந்த மாதிரியான ஒரு நிலைமையில் இப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் அமைதியாக இயங்குவதை  ஒரு மனிதனிடம் அவர் முதல் முறையாகப் பார்க்கிறார்....

ஈஸ்வர் தியான மண்டபத்திற்குள் நுழைந்தான். அவனைப் பின் தொடர்ந்த அந்த கோர உருவங்கள் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அவை பின் வாங்க ஆரம்பித்தன. ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். விசேஷ மானஸ லிங்கம் அவன் வருகைக்காகக் காத்திருந்து மகிழ்ந்தது போல ஜொலிக்க ஆரம்பித்தது. அந்த ஜொலிப்பில் கூட ஓங்காரத்திற்கேற்ற சக்தியின் நடனம் இருப்பது போல் ஈஸ்வருக்குத் தோன்றியது. அவன் சிலை போல அமர்ந்திருந்த ஹரிராமையும், சிவனுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டிருந்த கணபதியையும் பார்த்தான். இரண்டுமே இயல்பாய் இல்லை. இது நம்பீசனின் திருவிளையாடல் தான்.....

உடனடியாக சிவலிங்கத்தில் கவனத்தைக் குவித்து அதன் சக்தியில் லயித்த அவன் ஹரிராமையும் கணபதியையும் அந்த சக்தி அலைகளிற்கு இழுத்தான். நம்பீசனின் மந்திரக்கட்டு அவிழ்ந்து போனது. ஹரிராம் விடுபட்ட அந்தக் கணத்தில் தான் பாபுஜி ஓடி வந்து தியான மண்டப வாசலில் நின்று தன் துப்பாக்கியை ஈஸ்வருக்குக் குறி வைத்தார். ஒரு நிமிடம் தாமதித்தாலும் ஈஸ்வரின் மரணம் நிச்சயம் என்று ஹரிராமிற்குப் புரிந்தது.

அந்த மந்திரக்கட்டு அவரைப் பிணைத்திருந்த காலத்தில் ஆல்ஃபா அலைகளிற்குப் போய் அந்த மந்திரக்கட்டின் தன்மைகளை அவர் ஆராய்ந்து கொண்டு இருந்தார். தன்னிடம் தரப்பட்ட பொம்மையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு குழந்தையைப் போல முழு கவனத்தையும் அதில் செலுத்தி அதன் சூட்சுமங்களை அறிந்து வைத்திருந்தார். அபூர்வ சக்திகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்கு அதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. அதனால் தன்னிடமிருந்து விலகிய மந்திரக்கட்டை பாபுஜி மீது சூட்சுமமான ஒரு மாற்றம் செய்து மின்னல் வேகத்தில் ஹரிராம் ஏவினார்.

அடுத்த கணம் துப்பாக்கி நீட்டிய கையோடு பாபுஜி அப்படியே சிலையாக சமைந்தார்.  துப்பாக்கி  விசையை அழுத்தக் கூட முடியவில்லை. இப்போதும் ஈஸ்வர் அவர் குறியிலேயே தான் இருக்கிறான். அவர் கையில் இருக்கும் துப்பாக்கி சக்தி வாய்ந்தது. விசையை அழுத்தினால் போதும் அவன் கதை முடியும். அவர் கதை உயரும். ஆனால் அந்தச் சின்ன சுலபமான செயலைச் செய்யக்கூட அவரால் முடியவில்லை. வாங்கின காசிற்கு அதையாவது நம்பீசன் செய்து தரக் கூடாதா? இதற்கும் ஒரு பத்து லட்சம் சேர்த்துத் தரச் சொன்னாலும் பாபுஜி தரத்தயாராக இருந்தார்.  ஆனால் நம்பீசன் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய இயங்கும் நிலையில் இல்லை. பாபுஜி “யோவ் ஏதாவது செய்யிய்யா. நான் எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்என்று சொல்ல வாய் திறக்கப் பார்த்தார். வாயைக் கூடத் திறக்க முடியவில்லை.

ஈஸ்வர் ஹரிராமிடம் தியான மண்டபத்திற்கு வெளியே இருக்கும் பார்த்தசாரதியையும் நம்பீசனின் ஏவலில் இருந்து விடுவிக்கச் சொன்னான். அவனை விசேஷ மானஸ லிங்கம் தன்னருகே அழைப்பது போல் இருந்தது. அவன் உள்ளே நுழைந்த கணத்தில் கியோமி, அலெக்ஸி இருவரின் தியானம் தடைப்பட்டு அவர்கள் எழுந்து நின்றார்கள். கியோமிக்கு அந்தக்கணத்தில் ஈஸ்வர் ஒரு போதிசத்துவராகவே தெரிந்தான். அவள் அவனை பரவசத்துடன் வணங்கி நின்றாள்.

ஹரிராம் வேகமாக வெளியே வந்து நம்பீசன் ஏவி இருந்த அத்தனை உருவங்களையும் திரும்ப அவருக்கே ஏவி விட்டார். அதிர்ச்சியுடன் நின்றிருந்த நம்பீசன் அதற்குத் தயாராக இருக்கவில்லை. தயாராக இருந்திருந்தால் விஷயம் தெரிந்த அவருக்கு தன்னைத் தற்காத்துக் கொள்வது சுலபமாக இருந்திருக்கும்... அவரும் அவர் உதவியாளர்களும் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். அந்த உருவங்கள் விசித்திர ஓலிகளுடன் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடின.

நம்பீசனும், அவர் உதவியாளர்களும், அவர்களைத் தொடர்ந்து அந்த விசித்திர உருவங்களும் ஓடிய பிறகு சிறிது நேரம் கழித்து தான் போலீசார் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் குறை சொல்ல பார்த்தசாரதிக்குத் தோன்றவில்லை. அவருக்கே உள்ளே புகுந்து ஆட்டிப்படைத்த அந்த உருவம் வெளியேறிய பிறகு தான்  ஆசுவாசம் ஏற்பட்டது . உடம்பில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு சேதாரம் எதுவும் இல்லாமல் சரியாக இருக்கவே மேலும் நிம்மதி அடைந்தார். வேகமாக தியான மண்டபத்திற்குள் நுழைந்தவர் ஜொலிக்கும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்து கைகூப்பி நின்றார்.

ஜான்சனுக்கு ஏதோ மாயாஜால உலகில் இருப்பது போல் தோன்றியது. ஒரே நேரத்தில் பல ஆராய்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அறுவரும் அவரை நோக்கி கைகளை ஆட்டினார்கள். நம்பீசன் சொல்லி இருந்த 11.42 கெடுவுக்குள் ஈஸ்வரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் துடித்தார்கள். மணி அப்போது 11.40. கடிகாரத்தைக் காட்டி ஈஸ்வரைக் காட்டினார்கள். ஆனால் ஜான்சன் நகரவில்லை. ஒரு மிக இக்கட்டான தருணத்தில் மிகக் கச்சிதமாக இயங்க முடிந்த ஈஸ்வரையே அவர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் தருணத்தில் இப்படி இயங்க அவன் எத்தனை ஜென்மங்களாகத் தன்னைத் தயார் செய்திருக்கிறானோ என்று தோன்றியது.... பேரமைதியுடன் அவன் விசேஷ மானஸ லிங்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.   
 
கணபதி உறக்கத்திலிருந்து மீண்டு தன்னையே திட்டிக் கொண்டான். ‘என்ன எப்பப் பாரு தூக்கம்? நல்லாவா இருக்கு?கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்த போது சற்று தள்ளி ஈஸ்வர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. “அட நம்ம ஈஸ்வர் அண்ணன்....”  பெருமையாய் சிவலிங்கத்திற்கு ஈஸ்வரை அறிமுகம் செய்து வைத்தான். “நீ உடுத்தி இருக்கற பட்டு வேட்டியை வாங்கிக் குடுத்தது இந்த அண்ணன் தான்.... ஆமா நீ என்ன இப்படி ஜொலிக்கிறே? இப்ப நீ ரொம்ப அழகா இருக்கே... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...

அக்னி நேத்ர சித்தர் திடீர் என்று விசேஷ மானஸ லிங்கத்தின் பின்னால் காட்சி அளித்தார். உதயன் சுவாமி ஏற்படுத்தி இருந்த மந்திரத்தடை நம்பீசன் அந்த இடத்தின் உள்ளே வரவழைத்திருந்த துஷ்ட சக்திகளால் அறுபட்டுப் போயிருந்தது. அங்கு நின்ற அவர் ஹரிராமையும் ஈஸ்வருடன் வரும்படி சைகை செய்தார். ஈஸ்வரை நோக்கி ஓட யத்தனித்த கணபதியை அவர் தடுத்து நிறுத்தினார். கணபதிக்கு அவரைப் பார்த்தவுடன் அவர் ஒருமுறை கொண்டு வந்திருந்த அபூர்வ பூக்கள் ஞாபகம் வந்தது.  அவர் இப்போதும் கொண்டு வந்திருக்கிறாரா என்று அவர் கையைப் பார்த்தான். பூக்கூடையோ, பூக்களோ இல்லை. கொண்டு வந்திருந்தால் சிவனுக்கு வைத்திருக்கலாம்...

அக்னி நேத்ர சித்தரை அங்கே பார்த்த ஈஸ்வர் கைகளைக் கூப்பி தலை தாழ்த்தி வணங்கினான். ஹரிராமும் வணங்கினார். இதைப் பார்த்து கணபதியும் அப்படியே வணங்கினான். அக்னி நேத்ர சித்தர் மூவரையும் உடனடியாக விசேஷ மானஸ லிங்கத்தைத் தொடச் சொன்னார். மூவரும் தொட்டார்கள். கடிகார முள் 11.41ல் இருந்து விலகி 11.42ல் நின்றது. மூவர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அவர்களின் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு மகாசக்தி ஊடுருவிப் படர்ந்தது. உடல் லேசாகி காற்றில் மிதப்பது போல் அவர்கள் உணர்ந்தார்கள்.

அந்தக் கணத்தில் அந்த இடத்தில் அக்னி நேத்ர சித்தர் மட்டுமல்லாமல் மற்ற பல சித்தர்களும் கூடி இருந்தார்கள். விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கிய கணத்தில் இருந்து இன்று வரை அதைப் பூஜித்து வந்த சித்தர்கள் அவர்கள். உடலோடு இருந்த சித்தர்கள் குறைவு. மற்றவர்கள் சக்தி ஸ்வரூபமாக அங்கு இருந்தார்கள். ஆனால் விசேஷ மானஸ லிங்கத்தைத் தொட்டபடி நின்றிருந்த மூவருக்கும் அவர்களைப் பார்க்க முடிந்தது. எல்லோருக்கும் முன்னால் சக்தி ஸ்வரூபமாக நின்றிருந்த ஒருவர் தலைக்கு மேல் நாகமும் தெரிந்தது. அவர் பதஞ்சலி மகரிஷியோ என்று ஹரிராம் வியந்தார். ஈஸ்வர் அந்த சித்தர்களை வணக்கத்துடன் பார்த்தான். கணபதி அவர்களை வேடிக்கை பார்த்தான்... “என்ன இது இத்தனை பேர் வந்திருக்காங்க!

ஜொலித்துக் கொண்டிருந்த விசேஷ மானஸ லிங்கம் வளர்ந்து பெரிதாக ஆரம்பித்தது.  எல்லோரும் பிரமிப்புடன் அதைப் பார்த்தார்கள்.  தியான மண்டபத்தின் மேல் சுவர் வரை சென்று முட்டிக் கொண்டு நின்ற விசேஷ மானஸ லிங்கம் அந்தக் கூரையையும் ஊடுருவிக் கொண்டு வளர்ந்ததாகத் தோன்றியது.  பார்த்தசாரதியும், அலெக்ஸியும், கியோமியும், ஜான்சனும் வெளியே ஓடிப் போய் பார்த்தார்கள். விசேஷ மானஸ லிங்கத்தின் மேல்பகுதி கூரையைத் தாண்டியும் வளர்ந்து கொண்டிருந்தது. அலெக்ஸிக்கு அவர் பார்த்த பழைய காட்சி நினைவுக்கு வந்தது. அன்று கண்டது கற்பனை அல்ல, நிஜம் தானோ? அப்படியானால் எங்கே சமுத்திரம்?

11.45க்கு வானையே தொட்டு நின்ற விசேஷ மானஸ லிங்கம் 11.46 க்கு நெருப்பு ஜூவாலையாக ஜொலித்து விட்டு மறைந்தே போனது. விசேஷ மானஸ லிங்கத்தின் அணுக்கள் பிரிந்து காற்றோடு கலந்து மறைந்தது போல் தோன்றியது. அக்னி நேத்ர சித்தரைத் தவிர மற்ற சித்தர்களும் மறைந்து போனார்கள். அவர்கள் உருவாக்கி பூஜித்த விசேஷ மானஸ லிங்கத்தை அவர்களே எடுத்துக் கொண்டு போனது போல இருந்தது. இப்போது ஹரிராம், ஈஸ்வர், கணபதி ஆகியோரின் கைகள் வெட்ட வெளியைத் தொட்டபடி இருந்தன. இப்போதும் அவர்கள் காற்றில் மிதப்பது போல் தான் உணர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் திகைப்போடு அக்னி நேத்ர சித்தரைப் பார்த்தார்கள்.


அக்னி நேத்ர சித்தர் புன்னகையுடன் சொன்னார். “இந்த விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கினதும், ஆயிரம் வருஷங்களுக்கும் மேலாய் சக்திகளை எல்லாம் ஆவாகனம் செய்து பூஜை செய்து புனிதம் குறையாமல் பாதுகாத்தும் வந்தது இந்தக் காலத்திற்காகத் தான். உலகம் எல்லா விதங்களிலும் சீரழிவின் அடிமட்டத்தில் போய் விடும் போது அதை அழிவில் இருந்து காப்பாற்றி மீட்கும் ஆத்மபலத்தை தகுதி வாய்ந்த மனிதர்களுக்குத் தரத்தான்.  ஆனால் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை விட அதோட சக்திகளோட பிரம்மாண்டம் தான் பலரைக் கவர்ந்தது. அது இருக்கும் இடம் தெரிய ஆரம்பித்தவுடன் அதை தங்கள் வசமாக்க எந்தக் கீழ்மட்டத்திற்கும் இறங்க சிலர் தயாராகி விட்டார்கள். இனியும் அது தனி வடிவத்தோடு இருந்தால் அதுவே பேரழிவைக் கொண்டு வந்து விடும். எங்கள் நோக்கத்திற்கு எதிர்மாறான விளைவை நாங்களே பார்க்க வேண்டி வரும். அதனால் விசேஷ மானஸ லிங்கத்தோட உருவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் சாரத்தை தகுதி வாய்ந்த ஒவ்வொரு மனிதன் மனதிலும் தங்குகிற மாதிரி விட்டுப் போகிறோம். விசேஷ மானஸ லிங்கம் எங்கேயும் போய் விடவில்லை... உங்கள் மனதிலேயே தான் இருக்கிறது பாருங்கள்

ஹரிராமும், கணபதியும், ஈஸ்வரும் அவர் சொன்ன பிறகு தான் தங்கள் மனதிலேயே விசேஷ  மானஸ லிங்கம் ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார்கள். ஹரிராமும், ஈஸ்வரும் பிரமிப்புடன் பார்க்க, கணபதி மட்டும் செல்லமாக மனதில் அதனுடன் பேசினான். “நீ என்னை விட்டுப் போயிடலையா.. என் மனசுக்குள்ளே தான் இருக்கியா, சமத்து..

தியான மண்டப வாசலில் எல்லோருக்கும் பின்னால் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலை முதிய துறவியும் தன் மனதில் விசேஷ மானஸ லிங்கம் ஜொலித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். எல்லா நேரங்களிலும் விசேஷ மானஸ லிங்கத்தோடு உரையாடும் அவரை வார்த்தைகளுக்கெட்டாத ஆனந்தம் ஆட்கொண்டது. கண்களில் பேரருவியாய் நீர் வழிய அவர் மற்றவர்கள் பார்த்து விசாரிக்கும் முன் அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார்...  

அக்னிநேத்ர சித்தர் தொடர்ந்தார். “இனி இந்த விசேஷ மானஸ லிங்கத்தை யாரும் திருட முடியாது. மறக்கலாம். மறுக்கலாம். ஆனால் இழக்க முடியாது இனி இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கு வெளியே இருந்து ஆபத்து இல்லை. என்ன ஆபத்தானாலும் அது இனி உங்களுக்கு உள்ளே இருந்து தான் வர முடியும். மனிதன் தனக்கு வெளியே உள்ளதைத் தேடி பாடுபட்டு அடைவதில் காட்டும் வேகம் தனக்கு உள்ளே இருப்பதைக் கண்டுபிடித்து பயன்படுத்துவதில் காட்டுவதில்லை. தன்னிடம் இருக்கிறது என்பதாலேயே ஒன்றின் மதிப்பை குறைத்து மதிப்பிடும் மனிதனுக்கு அதுவே எல்லோரிடமும் இருக்கிறது என்று தெரிந்தாலோ மதிப்பும் போய் அதில் சுவாரசியமும் போய் விடலாம். அந்த அலட்சியம் தான் அவனுக்கு உண்மையான ஆபத்தாக இருக்க முடியும்...

அக்னி நேத்ர சித்தர் இவர்கள் மூலமாக மனிதகுலத்திற்கே செய்தி விடுப்பதாக பார்த்தசாரதிக்குத் தோன்றியது. அக்னி நேத்ர சித்தர் அந்த மூவரையும் ஊடுருவிப் பார்த்தபடி அந்த செய்யுள் வரிகளைக் கணீர் குரலில் பாடினார். 
தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்
மனிதனுக்கு உள்ளேயே இருந்தாலும் இந்த விசேஷ மானஸ லிங்கம் சுலபமாய் அவனுக்கு பயன்படுத்தக் கிடைத்து விடாது. தூய்மையான மனதோடும், அறிவோடும் சேர்ந்து முயற்சி செய்து உண்மையான ஞானம் பெற்ற பிறகு தான் அது அவனுக்குப் பயன்படுத்தக் கிடைக்கும். அது சாதாரண முயற்சிகளிலோ, அரைகுறை ஆர்வத்திலோ கிடைத்து விடாது. கிடைத்து விட்டால் அதற்குப் பின் அது அற்புதங்களை நிகழ்த்தும். மனிதனை சிகரங்களுக்கு உயர்த்தும். அப்போது தான் அவன் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். மனம் மாசுபட்டால் அறிவும் தீமைக்குத் தான் உதவும். அந்த நேரத்தில் அவன் ஞானமாய் நினைப்பது கூட விஷமாய் அழிவுக்குத் தான் பயன்படும்.

கடைசியாக அக்னி நேத்ர சித்தர் ஒரு எச்சரிக்கை விடுத்தார். “காலம் இனியும் மோசமாகும். மனிதம் இனியும் மங்கிப் போகும். தீமை தான் ஜெயிக்கிற மாதிரி இருக்கும். அதுவே ஆட்சி செய்யும். நன்மை பலவீனமாக நினைக்கப்படும் அதற்கு மதிப்பு மறுக்கப்படும். கேளிக்கைகள் பெருகும். மகிழ்ச்சிகள் குறையும். உண்மையான அன்பு அபூர்வமாகும். வெறுப்போ வளர்ந்து கொண்டே போகும். இது இந்த கலிகாலத்தின் லட்சணங்கள். இதை மாற்ற அவதாரங்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே அவதாரமாக மாறுங்கள். அதற்கு உதவ நாங்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போகும் இந்த விசேஷ மானஸ லிங்கம் உங்களுக்குள் காத்திருக்கும்...!

சொல்லி முடித்த அக்னி நேத்ர சித்தர் மறைந்து போனார். அந்த வார்த்தைகள் தியான மண்டபத்திற்குள் இருந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாய் பதிந்தன. மொழி புரியாதவர்களுக்குக் கூட அக்னிநேத்ர சித்தர் அர்த்தத்தை மனதில் பதிய வைத்து விட்டுப் போனார். அவர் சொல்லி விட்டுப் போன செய்தியை மற்றவர்களுக்கு வார்த்தையாலும் வாழ்க்கையாலும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அனைவருமே உணர்ந்தார்கள்.  அத்தனை பேரும் உள்முகமாக நமஸ்கரித்தார்கள். தியான மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய ஓங்கார ஒலி அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது.

*******

கடைசி தகவல்கள்
·         * அந்தக் கார்த்திகை தீப பௌர்ணமி நாளில் நள்ளிரவு வானில் பெரும் ஜோதியைப் பார்த்ததாகச் சிலரும், எரிநட்சத்திரம் பார்த்ததாகச் சிலரும், அடுத்த கிரகத்திலிருந்து வந்த விண்கலத்தைப் பார்த்ததாகச் சிலரும் சொல்ல மறுநாள் செய்தித்தாள்களில் அந்த செய்திகளே நிறைந்திருந்தன. பார்த்தது என்னவாக இருந்திருக்கும் என்ற விவாதங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு நாள் முழுவதும் தொடர்ந்தது.  பலரும் தங்களுக்குப் பிடித்த முடிவுகளுக்கு வந்து அதுவே சரி என்று வாதித்து மகிழ்ந்தனர்.
 
·         * பார்த்தசாரதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த வழக்கை மூடி விட்டார். இந்த வழக்கில் முக்கிய பாத்திரமான விசேஷ மானஸ லிங்கம் மறைந்து போனது உள்பட பல விஷயங்களை அவரால் சட்டத்திற்கு விளக்க முடியாமல் போனது தான் அதற்கு முக்கிய காரணம். ஒரு சாதாரண வக்கீல் உடைத்து விடும்படியான பலவீனமான வழக்கைத் தொடர்ந்து கோர்ட்டில் கோமாளியாக அவர் விரும்பவில்லை. 

·         * குருஜி எங்கே போனார், என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவரது தீவிர பக்தர்கள் அவர் எங்காவது ஜீவசமாதி அடைந்திருப்பார் என்று நம்பினார்கள். அவர் இப்படி திடீர் என்று மறைந்து போனது ஆன்மிக உலகிற்குப் பேரிழப்பு என்று எல்லோரும் நினைத்தார்கள்.

·         * பார்த்தசாரதி வழக்கு தொடராததால் பசுபதி மரணத்தில் மகேஷ், தென்னரசு இருவரின் பங்கு வெளிவரவில்லை. அதனால் ஈஸ்வரின் குடும்ப நிம்மதி நிலைத்தது. ஆனால் ஆனந்தவல்லி மட்டும் தன் மகனைக் கொன்ற கூட்டத்தைக் கண்டுபிடித்தாகி விட்டதா என்று மறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். ஈஸ்வருக்கு அவள் அப்படிக் கேட்கும் போதெல்லாம் மனம் வலிக்கும்.

 * ஈஸ்வரின் திருமணத்திற்கு வந்த பார்த்தசாரதி அவள் கண்ணில் படாமல் இருக்க மறைந்து ஒதுங்கி இருக்க வேண்டியதாயிற்று. அன்று அதில் அவருக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால் அந்தத் திருமணத்தின் போது அவள் ஈஸ்வர் மீது வைத்த கண்களை அதிகம் திருப்பவில்லை. அவள் கணவர் நினைவும், அவள் திருமண நாள் நினைவும் வந்து அவள் அந்த நாட்களை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.


·         * கணபதிக்கு ஊருக்குப் போனவுடன் பிள்ளையாரிடம் சொல்ல நிறைய இருந்தது. சீடை சபலம் உட்பட ஒன்று விடாமல் சொன்னவன் கடைசியில் அக்னி நேத்ர சித்தர் சொன்ன தத்துவங்களை மட்டும் அப்படியே சொல்ல முடியாமல் தவித்து பிறகு சுருக்கமாய் சொன்னான். “அவரு எல்லாரையும் நல்லவங்களா இருங்க, நல்லது செய்யுங்க, சிவன் உங்களுக்கு வழிகாட்டுவார்னு சொன்னாரு... அவர் கிட்ட அந்த அபூர்வமான பூ கிடைச்சா எங்க பிள்ளையாருக்கும் குடுங்கன்னு கேட்க நினைச்சேன். ஆனா கேட்கறதுக்குள்ளே மறைஞ்சுட்டாரு.... எப்பவாவது மறுபடியும் வருவாருன்னு நினைக்கிறேன். வந்தால் அந்தப்பூ வாங்கி உனக்கு மாலை கட்டிப் போடறேன் சரியா?

குருஜி தன் சொத்துக்களை அவன் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்று தெரிய வந்த போது கணபதி அழுதான். ‘அவருக்குத் தான் என் மேல் எவ்வளவு பாசம்’.  அவன் குருஜி திரும்ப வராமல் போகவே அவர் புகைப்படத்தை தன் வீட்டில் மாட்டி தினமும் வணங்கினான்.


·         * ஜான்சனுக்கு பண ரீதியாகப் பலன்கள் நினைத்த அளவு கிடைக்கவில்லை என்றாலும் மன ரீதியாக நிறையவே பாடங்கள் கிடைத்தன. அந்தத் திருப்தியில் அவர் தன் நாடு திரும்பினார். கியோமி ஜென் பௌத்தத்தின் ஆத்மாவையே இந்தியாவில் பார்த்து விட்டதாக குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் சொன்னாள். ரஷ்யாவிற்குத் திரும்பிய போது அலெக்ஸியும் ஆன்மிக மார்க்கத்திற்கு மாறி இருந்தார்.

·         * மகேஷிடம் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த அவன், தாயின் நச்சரிப்பு தாங்காமல் கடைசியில் ஈஸ்வர் விஷாலி இருவரும் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சம்மதித்தான். பரமேஸ்வரனுக்குத் தன் பேரன்கள் மிக நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.


·        *  ஈஸ்வர் – விஷாலி வாழ்க்கைப் பயணம் இன்பமயமாக இருந்தது. சீக்கிரமாய் குழந்தை பெற்றுத் தரச் சொல்லி ஆனந்தவல்லி செய்து கொண்டிருக்கும் நச்சரிப்பைத் தவிர அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. 

·         * பாபுஜி ஹரிராமின் மந்திரக்கட்டில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மன உளைச்சலில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர் மும்பையின் மிகப் பெரிய மனநல மருத்துவரிடம் ரகசியமாய் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது வெளிநாட்டு நண்பர்களும் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்து இப்போது குணமாகி வருகின்றனர்.

·        *  ஹரிராம் காஷ்மீரத்திற்கே திரும்பிப்போனார். ஈஸ்வரும் அவரும் முடிந்த வரை நன்மைகளை உலகத்தில் பரப்புவது என்று முடிவெடுத்திருந்தார்கள். நல்ல விதைகளைத் தூவி வைப்போம். அதில் சிலதாவது விருட்சமாகும். அந்த விருட்சங்கள் நிறைய விதைகளை உருவாக்கும்.... அந்த விதைகள் பல விருட்சங்களை உருவாக்கும்... இப்படித் தான் நன்மைகளை உலகில் பெருக்கியாக வேண்டும் என்று நம்பினார்கள். அதற்கு விசேஷ மானஸ லிங்கம் தங்களுக்கு உதவும் என்று நம்பினார்கள்.

அதற்கு ஆரம்பமாக “மனிதனுக்குள் மகாசக்திகள்என்ற நீண்ட உளவியல்-ஆழ்மனசக்தி ஆராய்ச்சிக் கட்டுரையை ஈஸ்வர் வெளியிட்டான். மனிதனின் மனதில் அனைத்தையும் உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் முடிந்த மகாசக்திகள் உறைந்திருப்பதாக எழுதிய அவன் அவை எப்படி வேலை செய்கின்றன என்றும் விவரித்திருந்தான். அது மனோதத்துவ அறிஞர்களால் “மனோதத்துவ விஞ்ஞானத்தின் மைல்கல்என்று சிலாகிக்கப் பட்டது. உளவியல் துறைக்கும் நோபல் பரிசு இருக்குமானால் கண்டிப்பாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஈஸ்வருக்கு வாங்கித் தந்திருக்கும் என்று அவர்கள் கருதினார்கள். பல தத்துவஞானிகள் அதை உயர்ந்த தத்துவ ஞானத்தின் மனோ தத்துவப் பிரதிபலிப்பு என்றார்கள். உலகெங்கிலும் பெரும் வரவேற்பு பெற்ற அந்த ஆராய்ச்சிக் கட்டுரை சிந்திக்கப்படவும், பேசப்படவும் ஆரம்பித்தது. ஒரு ஞானப் பேரலை ஆரம்பிக்கப்பட்டது....  


·      *   பாபுஜியின் தந்தை மகனுக்குப் புத்தி சொல்லி கட்டாயப்படுத்தி அந்த தியான மண்டபத்தில் விசேஷ மானஸ லிங்கம் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதைக் கோயிலாக மாற்றி விட்டார்.  அங்கு ஒவ்வொரு கார்த்திகை தீப பௌர்ணமி நாளிலும் விசேஷ பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். ஹரிராம், ஈஸ்வர், கணபதி மூவரும் அந்த ஒரு நாளில் கண்டிப்பாக வந்து பூஜைகளில் பங்கெடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தனித்தனியாக வேண்டிக் கொண்டார். அவர்களும் சம்மதித்தார்கள். விசேஷ மானஸ லிங்கம் தன் தனியுருவை விட்டு, பல மகாசித்தர்களின் முன்னிலையில், மனிதனின் மனதில் பிரதிஷ்டையான அந்த மகத்தான நாளில் சக்தி வாய்ந்த அலைகள் அங்கு உலவுவதைப் பலர் உணர்ந்தார்கள். அதை உணர முடிந்தவர்களுக்கு தங்கள் மனதில் உள்ள விசேஷ மானஸ லிங்கத்தையும் அடையாளம் காண முடிந்தது.

அப்படி உணர முடிந்தவர்களுக்கு அதனுடன் சேர்ந்தே அக்னிநேத்ர சித்தர் விடுத்த எச்சரிக்கையையும் நம்பிக்கையையும் கூட உணர முடிந்தது. “காலம் இனியும் மோசமாகும். மனிதம் இனியும் மங்கிப் போகும். தீமை தான் ஜெயிக்கிற மாதிரி இருக்கும். அதுவே ஆட்சி செய்யும். நன்மை பலவீனமாக நினைக்கப்படும் அதற்கு மதிப்பு மறுக்கப்படும். கேளிக்கைகள் பெருகும். மகிழ்ச்சிகள் குறையும். உண்மையான அன்பு அபூர்வமாகும். வெறுப்போ வளர்ந்து கொண்டே போகும். இது இந்த கலிகாலத்தின் லட்சணங்கள். இதை மாற்ற அவதாரங்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே அவதாரமாக மாறுங்கள். அதற்கு உதவ நாங்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போகும் இந்த விசேஷ மானஸ லிங்கம் உங்களுக்குள் காத்திருக்கும்...!

·         பல புதிய பாதைகளும், விழிப்புணர்வுகளும் அங்கு உதயமாக ஆரம்பித்தன...!



(முற்றும்)

ஒவ்வொரு வாரமும் காத்திருந்து இந்த நாவலைப் படித்துப் பாராட்டி ஆதரவு தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் பல. பரம(ன்) இரகசியம் நாவல் அச்சில் வெளி வந்தும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2016 ஜூன் மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியாகி விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்த நாவலை புத்தக வடிவில் கையில் வைத்து படித்து மகிழ விரும்புவோர் 9600123146 எண்ணில் அல்லது blakholemedia@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

என்.கணேசன்

85 comments:

  1. மிக்க நன்றி சார், அருமையான கதை, சிறப்பான முடிவு, நன்றிகள் கோடி (சரி சார் அடுத்த கதை ரெடியா? எப்போது ஆரம்பிக்கிறீர்கள்? ஏனென்றல் இனி வியாழன் நாங்கள் என்ன செய்வது?) செந்தில்தாசன்

    ReplyDelete
  2. Great Ganesan sir... Such a splendid novel... Won't even call it as a novel ...it's a life lesson....keep up ur good work and publish more like this one...

    ReplyDelete
  3. மனிதமனதின் மகாசக்திகளை
    உன்னதமாக உலகிற்கிற்கு
    உணர்த்திய அற்புதமான கதைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. interesting story...

    ReplyDelete
  5. Migavum Nandri ......

    cheran s

    ReplyDelete
  6. அற்புதம். இவ்வளவு வாரங்‌கள் போனதே தெரியவில்லை. அருமையான தொடர். நன்றி.

    ReplyDelete
  7. i am reading your blog for past few years and this the best ever. All the very best.
    Wish you will enganeshan will be like Amish Tripathi soon.

    VS Balajee

    ReplyDelete
  8. Thank you for offering wonderful novel sir...i never forget this store in my lifetime..may god bless for your success and happiness sir..

    ReplyDelete
  9. Hearty thanks for your efforts. Very good message for the humankind. Let us pray for good future for all

    ReplyDelete
  10. நாங்களும் பிரமிப்பு நீங்காமல் ஒவ்வொரு வாரமும் இதனை மாலை ஆறு மணிக்கு ஆர்வமுடன் படிக்கின்றோம். நீங்கள் புஸ்தக வடிவிலே வந்து விட்டது என்று சொன்னாலும் என் வீட்டுக்கு மிக அருகேயே வெளியீட்டாளர் இருந்தாலும் இந்த ஆர்வம் என்னை காத்திருந்து படிக்க வைத்தது. மிக மிக நேர்த்தியான நடை, சரியான சங்கிலி தொடர், முறையான கண்டிநியூட்டி, மிக கடினாமான கரு ஆனால் மிக எளிய முறையில் விளக்கியது..... இன்னும் என்னென்னவோ சொல்ல ஆசை.. இருப்பினும் மிக ரத்தின சுருக்கமாக சொன்னால் அந்த சிவணின் சக்தியே உங்களுக்குள் உட்கார்ந்து எழுத வைததுவோ என்று வியக்கிறேன். இன்னொரு முறை இந்த தொடரை முதலிலிருந்து புஸ்தகத்தில் ஒரே மூச்சாக படிக்கவிருக்கிறேன்.

    வாழ்க திரு கணேசன் அவர்களே, நீங்களும் உங்கள் குடும்பமும் சுற்றத்தாரும் உறவநிர்களும் நீடுடி வாழவும் சகல செல்வங்களுடனும் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழவும் எல்லாம் வல்ல ஈசன், என்னாட்டவர்க்கும் இறைவனை, மதுரையம்பதியை நடராசனை மனமுருக பிரார்த்திக்கும் உங்கள் ரமணன்

    ReplyDelete
  11. கதையும்,ஆன்மீகமும்,இன்றைய காலகட்டமும்... நமக்குள் ஒளிந்த இறைவனும்..... அருமை. விதையாய் நாம் இருக்க ஆசிர்வதிக்கப் படுவோம். ஓம் நம சிவாய...!!!

    ReplyDelete
  12. அடுத்த வாரம் அடுத்த நாவல் ஆரம்பம் தானே...நண்பரே..

    ReplyDelete
  13. மிக அருமயான நடை. மிக நேர்த்தியான எழுத்துக்கள், முத்தும் ரத்தினமும் பவழமும் கோர்த்து செம்பொன்னில் மாலை செய்தது போல் உணர்கிறேன். ஒவ்வொரு வாரமும் மாலை ஐந்து மணி முதலே பார்க்க தொடங்கிவிடுவேன். நீங்கள் இந்த தொடரை புஸ்தக வடிவிலே பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னாலும், வெளியீட்டாளர் அருகிலேயே இருந்ததாலும், காத்திருந்து படிப்பதில் ஒரு சுகம் இருந்தது. மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சாக புஸ்தகம் வாங்கி படிக்க ஆசை. மிக கடுமையான கரு என்றாலும் மிக எளிமையான முறையில் விளக்கினீர். உலகின் பல செய்திகளை தொட்டு வந்தீர்கள். மிக அருமை மிக அருமை.

    உயர் திரு கணேசன் அவர்களே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சுற்றமும், உறவினர்களும் நீடுடி வாழ, சகல செல்வங்களுடனும், ஆயுள் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல ஈசனை, என்னாட்டவர்க்கும் இறைவனாம் அந்த நடேசனை, மதுரயம்பதியை, மகேசனை, மனமுருக மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன். ரமணன் சேஷாத்ரி

    ReplyDelete
  14. அருமையா கதை சார் .....கதையின் முடிவு எப்படி இருக்கும் புனித மானஸ லிங்கம் என்ன வாகும் இப்படி பல சிந்தனைகள் இருந்தது சார்.....காலத்தை காட்டி நீங்க முடித்த விதம் அருமை சார்......படித்த ஒவ்வொருவரின் மணதிலும் இன்னும் பல காலம் லிங்கம் ஜொலித்து கொண்டு தான் இருக்கும் சார்......நன்றி சார்.....அடுத்த படைப்புக்கு காத்திருக்கேன் சார்

    ReplyDelete
  15. அருமை! நன்றி!!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  18. Excellent story. THANK YOU so much for giving us this excellent story and for all your time and effort!

    ReplyDelete
  19. நல்ல கதை, நல்ல கருத்து. வாழ்த்துகள்!!! பொழுதைக்கழிக்காமல் போதனை செய்தமைக்கு நன்றி!!!!!

    ReplyDelete
  20. அருமையான கதை, ஆழமான மற்றும் நேர்த்தியான கருத்து. வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  21. Sir, Arumaiyana mudivu sir. itha epdi solrathunu theriyala. Kathaiya padikum bothu Manasa thiku thiku nu irunthuchu sir.Innum kooda antha baathippula irunthu velila vara mudiyala. Yetho nangale antha place la avanga kooda irunthu paatha mathiri iruku sir. Romba romba Nandri sir.ipdi oru vaazhkai paadattha kodutthathuku. Ini eppothum manathodu Manasa lingam irukum sir. Hats off to you.

    ReplyDelete
  22. Parama(n) Ragasiyam is one of the best novels I have ever read Sir. Real great reading experience. I purchased your book and read many portions again and again. Each time the feeling is great.

    ReplyDelete
  23. நன்றி சார்.இந்த கதை முடிவுக்கு வந்து விட்டதா என்றே தான் எண்ண தோன்றுகிறது .
    அற்புதமான கதை .
    நிறைய சொல்ல வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன் .

    வியாழன் ,மாலை எப்போது வரும் என காத்திருந்த நாள்கள் நினைவுக்கு வரும் -உங்களின் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் .
    புத்தகத்தை வாங்கி வைத்து கொள்ளனும் .
    நன்றி

    ReplyDelete
  24. End of your novel = Start of a new, determined Life of us!!!
    Thank you so much!

    ReplyDelete
  25. No Words ji... Thank you, thank you very much.... i am feeling blessed to read this Naval (and Amanushyan too).

    தொடரட்டும் உங்கள் பணி பரமனின் கருவியாக
    கொட்டட்டும் ஞானதாகத்தை தீர்க்கும் அருவியாக
    சேர்கட்டும் நாளங்களில் குருதியாக
    மாற்றட்டும் உடலின் பகுதியாக
    ஈர்க்கட்டும் மெய் ஞானத்தை மிகுதியாக
    ஆக்கட்டும் நல்நம்பிக்கைகளை உறுதியாக
    உருவாக்கட்டும் இறை உணர்வு பெற தகுதியாக
    இணைக்கட்டும் மெய்ஞான ஒளியில் இறுதியாக.

    அன்புடன்,
    சரவணக்குமார்.பா
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  26. Excellent Sir. I have been reading your novels for the past 5 years in Nilacharal also in your blog. Your writing style is excellent.

    ReplyDelete
  27. I have tears in my eyes after finish reading this story. Don't know why.

    ReplyDelete
  28. Congratulations and Thank you!!

    ReplyDelete
  29. I feel now that manasa lingam has entered our hearts ...thank you sir...

    ReplyDelete
  30. I feel that whoever have read this novel are blessed with the Divine MANASA LINGAM...Om Namasivaya...God Bless our Mr.Ganesan..

    ReplyDelete
  31. கோடி நன்றிகள்!!!

    ReplyDelete
  32. இதை கதையாக பார்க்க மனது இடம் தரவில்லை ஐயா, மதம் கடந்த ஆன்மீகத்தை மனதுக்குள் பூக்க வைத்த ஆச்சரியம் இது. எத்தனை பெயரில் அழைத்தாலும் எத்தனை வழிகளில் முயன்றாலும் எத்தனை காலம் தேடினாலும் பரம்பொருள் ஒன்றுதான் அந்த தேடலின் ஒரு பாகம் விளங்கினாற் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. அருமையான தொடர். 90 அத்தியாயங்களையும் படித்து முடித்த பிறகும், முற்றும் என்பதைப்பார்த்த பிறகும், இந்த தொடர் இன்னும் வரும் என்றே உள்மனது எதிர்பார்க்கிறது.

    ReplyDelete
  34. அருணாச்சலா சிவோம்....!!!

    பரம(ன்) ரகசியத்துடன் பயணித்ததில் பெரும் மகிழ்ச்சி....!!!

    //டைட்டானிக் கப்பல் பனிப்பாறைகளில் மோதிக் கடலுக்குள் மூழ்கியது என்பது அனனவருக்கும் தெரிந்த விஷியமே .. ஆனால் அது கடலின் எந்த இடத்தில் எவ்வுளவு ஆழத்தில் கிடக்கிறது...., என்பதை அறிய முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திண்டாடினார்கள்,

    அந்த நிலையில்...ஜேமஸ் கிரிச்சட்டன் என்ற விஞ்ஞானக் கதை எழுத்தாளர் ஒரு நாவலை எழுதினார் . அதில் கப்பல் ஒன்று கடலில் மூழ்குவதாகச் சம்பவம் அந்த நாவலில் வருகிறது..

    அந்தக் கப்பல் அட்லாண்டிக் கடலில் இந்த இடத்தில் இருக்கிறது என்று படம் வரைந்து காட்டினார் .,

    அந்த நாவலாசிரியர் தனது கற்பனையில் குறிப்பிட்டிருந்த அதே இடத்தில் தான் டைட்டானிக் கப்பலும் மூழ்கி இருப்பதை அறிந்த போது அனைவரும் வாயடைத்துப் போனார்கள்...//

    இது போலவே நம் பரம(ன்) ரகசியமும்....!!!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!! கனேசன் சார்...

    கடைசியில் குருஜி..., தம் குரு அக்னிநேத்திர சித்தரை அழைக்கும் காட்சி... வர்ணிக்க வார்த்தைகளில்லை.,

    தேவார திருவாசக பாட்களில் இயற்க்கையாகவே ., வேத சக்தியும் ., அதர்வண பிரகாசமும் .., பிராண சக்தியும் மிளிர்வது... போல் தங்கள் எழுத்திற்க்கும். இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்..,

    ReplyDelete
  35. ஜாய் தாமஸ்March 28, 2014 at 5:57 AM

    இப்படி ஒரு அற்புத நாவலை இது வரை படித்தது இல்லை. கண்டிப்பாக இந்த நாவலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  36. சுந்தர்March 28, 2014 at 6:08 AM

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை கணேசன். அற்புதம். பிரம்மாண்டம். கோடி நன்றிகள் உங்களுக்கு. இனி வரும் வியாழக்கிழமைகளுக்கு ஒரு வழி சொல்லுங்க.

    ReplyDelete
  37. 90 weeks, so awesome. Thanks

    ReplyDelete
  38. Excellent novel, really you should be given an award.

    ReplyDelete
  39. Excellent.. No word to explain.....

    ReplyDelete
  40. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை கணேசன். அற்புதம்.

    ReplyDelete
  41. nandri solla varthaigal illai . entha novel enkaluku oru pokisam sir. sarguruve saranam.

    ReplyDelete
  42. மனதில் எவ்வளவு சலனங்கள், கஷ்டங்கள் இருப்பினும் இத்தொடரை படிக்கும் அந்த நேரம் தில்லைப்பெருமானே எம்மை ஆட்கொண்டதுபோல் மனது பேரமைதியுடன் தெளிந்த நீரோடையாக அந்த நாள் முழுவதும் இருக்கும். இத்தொடரைப்படிப்பதே ஒரு தியானம் போன்று அழகான அனுபவம். இந்த உணர்வு நிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  43. ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாத எனக்கு, இந்த கதையின் அடிநாதமே அதுவாக இருந்தபோதும், ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஆர்வமாக படிக்க வைத்ததில் இருக்கிறது உங்கள் எழுத்தின் பரம ரகசியம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. மிக அருமையான நாவலை படைத்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை.

    வாழ்க வையகம்.... வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  45. nalla kathai. ella viyalanum maalai ethiparkka vaiththa kathai. nalla mudivu.
    naan kadantha oru varudamaga ungal navelgal padithullen (nilacharal), amanusyan novel very interesting.
    parama rasiyam manasa lingam engal idayangalil. thank you very much sir.

    ReplyDelete
  46. விசேஷ மானஸ லிங்கத்தோட உருவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் சாரத்தை தகுதி வாய்ந்த ஒவ்வொரு மனிதன் மனதிலும் தங்குகிற மாதிரி விட்டுப் போகிறோம். விசேஷ மானஸ லிங்கம் எங்கேயும் போய் விடவில்லை... உங்கள் மனதிலேயே தான் இருக்கிறது பாருங்கள்”/

    அவர்களோடு அந்த சாரமும் மறையாமல் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து பரப்ப ஆவன செய்யவேண்டும்..!

    ReplyDelete
  47. திரு கணேசன் அவர்களே
    சிவாக்னியில் எம்மை மூழ்க வைத்து விட்டீர்கள். மிகவும் அருமையான தொடர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சிவனருள் என்றும் உண்டு. நன்றி.
    சாந்தி

    ReplyDelete
  48. Very nice story with good information. You are one of the BEST !

    ReplyDelete
  49. விஷ்ணுMarch 28, 2014 at 6:54 PM

    இது வரை இப்படி ஒரு கதைக்களத்துடன் தமிழில் நெடும் நாவல் வந்ததில்லை. இந்த நாவலின் நாயகன் சிவலிங்கம் ஆனாலும் முஸ்லீம், கிறிஸ்துவ வாசகர்கள் உட்பட இங்கு பாராட்டி எழுதி இருப்பதை வாசித்த போது புல்லரித்து விட்டது கணேசன் சார். இதை விட பெரிய விருது உங்களுக்கு வேறு வேண்டுமா? வாழ்த்துகிறேன். இனியும் பல எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  50. எதிர்பார்த்த முடிவு. ஆகையால், ஏனைய அத்தியாயங்களைப் போல் இறுதி அத்தியாயத்தில் சுவாரசியம் சற்றுக் குறைவாயிருப்பதாய் எனக்குப்படுகிறது. மற்றம்படிக்கு இப்படியானவொரு வாசிப்பனுபவத்தை வேறெந்த நாவலும் எனக்குள் ஏற்படத்திவிடவில்லை என்பதுதான் உண்மை. பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete
  51. வரதராஜன்March 29, 2014 at 8:09 AM

    இந்த நாவலை கதை என்று நினைக்க முடியவில்லை. இங்கே எங்கேயோ நடந்தது போல கண் முன் காட்டி இருக்கிறீர்கள். நாவலை வாங்கிய பின் சில இடங்களை திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சலிக்கவில்லை. நன்றி கணேசன்.

    ReplyDelete
  52. அற்புதமான கதை . மனதை விட்டு அகல நாட்கள் பல ஆகும். நன்றி.
    M.Umashankar

    ReplyDelete
  53. சார், இந்த கதைக்கு நீங்கள் முதலில் யோசித்த முடிவு என்ன என்பதை அறிய நான் மிகவும் ஆவலோடு இருக்கிறேன் சார், அடுத்த வாரம் அந்த முடிவினையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ... .

    ReplyDelete
  54. நன்றி,ஆசிரியரே உயர்ந்த ஆன்மிக கருத்துக்களை எளிய முறையில் புரியவைத்ததற்கு மேலும் சிவனை வேறு ஒரு கோணத்தில் எதிர்பார்க்கிறோம்.ஆசிரியரே
    நீங்கள் ?????????

    ReplyDelete
  55. அருமையான கதை நன்றி
    -Nesamani

    ReplyDelete
  56. Very nice ending. Thank you sir.

    ReplyDelete
  57. தொடர் முடிந்தாலும் கதை இன்னும் நெஞ்சில் அருமையாக பதிந்து விட்டது. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  58. Fantastic story Appazhukkatra anmigam Manasa lingathathudan vazhndhadhu migavum nandraga irundhadhu sir pl next thursday innoru novel arambinga sir Thera is no equivalent word to express our gratitude sir

    ReplyDelete
  59. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  60. ஏதோ ஒரு தேடலில் கிடைத்த லிங்க் இந்த பரம(ன்) ரகசியம். ஐந்து நாள்களில் தூக்கம் மறந்து படித்தேன். மிக அற்புதமான நாவல். நன்றி மற்றும் தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. Great Novel....Than you very much Mr.Ganeshan

    ReplyDelete
  62. insightful Ganesan

    ReplyDelete
  63. Extraordinary :) thanks a lot for giving such a wonderful novel. Manasa lingam stays in my heart too. hats off to you sir

    ReplyDelete
  64. Thanks........ thanks..... thanks.....

    ReplyDelete
  65. No words to explain the satisfaction after reading this novel. 2 days continuous reading gave me a perfect food. Feeling wonderful.

    ReplyDelete
  66. மிகச்சிறந்த நாவல். வாழ்த்துக்கள் கணேசன் அய்யா

    ReplyDelete
  67. Excellent. Feel so blessed as i feel lord has answered my inner questions. I got to read this suddenly when i was extremely confused. Now am clear. Thanks for this novel.

    ReplyDelete
  68. Excellent Novel. Let the Manasa Lingam stays in our heart and give us enough wisdom and knowledge in our day to day life. Thank you .

    ReplyDelete
  69. Dear Ganeshan,

    Excellent novel. I enjoyed reading this very much. Thank you very much.

    NadodiPaiyan

    ReplyDelete
  70. 1.Vaalkaikkum.. Anmmegathirkkum pothuvana... Thathuvangal ...arumai.....
    2.ithu Almana sakthi part 2 mathiri irukirathu...
    3.kudumbam... Paasam mum arumai...
    4.anmegathin sila azhamana karuthukkal ithil ullathu...

    Ithu enakku pala puthiya anmeega thakavalkalai thanthullathu...

    ReplyDelete
  71. Thank you Mr. Ganesan, Beautiful novel, sentiment Family Story.

    ReplyDelete
  72. awesome story .... i am not expect this climax
    congrats & thank u sir

    ReplyDelete
  73. Incrediable........விஷேஷ மானஸ லிங்கம் ஜோதிர்மயமாக ,கூடியிருந்த சித்தர்கள் பிண்ணனியில் விண்வெளியில் கலக்கும் நிகழ்வு ...படிக்கும் பொழுது மனது கனமாகி
    ......வைளிப்படுத்துவதறகு வார்த்தைகள் கிடைக்கவில்லை......

    ReplyDelete
  74. விவரிக்க முடியாத மன அமைதியை கொடுத்தது ஆன்மிகம் என்பதை தத்துவமாய் முடிவில்
    நிஜம் என்றே உணர மனது விழைகிறது
    "தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம்
    மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம் " மெய் சிலிர்க்கும் வரிகள் ஆன்மிக நம்பிக்கை கொடுக்கும் வரிகள் நன்றி மென்மேலும் இது போல் தத்துவமும் ஆன்மிகம் விஞ்ஞானம் கலந்த இறைதேடல்கள் கலந்த கதைகள் பல நீங்கள் கொடுக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன் படிக்கவும் காத்திருக்கிறேன்

    உங்கள் ஆழ்மனசக்தி படித்து வருகிறேன் மிகவும் எளிமையான தெளிவான உரைநடை உங்கள் தமிழ்நடை மிகவும் அழகு உங்கள்கதைகள் திரில்லர் கதையே படிக்காத என்னை போன்றோரையும் உங்கள் எழுத்து திறமை இழுத்துவிட்டது ஆன்மிகம் கலந்தும் கதையா திரில்லிங்கா கொண்டுபோகும் திறமை சூப்பர் ஒரு பாராவை கூட சில வரிகளைக்கூட ஸ்கிப் பண்ணமுடியாதபடி எல்லாமே ரிலேட்டடாக உள்ளமாதிரி எழுதறீங்க மனதை கொள்ளை கொண்டது ஹட்ஸ் ஒப் யூ

    ReplyDelete