சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 10, 2014

உலகப் பழமொழிகள்-1


 
1)      கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவளிக்கிறார். ஆனால் அதைக் கூட்டில் கொண்டு போய் வைப்பதில்லை.

2)      ஆண்டவன் நிச்சயம் கரை சேர்ப்பான். ஆனால் கடலில் புயலே வராதென்று அவன் உறுதி சொல்ல மாட்டான்.

3)      கடவுள் பாவங்களை மன்னிக்கிறார். இல்லா விட்டால் சொர்க்கம் காலியாகவே இருக்கும்.

4)      நடக்கலாம் என்று நம்பும் விஷயங்களைப் பார்த்து விதி சிரிக்கின்றது.

5)      இறைவன் எறும்பை அழிக்க நினைத்தால் அதற்கு சிறகுகளை அளிப்பான்.

6)      இதயமே சிறந்த உபதேசியார்; காலமே சிறந்த் ஆசிரியர்; உலகமே சிறந்த புத்தகம்; கடவுளே சிறந்த நண்பன்.

7)      புலியைப் படைத்ததற்காக இறைவன் மீது வருத்தம் வேண்டாம். அதற்கு சிறகுகள் அளிக்காததற்காக நன்றி கூறுங்கள்.

8)      நாய்களின் பிரார்த்தனை பலித்து விட்டால் வானத்திலிருந்து எலும்புகள் மழையாய் பொழியும்.

9)      மனிதர்களோடு சமாதானம் செய்து கொண்டு உன் பாவங்களோடு போராடு.

10)   பிறந்ததற்காக அழும் குழந்தை புத்திசாலி தான்.


தொகுப்பு: என்.கணேசன்  

8 comments:

  1. அனைத்தும் அருமை...
    பத்தாவது முத்தானது.

    ReplyDelete
  2. அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.
    1, 7 ம் மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை... முக்கியமாக சிறகுகள் அளித்ததும், அளிக்காததும்....!

    ReplyDelete
  4. ஆன்மீகரீதியான பழமொழிகள் மட்டும்தானா ?

    ReplyDelete
  5. எல்லாமே அருமை, எனக்கு மிகவும் பிடித்தது " நாய்களின் பிரார்த்தனை " எண் எட்டு. உங்களின் தொகுப்புக்கு என் நன்றி..

    ReplyDelete
  6. Hi Boss,
    Superrrrrrrrrrrrrrr,
    G.Ganesh,KSA.

    ReplyDelete