சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 28, 2013

அட ஆமாயில்ல! – 8



பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப் போல் தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் அவன் இவ்வுலகில் மனிதனைப் போல நடக்க மட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
-          டாக்டர் ராதாகிருஷ்ணன்


நீங்கள் எவ்வளவு புயல்களை சமாளித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டப் போவதில்லை. கப்பலைப் பத்திரமாக துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பதைத் தான் உலகம் அறிய விரும்புகிறது.
                -வில்லியம் மெக்ஃபி


கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது.
-          நார்மன் வின்செண்ட் பீல்


நீங்கள் புதிதாகத் தெரிந்து கொள்வதை என்று நிறுத்த ஆரம்பிக்கின்றீர்களோ அன்றே உங்கள் வயோதிக காலம் ஆரம்பித்து விடுகிறது.
                   -ஹெர்பர்ட் காஸன்


ஒரு உபதேசம் கேட்க ஆறு மைல் தூரம் செல்வது எளிது. ஆனால் வீடு திரும்பிய பின் அது பற்றி கால் மணி நேரம் சிந்திப்பது கஷ்டம்.
-          பிலிப் ஹென்றி


நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்கா விட்டாலும் இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கி விடும்.
-          ஹாஸ்லிட்


கண்ணியமான மனிதனே இல்லை என்று எவன் சொல்கிறானோ அவன் அயோக்கியன்.
-          பெர்க்லி


இருவர் விவாதம் செய்கையில் ஒருவருக்குக் கோபம் வருமானால் விவாதத்தைத் தொடராமல் நிறுத்துபவன் அறிவாளி.
                  -புளுடார்க்


ஒரு மனிதனிடம் யோக்கியதை எந்த அளவு அதிகமாயிருக்கிறதோ அந்த அளவு அவன் ஒரு ஞானி போல் நடிக்க மாட்டான்.
-          லவேட்டர்.


பணக்காரர்களே சந்தோஷத்தைக் காணாமல் பரிதாபமாக வாழ்கையில் ஒவ்வொருவனையும் பணக்காரனாக மாற்ற முயற்சிப்பதில் என்ன பயன்?
-          பெர்ட்ராண்டு ரஸ்ஸல்


தொகுப்பு: என்.கணேசன்  


6 comments:

  1. சுந்தர்January 28, 2013 at 8:17 PM

    நல்ல வித்தியாசமான தொகுப்பு. 1, 7, 10 பொன்மொழிகள் சூப்பர்.

    ReplyDelete
  2. தொகுப்பு அருமை...சிந்திக்க வைக்கும் வரிகள்..

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு...

    அருமை அண்ணா.

    ReplyDelete
  4. நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்கா விட்டாலும் இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கி விடும்.
    - ஹாஸ்லிட்

    Please explain this.

    ReplyDelete