என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, January 11, 2013

புதிய நூல்: ஆழ்மனதின் அற்புத சக்திகள்அன்பார்ந்த வாசகர்களுக்கு,


வணக்கம்.


ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடர் எழுதப்பட்ட காலத்திலும் சரி எழுதி முடித்து இரண்டாண்டுகள் முடிந்து விட்ட இக்காலத்திலும் சரி வாசகர்களிடம் பெற்ற வரவேற்பு மகத்தானது.

இந்தத் தொடரின் பிற்பகுதி அத்தியாயங்களை நான் ஆழ்மன நிலைக்குச் சென்றே எழுதி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அந்த நிலை அமையும் வரை எழுதாமல் அது வரும் வரை காத்திருந்திருக்கிறேன். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். முடிக்கையில் ஒரு ஆத்ம திருப்தியை உணர்ந்திருக்கிறேன்.


எழுதி முடித்து இரண்டாண்டுகள் கழிந்த பின்னும் பல வாசகர்கள் இதை அச்சு நூலாக வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்தார்கள். இணையப் பக்கங்களில் படிப்பதை விட ஒரு நூலாகப் படிக்கவும், தங்கள் இருப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பினார்கள். இந்தத் தொடர் ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டும் என்று விதி இருந்தால், அதற்கு உண்மையான தகுதி இது பெற்றிருந்தால், கண்டிப்பாக ஒரு நல்ல பதிப்பாளர் மூலம் நல்ல முறையில் வெளியிடப்படும் என்று விட்டிருந்தேன்.


எண்ணற்ற வாசகர்களின் எண்ணங்களின் வலிமையால் ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நல்ல தரத்தில் ஒரு அச்சு நூலாக இப்போது வெளியாகி உள்ளது. அந்த அன்பு வாசகர்களுக்கும், மனமுவந்து தானாகவே வெளியிட முன் வந்த ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பாளர் யாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


ஆழ்மன சக்தி தொடரில் முடிவில் சொல்லி இருந்தேன்-


”உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள்.”


இப்போதும் அதையே சொல்கிறேன். இந்த நூல் ஆழ்மன சக்தி, அதீத சக்திகள் குறித்து உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்காகவே எழுதப்பட்டது. அவர்களுக்கு அத்துறையில் ஆர்வத்தை அதிகரிக்கவும், அந்தப் பாதையில் பயணிக்கவும், அனுபவங்கள் பெறவும் இது தொடர்ந்து வழி காட்டக்கூடிய நூல். இந்த நூல் ஒரு முறை படித்து முடித்து வைத்து விடக்கூடிய நூல் அல்ல. திரும்பத் திரும்பப் படிக்கவும், சிந்திக்கவும் தகுந்த நூல். எனவே ஆழ்மனசக்திகள் குறித்து ஆர்வமுள்ள, அந்தத் தேடல் உள்ள, அனைவரும் இந்த நூலை வாங்கிப் பயனடையும் படியும், இந்த நூலுக்கும் உங்கள் நல்லாதரவை அளிக்கும்படியும், வாசகர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

உங்கள் 
என்.கணேசன்


(பதிப்பகத்தாரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 9600123146

முகவரி:

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
தொலைபேசி : 044 43054779 / 42077093
மின்னஞ்சல் : blackholemedia@gmail.com )


23 comments:

 1. வாழ்த்துகள் தோழரே..

  ReplyDelete
 2. Very very thanks sir...

  Sakthivel,Tiruppur

  ReplyDelete
 3. பாராட்டுகளும் வாழ்த்துகளும் :)

  நண்பர்களிடத்திலும் சொல்கிறேன்.

  ReplyDelete
 4. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்...நினைத்தேன் வந்துவிட்டது :)

  ReplyDelete
 5. சிவசுப்பிரமணியன்January 12, 2013 at 3:58 AM

  இத்தொடர் யூதஃபுல் விகடனில் வந்த போது மிக ஆர்வமாகப் படித்து வந்தவன் நான். இது ஒரு அச்சு புத்தகமாக வர வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். விருப்பம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சி. ஆழ்மனசக்தி குறித்து தமிழில் இவ்வளவு விளக்கமாக ஒரு நூல் வருவது இதுவே முதல் முறை என்பதால் இது மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. உங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. Very happy to see this in the format of book... Congrats...

  ReplyDelete
 9. வாசக நண்பர்களின் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

  அன்புடன்
  என்.கணேசன்

  ReplyDelete
 10. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 13. தங்களின் ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். நேற்று மதியம் தங்களின் புத்தகங்களை, ஆழ்மனதின் அற்புத சக்தி மற்றும் பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், இரண்டினையும் சென்னை புத்தக கண்காட்சியில் பெற்று ஒரே மூச்சில் முதல் புத்தகத்தினைப் படித்து முடித்தேன். அற்புதம் இனிய நண்பரே என் கணேசன் அவர்களே!! மேலும் இது போன்ற பல படைப்புக்களைத் தங்களிடம் எதிர்பார்க்கும் அன்பன் கே எம் தர்மா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.

   Delete
  2. Is there any way to buy this book in U.S.A thru www.amazon.com?

   Delete
  3. Please consider us too. I am a big fan of your contents. Sadly I did not have the chance to read any of your books. I am reading your blog only. Is there any ways to get your books? I do not have friends in India. If you release ebooks that is also welcome.

   Thank you.
   Theepan

   Delete
  4. I'll keep your suggestion in mind. Thank you.

   Delete
 14. மிகவும் அற்புதமான நூல்கள் , இரண்டிற்கும் ஆர்டர் தந்துவிட்டேன் , மிக்க மகிழ்ச்சி நண்பரே. தொடருங்கள் உங்கள் எழுத்துலக பெரும்பயணத்தை என அன்புடன் வாழ்த்துகின்றேன் .

  ReplyDelete
 15. today i ordered this book. very eager to read it

  ReplyDelete