சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 23, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்-2


  
  • காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
  
  * அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


  • ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.

  • சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.

  • இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.

  • வாய் நல்லதானால் ஊர் நல்லது.

  • கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.

  • காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.

  • மயிர் சுட்டுக் கரியாகாது.

  • ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.

  • விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)

  • திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)

  • பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)

  • ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.

  • ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.

  • ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

  • தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.

  • அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.

  • அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

  • தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.

  • எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.

  • வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.

- தொகுப்பு: என்.கணேசன்

12 comments:

  1. அருமையான பழமொழித் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அருமையான பழமொழிகள்!

    ReplyDelete
  3. நல்ல பழமொழித் தொகுப்பு.... தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு . நன்றி

    ReplyDelete
  6. arivukkum virundu alippavai

    ReplyDelete
  7. அருமையான பழமொழி தொகுப்பு.
    வாய் நல்லதானால் ஊர் நல்லது//

    இந்தப் பழமொழி மிகவும் பிடித்து இருக்கிறது.

    ReplyDelete
  8. அருமை நண்பரே...

    நீண்ட நாள்களுக்குப் பிறகு பழமொழி படித்துள்ளேன்...

    நன்றி...

    ReplyDelete
  9. https://www.youtube.com/watch?v=GnmzA8pNJHk

    ReplyDelete
  10. "வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே."

    இதன் அர்த்தம் என்ன சார் ?

    ReplyDelete
    Replies
    1. பொருள்கள் கொடுத்து மனிதர்களைக் கவர்வதைக் காட்டிலும் வாய்ப்பேச்சால், முக்கியமாக முகஸ்துதியால், அதிகமாகக் கவர முடியும் என்பதைச் சொல்லும் பழமொழி இது.


      Delete