சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 8, 2008

இறைவன் எந்த மதத்தவன்?


றைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது. ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?

- என்.கணேசன்

16 comments:

  1. //பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.
    //

    அருமை, அருமை.
    நல்ல சிந்தனை

    ReplyDelete
  2. //அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. //

    என் உடலை இயக்குவது ஒரு சக்தி தான் அதனால என்னையையே நான் கும்பிட்டுக்கவா?

    ReplyDelete
  3. இந்தக் கட்டுரை முழுவதும் எங்குமே நான் யாரையும் வணங்கச் சொல்லவில்லை. மேலும் உங்கள் உடலை இயக்கும் ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது நீங்கள் என்று அர்த்தம் அல்ல. அது நீங்களாக இருந்தால் நீங்கள் உறங்கும் போதும் இதயம் தானாகத் துடிக்காது, மூச்சு விட முடியாது. சுருக்கமாகச் சொன்னால் உறங்கும் போது நம்மையே நாம் மறந்து விடுவதால் உடல் இயக்கத்திற்கு நாம் பெருமைப்பட ஒன்றும் இல்லை. எனவே கும்பிட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. - என்.கணேசன்

    ReplyDelete
  4. //உடல் இயக்கத்திற்கு நாம் பெருமைப்பட ஒன்றும் இல்லை. எனவே கும்பிட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை.//

    கடவுள் பற்றிய நம்பிக்கையும் நான் அப்படி தான் பார்க்கிறேன். கும்பிட அங்கே ஒன்றும் இல்லை. இதை சொன்னால் நாத்திகன் என்கிறார்கள்

    ReplyDelete
  5. பல மதங்கள்,பல கடவுள்கள் இவை
    சிலர் பலரைக் கட்டுப் படுத்த உண்டாக்கப் பட்டவை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
    மதங்களை எதிர்த்து உருவானவை தான் இன்று மனிதனை முன்னேற்றி வாழ வைத்துக் கொண்டுள்ளது.
    உடல் நலமில்லாத மதத் தலைவர்கள் செல்வது மருத்துவரிடமா?அவர்களின் கடவுள்களிடமா?
    இயற்கையைப் புரிந்து கொண்டு வாழ மனிதன் மனித நேயத்தைத் தேட வேண்டும்,மதங்களையோ,அவை பிழைப்புக்காக உண்டாக்கிய கடவுள்களையோ அல்ல என்பதுதான் நல் வாழ்வாக அமையும்.

    ReplyDelete
  6. அடிப்படை கடவுள் என்பவர் படைத்தவராக இருக்க வேண்டும் . படைக்க பட்டவராக இருக்க கூடாது

    ReplyDelete
  7. please do not hesitate to read the quran, u can understand who is allah and u can get the answer for all your doubts.

    sure ,u can not find any single mistake when u read quran.

    ReplyDelete
  8. // nausadh said...

    please do not hesitate to read the quran, u can understand who is allah and u can get the answer for all your doubts.

    sure ,u can not find any single mistake when u read quran.//

    நல்ல காமெடி.
    மதத்தை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
    இல்லை
    மதம் உங்களை பிடித்திருகிறதா?

    ReplyDelete
  9. இந்த பிரபஞ்சம் உருவாக்க படவில்லை, இது உருவானது ஒரு அருமையான விபத்து.
    க‌ட‌வுள் ம‌னித‌னின் க‌ற்ப‌னைக்கு அப்பாற்ப்ப‌ட்ட‌வ‌ன் இல்லை, அனால் க‌ட‌வுள் ம‌னித‌னின் க‌ற்ப‌னையே.

    தமி்ழ‍ன்‍ சொல்வது போல மதம் "சிலர் பலரைக் கட்டுப் படுத்த உண்டாக்கப் பட்டவை".

    ReplyDelete
  10. உருவானதோ, உருவாக்காப்பட்டதோ எப்படியே ஆனாலும் எறும்பிலிருந்து, மனிதர்கள் வரை பல கோடி ஜீவராசிகள் கொண்டது நம் உலகம். இந்த உலகத்தைப் போல எத்தனையோ கோடி உலகங்கள் கொண்டது பிரபஞ்சம். அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக துல்லியமாக இயங்கி வருகிறது என்றால் அதுவும் தற்செயல் என்று சொல்லி விட முடியாது. அதை இயக்குகின்ற சக்தி இருந்தேயாக வேண்டும். பருவகாலங்களில் இருந்து கிரகங்களின் சுழற்சிகள் வரை எத்தனையோ விஷயங்கள் ஒரு ஒழுங்குமுறையோடு நடப்பது லேசுப்பட்ட விஷயமல்ல.

    ஒரு செயற்கைக் கோளை விட வேண்டுமென்றால் எத்தனை விஞ்ஞானிகள், எத்தனை விஞ்ஞான உபகரணங்கள், எத்தனை கால அறிவார்ந்த முயற்சி தேவைப்படுகிறது. அதுவும் சில மிகச்சிறிய தவறு ஏற்பட்டால் கூட தோல்வியில் முடிந்து விடுகிறது. அப்படி இருக்கையில் இது போன்ற கோடானு கோடி கோள்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அது நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்தியே என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

    ReplyDelete
  11. very good explanation. Vedathri maharishi explains this matter in scientific way.

    ReplyDelete
  12. Earth was formed million of years ago and the Human history is only few thousand years. What was GOD doing during remaining years? The astrology, numerology, god , religion are all created only after man became so called cultured. Earth was rotating as how it revolves now. there is no change in that. The only change is that man started thinking and spreadng the belief that god CREATED earth.If earth and other planets were made by god then Where was he living before?.

    ReplyDelete
  13. தலைப்பே தவறுன்னு தோணுது அன்பரே.

    மதம் என்பது மனிதன் இவ்வுலகிற்காக படைத்தது...சில ஒழுங்குமுறைக்காக அக்காலத்தில்..

    நீங்க சொன்ன கோடானுகொடி உலகங்களில் மதம் இருக்குமா?.


    அந்த மாபெரும் சக்தியை மதம் என்று சிறுவட்டத்துக்குள் அடைக்கலாமா?.

    ReplyDelete
  14. Very good explanation and well said.My humble request to you is kindly read Quran.Just a very friendly request! Thanks.Hope we are blessed by the Almighty!

    ReplyDelete
  15. சகோ. கனேசன் தங்களின் “இறைவன் எந்த மதத்தவன்?“ என்ற பதிவு, மீண்டும் மீண்டும் படிக்கத் தூன்டுகின்ற அருமையான பதிவு. அண்மையில் “இறைவன் இருக்கிறானா? என்ற தலைப்பில் நாத்திகர்களுடன் நடந்த விவாதம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. மிகவும் அறிவுப் பூர்வமாக அந்த விவாதம் அமைந்திருந்தது பல விஷயங்களை அதனூடாக அறிய முடிந்தது. நீங்களும் இங்கு கருத்துத் தெரிவித்திருக்கும் வாசகர்களும் உட்பட இதனைப் பார்க்கும் போது இங்குள்ள கேள்விகளுக்கும் இன்னும் நாமறியாத சந்தேகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கிறது. அதனை இந்த லிங்கில் சென்று பார்க்கலாம் இங்கே க்ளிக் செய்யவும். 'http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/
    மேலும் “நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள்“ என்ற தலைப்பில் நடை பெற்ற விவாதம் இந்த லிங்கில் க்ளிக் செய்யவும். http://onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/
    நன்றி
    அன்ஸார்-தோஹா

    ReplyDelete
  16. சகோ. கனேசன் தங்களின் “இறைவன் எந்த மதத்தவன்?“ என்ற பதிவு, மீண்டும் மீண்டும் படிக்கத் தூன்டுகின்ற அருமையான பதிவு. அண்மையில் “இறைவன் இருக்கிறானா? என்ற தலைப்பில் நாத்திகர்களுடன் நடந்த விவாதம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. மிகவும் அறிவுப் பூர்வமாக அந்த விவாதம் அமைந்திருந்தது பல விஷயங்களை அதனூடாக அறிய முடிந்தது. நீங்களும் இங்கு கருத்துத் தெரிவித்திருக்கும் வாசகர்களும் உட்பட இதனைப் பார்க்கும் போது இங்குள்ள கேள்விகளுக்கும் இன்னும் நாமறியாத சந்தேகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கிறது. அதனை இந்த லிங்கில் சென்று பார்க்கலாம் இங்கே க்ளிக் செய்யவும். 'http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/
    மேலும் “நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள்“ என்ற தலைப்பில் நடை பெற்ற விவாதம் இந்த லிங்கில் க்ளிக் செய்யவும். http://onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/
    நன்றி
    அன்ஸார்-தோஹா

    ReplyDelete