சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 15, 2013

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!




அறிவார்ந்த ஆன்மிகம் - 3


தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.

அண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், இதைச் செய் என்று பிரார்த்திக்கிறோம், ஏன் இப்படிச் செய்தாய், ஏன் அப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கிறோம். பல சமயங்களில் எதை எப்போது செய்ய வேண்டும் என்று கூட இறைவனுக்குத் தெரிவிக்கிறோம். இறைவனை வணங்கி விட்டு இப்படி நாம் அதற்குக் கூலியாகக் கேட்கும் விஷயங்கள் ஏராளம்.  

இறைவனிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேன் என்று பக்தன் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் கேட்பதெல்லாம் நியாயமாக இருக்கிறதா என்பதே நம் கேள்வி. 

1.       செயலுக்கு எதிரான விளைவைக் கேட்காதீர்கள்:
பரிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிக்க மாணவனுக்கு நேரமும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை இறைவன் தந்திருக்கிற அறிவு தெரிவிக்கிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்க்காமல் மாணவனால் இருக்க முடியவில்லை.  கிரிக்கெட் பார்க்கிறான். வேறு பொழுது போக்குகளிலும் நேரத்தைப் போக்கி பரிட்சைக்கு இரண்டு நாள் முன்பு தான் படிக்க ஆரம்பிக்கிறான். படித்தது போதவில்லை. பரிட்சை நன்றாக எழுதவில்லை. வெளியே வந்தவன் தேர்வு வரும் வரை தினமும் கோயிலிற்குச் சென்று மனம் உருக வேண்டுகிறான். “கடவுளே என்னை நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்ய அருள் புரி”.

உள்ளம் உருகப் பிரார்த்தித்தால் இறைவன் செவி சாய்ப்பான்என்று பெரியோர் சொல்வதை அவன் நம்புகிறான். அப்படி நம்புவதை அவன் இறைவனுக்கும் தெரியப்படுத்துகிறான். இறைவன் என்ன செய்வார் சொல்லுங்கள். இன்னொருவன் இறைவன் தந்த அறிவின்படி விளையாட்டு கேளிக்கைகளில் இருக்கும் ஆர்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்காகப் படிக்கிறான். இவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்து படிக்காத மாணவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்தால் இறைவன் செய்வது நியாயமாகுமா?

இயற்கையின் விதிப்படி படிக்காதவன் பரிட்சையில் தோல்வியுற்றோ, முறைவான மதிப்பெண்கள் பெற்றோ, உன்னை நான் மலை போல் நம்பினேனே. இப்படி ஏமாற்றி விட்டாயேஎன்று மனம் குமுறினால் அது அறிவீனமே அல்லவா? இது போல ‘இந்த செயலுக்கு இந்த விளைவு என்று எச்சரிக்கும் இறை அறிவைப் புறக்கணித்து விட்டு தவறாக அனைத்தையும் இஷ்டம் போல் செய்து விட்டு கடைசி நிமிஷத்தில் பிரார்த்தித்து விட்டு எல்லாம் சரியாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் தயவு செய்து சொல்லாதீர்கள்.

2.       உங்களை மட்டுமே பார்க்காதீர்கள்:
இறைவனுக்கு இரு பக்தர்கள் இருக்கிறார்கள். இருவருமே மிக நல்ல பக்தர்கள். ஒருவன் குயவன். மற்றவன் விவசாயி. குயவன் மழையே வேண்டாம் கடவுளே, மழை பெய்தால் என் பிழைப்பு நடக்காதுஎன்று வேண்டிக் கொள்கிறான். விவசாயியோ, “இறைவனே மழை பொழிய வை. இல்லா விட்டால் என் பிழைப்பு என்று வேண்டிக் கொள்கிறான்.

எல்லாம் வல்ல இறைவன் இப்போது என்ன செய்வான் சொல்லுங்கள். இருவருமே பக்தர்கள் தான். இருவர் கோரிக்கையும் அவரவர் வகையில் நியாயமானது தான். முன்பு சொன்ன படிக்காத மாணவனைப் போல இவர்கள் பேராசைப்படவில்லை. இறைவன் என்ன செய்தாலும் அவன் ஒரு பக்தன் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்.

இப்படித் தான் சில சமயங்களில் நம் பிரார்த்தனைகள் பலிக்காமல் போகலாம். அப்போதெல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் ஏன் இப்படிச் செய்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், இனியாவது இப்படிச் செய், அப்படிச் செய் என்று கோபத்தோடு அறிவுரை வழங்காமல் இருங்கள். இவர்களில் ஒருவன் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றினால், வேறொருவன் பிழைப்புக்கு இறைவன் கண்டிப்பாக வேறொரு வழியைக் காண்பிப்பான் என்பது நிச்சயம்.

3.       எல்லாமே எப்போதுமே முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பாராதீர்கள்:
மனிதன் அறிவுக்கு எல்லை உண்டு. அவனால் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் விளங்கிக் கொள்ள முடியாது. புரியாததாலேயே நடப்பதை எல்லாம் நியாயமில்லாதது என்ரும் தனக்கு எதிரானது என்றும் முடிவு எடுத்து விடக்கூடாது.  பல நிகழ்வுகள் அந்தந்த நேரத்தில் தீமை போலவும் தோல்வி போலவும் தோன்றினாலும் பொறுத்திருந்து பார்த்தால் நடந்தது நன்மைக்கே என்பது புரிய வைக்கும்.  

எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர். இறைவனின் தீவிர பக்தர். அவர் ஒரு முறை சொன்னார். “எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசை. அது நிறைவேற தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். மூன்று தடவை ஸ்டேட் பாங்க் பரிட்சை எழுதினேன். ஒரு முறை கூட நான் பாஸாகவில்லை. பிறகு எழுத வயது கடந்து விட்டது. நான் கடவுளிடம் கோபித்துக் கொண்டு ஆறு மாதம் கும்பிடாமல் கூட இருந்தேன்....

பெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகவும் முன்னேற வேண்டிய மனிதர் ஒரு வங்கி குமாஸ்தாவாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் இறைவன் என்ன செய்வார்? பக்தன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டு அந்த ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருந்தது அவருடைய கருணையை அல்லவா காண்பிக்கிறது. எனவே பல நேரங்களில் உங்களுக்கு நல்லது எது என்று உங்களை விட இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்திருங்கள். அவனிடம் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லி வழி காட்டாதீர்கள்.

நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" என்கிறது இந்துமதம். "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!" என்கிறது கிறிஸ்தவம்.
அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும்என்கிறது இஸ்லாம். இப்படி எல்லா மதங்களும் இறைவனின் சித்தம் மனிதனின் சிற்றறிவை விட மேலானது என்றும் அதை எப்போதும் நம்புங்கள் என்றும் ஒருமித்த குரலில் சொல்கின்றன.

உங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்களுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். அதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்த அளவு பேரறிவு எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருங்கள்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்புகளில் பாலைத் தயார் நிலையில் உருவாக்க முடிந்த இறைவனுக்கு, அண்ட சராசரங்களையும் அனாயாசமாக ஒப்பற்ற ஒழுங்கு முறையில் இயக்க முடிந்த இறைவனுக்கு, ஒவ்வொன்றையும் அடுத்தவர் சொல்லித் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். தவறில்லை. ஆனால் அதன் பின் எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும், இன்று புரியா விட்டாலும் பின்பாவது புரியவரும் என்று நம்பிக்கையுடன் பொறுத்திருங்கள். அதுவே இறைவன் மேல் வைக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 26-03-2013

16 comments:

  1. ரொம்ப நல்லாஇருகின்றது !

    இது உண்மையா? ஒரு விஷயம் தெரிய/புரிந்துகொள்ளும் சமயம் வரும்பொழுதுதான் எல்லாம் புரியும்.

    நன்றி
    சத்தியமூர்த்தி

    ReplyDelete
  2. தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டேன் :) பக்தர்கள் மனதில் கொள்ள வேண்டிய, அவர்கள் நம்பிக்கைக்கு உதவுகின்ற, செய்தி. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்று புரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. Very nice article, worth reading

    ReplyDelete
  5. Thanks Sir. I understand this. But some time when I see some extraordinary incidence happened in other's life, I couldn't resist to blame God.

    For example: Today I red a new about no one helped a women and her 6 month old child died in a road accident in Jaipur. Here is new link:
    http://www.dailymail.co.uk/news/article-2309572/Familys-anguish-mother-baby-daughter-bleed-death-Jaipur-road-callous-motorists-drove-past.html
    Why god has given such a suffering to that family ?

    ReplyDelete
  6. எது நடக்க விதிக்கப்பட்டிருக்கிறதோ அது நடந்தே தீரும்......
    நடப்பதெல்லாம் நன்மைக்கே....
    இதுவும் கடந்து போகும்...

    அருமையான பதிவு....தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  7. GREAT MESSAGE SIR.SIMPLE BUT STRIKING.
    GOD BE WITH US.

    ReplyDelete
  8. அருமையான பதிவு...வாழ்த்துகள் nanbarae.

    ReplyDelete
  9. நீங்க சொல்றது உண்மை தான். ஆனா கஷ்டம் வரும் போது மனிதனுக்கு அறிவு வேல செய்யயாதே.

    ReplyDelete
  10. உங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்களுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். //

    எல்லாக் கோயில் வாசல்களிலும் இப்பதிவை பெரிய எழுத்தில் எழுதி வைத்தால் அலைமோதும் கூட்டத்தில் ஒருசிலரேனும் தெளிவார்.

    சிறப்பானவற்றையே பதிவு செய்யும் மேன்மைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேன்ட முழுந் தருவோய் நீ
    வேண்டுமயன்மாற் கரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
    வேண்டி நீயா(து) அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசொன்(று) உண்டென்னில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே!
    [திருவாசகம்-மாணிக்கவாசகர்]

    ReplyDelete
  12. vow ganesan sir, this is absolutely correct.
    thanks

    ReplyDelete
  13. kadavul patriya villakkam kurigiin karutha illai vungal karutha ? nandraka iruthalum niraya kalvikal elukinrana.

    ReplyDelete
  14. Pray to God but do not ask him anything

    By
    N.Ganesan

    Translated by y
    P.R.Ramachander

    (This is based on the great and detailed post of Sri Ganesans work by Hamsabai SAnthana Krishnan. All of us have problems and we believe God can help but should we not leave it to him the decision, which would be for universal good.)

    A student who has not prepared his lessons at all,
    Prayed to God , “you only can help me” and ,
    An intelligent well prepared one also prayed,
    And God helps the later in spite of former blaming him.

    A farmer prays God for lot of rain,
    And a potter prays for no rain at all,
    And God takes a decision favouring one,
    And helps the other to earn sufficiently

    One great devotee who is now a billionaire,
    Earlier prayed to God “Please make me ,
    An officer in a bank” and God did not bother about it,
    Because he knew that the person has to become a billionaire

    Please understand that God knows much better than you ,
    And without doing your duty , he would not help you,
    And for him the good of all is more important than good of one.
    And he also knows your future and takes decision accordingly

    So please do not try to tell God that he is not correct ,
    He is unjust and in spite of your devotion does not give you what you want,
    For he is the one who keeps milk in the breast of mother before child’s birth,
    And your knowledge is nothing compared to his wisdom.

    Pray to God, “You know everything about every thing,
    And so do not make me ask or request you anything,
    For we all know that your decisions are always right,
    And it would be beneficial to the entire world and all its beings.”
    My translation as I liked it very much and wanted english knowing people to read it . ramachander926@gmail.com

    ReplyDelete