சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 13, 2012

அட ஆமாயில்ல! - 5


 

ஒருவன் தான் தவறு செய்வதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவே கூடாது. ஒப்புக் கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றை விட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே.-         போப்


நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
-         மாசிடோனிய மன்னர் பிலிப்

கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து
இருக்கின்ற மூளையை வெளியே தள்ளி விடுகின்றது.
-         கோல்டன்

கேலியின் பெருமை கேட்பவர் செவியைப் பொறுத்தது. அது ஒரு போதும் சொல்பவர் நாவில் இல்லை.
-         ஷேக்ஸ்பியர்

சணலை  நெருப்பில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இளைஞனை சூதாட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.
-         ஃபிராங்க்ளின்

ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
-         அரிஸ்டாடில்

சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஏகாந்தம் பேரறிவின் பள்ளி.
-         கிப்பன்

உரையாடலில் மௌனமாய் இருப்பதும் ஒரு கலையாகும்.
-         ஜாஸ்லிட்

அறிவுடைமை வலிமையை விடப் பெரியது. இயந்திர நுணுக்கங்களை அறிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான்.
-         ஜான்சன்

நல்லவர்களது துரதிர்ஷ்டம் அவர்களை வானை நோக்கி முகங்களைத் திரும்பும்படி செய்கின்றது; கெட்டவர்களது துரதிர்ஷ்டம் அவர்கள் தரையை நோக்கி தலைகளைத் தொங்கவிட்டுக் கொள்ளும்படி செய்கின்றது.
-         ஸா அதி

கண்கள் ஒன்று சொல்ல நாவொன்று சொன்னால், விஷயம் அறிந்தவன் கண்கள் சொல்வதையே நம்புவான்.
-         எமர்சன்

பொய்யைத் துரத்திக் கொண்டு ஓடாதே. நீ அதை விட்டு விட்டால் அது விரைவில் தானாகவே செத்து விடும்.
-         இ.நாட்


வழக்கங்கள், நம்பிக்கைகள், உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமைப் பருவம்.
-         ரஸ்கின்

கூட்டம் தன் அபிமானத்தைக் கொண்டே சிந்திக்கும். அறிவைக் கொண்டு சிந்திக்காது.
                                  -ட்புள்யூ.ஆர்.ஆல்ஜெர்

நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு.
-         பிதாகோரஸ்



தொகுப்பு: என்.கணேசன்                                 


10 comments:

  1. அருமையான அவசியம் எப்போதும்
    நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய பழமொழிகள்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாசிடோனிய மன்னர் பிலிப் அருமை தலைவா!

    ReplyDelete
  3. நல்ல தத்துவங்கள்.

    ReplyDelete
  4. நல்ல கருத்துக்கள் . நன்றி

    ReplyDelete
  5. நல்லதொரு அருமையான தொகுப்பு... மிக்க நன்றி....

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு.

    ReplyDelete
  7. நல்ல கருத்துகள்


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. மிகச் சிறந்த தொகுப்பு அன்பரே!

    ReplyDelete