என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, May 14, 2012

வாழ்க்கைப் பயணத்தில் … 
வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே!

                   - என்.கணேசன்

15 comments:

 1. கவிதை மிகவும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இறை இருப்பான் துணையென்று
  முறை நடப்பாய் மானிடனே!

  nantha

  ReplyDelete
 3. Sir, its a nice one
  I feel, you wrote this post for me

  warm regards
  Tiruvannmalai Babu

  ReplyDelete
 4. மிகவும் அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்!

  உண்மைவிரும்பி.
  மும்பை.

  ReplyDelete
 5. அருமையான் கவிதை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. good poem.I like the line of ""GOD WILL BE WITH YOU TO SUPPORT"""

  THANKS

  ReplyDelete
 7. உற்சாகத்தை தருவதோடு
  " தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
  தீங்கு வர மாட்டாது பாப்பா -
  நீ ஓடி விளையாடு பாப்பா "
  என்ற பாரதியின் வரிகளும் நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
 8. Nice one!... If god is with us, who can be against us...

  ReplyDelete