சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 28, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்-1




  • சாமி காட்டுமே தவிர ஊட்டாது.

  • அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

  • இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.

  • உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.

  • கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.

  • தெய்வம் பாதி திறமை பாதி.

  • தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.

  • ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.

  • சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.

  • தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

  • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.

  • மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.

  • கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.

  • கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.

  • பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.

  • குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.

  • பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.

  • அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.

  • எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.

  • அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.

  • முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.

  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

  • அக்காள் இருந்தால் மச்சான் உறவு.

  • முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

தொகுப்பு: என்.கணேசன் 

12 comments:

  1. Super inthamathri ellam kettu, padithu romba nalla chi sir...... arumai arumai.....

    ReplyDelete
  2. Super inthamathri ellam kettu, padithu romba nalla chi sir...... arumai arumai.....

    ReplyDelete
  3. அறிவார்ந்த தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு நண்பரே ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. பழமொழிகள் அருமை.
    தொகுப்புக்கு நன்றி.

    ReplyDelete
  6. What is the meaning of "சனப்பலம்"

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு . நன்றி

    ReplyDelete
  8. சனப்பலம் என்பது ஜன பலம் அதாவது ஆள்பலம்

    ReplyDelete
  9. கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
    இணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
    இவண்
    உலகசினிமா ரசிகன்,
    கோவை

    ReplyDelete
  10. சுவையான தொகுப்பு.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்மையில் கேட்க நேர்ந்த ஒன்று "விளையட்டுப்பையன் வைத்த வெள்ளமை வீடு வந்து சேராது"

    ReplyDelete
  12. படிக்க சுவாரசியமாக இருந்தது. பேச்சு வழக்கில் இருந்தது எல்லாம் ... இப்போது மாறிவிட்டது.

    நன்றி.

    ReplyDelete