என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, January 16, 2012

வேரை மறந்த விழுதே...உன்னில் என்றும் தன்னைக் கண்டனள்
தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள்
கண்ணே மணியே பொன்னே என்று
விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி
தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும்
தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும்
விதியாய் எண்ணி நொந்தனள் தவிர
சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?

தலையில் ஊற்றிய நீரது விரைவில்
காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
நாளை முதுமை உனக்கும் வருகையில்
பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!


- என்.கணேசன்

10 comments:

 1. கல்யாணசுந்தரம்January 16, 2012 at 3:25 PM

  தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?

  தலையில் ஊற்றிய நீரது விரைவில்
  காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!

  அழகான கவிதையில் மிக அழுத்தமான வரிகள். மிக அருமை.

  ReplyDelete
 2. தலையில் ஊற்றிய நீரது விரைவில்
  காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
  நாளை முதுமை உனக்கும் வருகையில்
  பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!


  உணர்ந்து விழிக்கட்டும் மானுடம்!

  ReplyDelete
 3. //தலையில் ஊற்றிய நீரது விரைவில்
  காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!//

  உண்மை. நல்ல கவிதை.

  ReplyDelete
 4. இன்றைய முதுமையின் நில்லை இதுதான்.நினைவில் கொள்வோம்,ந்ல்ல படைப்பு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வேரின் உறவையும் பாசத்தையும் மறந்துவிட்ட விழுதுகளுக்கு ஒரு நிமிடமாவது நினைவூட்டும்!நீர்கசியும் விழியோரம்!

  ReplyDelete
 6. Dear sir,
  Iam regular reader fo u r blog in recent times, great work very informative, if i need to read the articles topic wise where can i get from Episode 1. example: அழமன சக்தி from first article. pls update where can i get in your blog.

  ReplyDelete
 7. Dear Rajan sir,
  You may select type "ஆழ்மனசக்தி”and click to read all my 60 chapters in the series. Chapters will be shown from 60 to 1. scroll down and read from 1st chapter.

  ReplyDelete
 8. மனதை கனமாக்கிய கவிதை... நன்றி கவிஞர் கணேசனுக்கு

  ReplyDelete
 9. தலையில் ஊற்றிய நீரது விரைவில்
  காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
  நாளை முதுமை உனக்கும் வருகையில்
  பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!

  அருமையான வரிகள் , நாளைய நிகழ்வுகள்

  ReplyDelete
 10. “நாளை முதுமையில்..” என்ற வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.

  ReplyDelete