சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 19, 2011

மாற்றங்கள்





கருவறையில் இருக்கையிலே
இருட்டறை தான் என்றாலும்
உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
வெளிச்சமும் பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை
இழந்தே நாம் தவித்தோம்.
பிறந்தது இழப்பல்ல
பெற்றது ஒரு பேருலகம்
என்றே பிறகுணர்ந்தோம்.
சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
உறவுகளை நாம் பெற்றோம்
நண்பர்களைக் கண்டெடுத்தோம்
தேவைகளைப் பூர்த்தி செய்ய
அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.

-         என்.கணேசன்
(சமீபத்தில் கோவை தமிழ்ச்சங்கம் நடத்திய 72 மணி நேரக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை)


12 comments:

  1. Wonderful words.. very inspiring..

    ReplyDelete
  2. ஒன்றை இழக்கையிலே
    ஓராயிரம் நாம் பெறுவோம்
    இழந்ததையே நினைத்திருந்தால்
    புதியதையே பெற மறப்போம்//

    அருமையான நல்ல கருத்துள்ள கவிதை.

    ReplyDelete
  3. அருமையான வரிகள்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  4. இழந்ததையே நினைத்திருந்தால்
    புதியதையே பெற மறப்போம்//

    ந‌ன்று!

    ReplyDelete
  5. //ஒன்றை இழக்கையிலே
    ஓராயிரம் நாம் பெறுவோம்
    இழந்ததையே நினைத்திருந்தால்
    புதியதையே பெற மறப்போம்// தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்! பகிர்விற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. Arputham Aruputham......... nalla varigal

    ReplyDelete
  7. Arputham aruputhamana varigal sir........

    ReplyDelete
  8. இனிப் பெறுவதென்னவென்றே
    இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.
    அருமை .

    ReplyDelete
  9. //சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
    உறவுகளை நாம் பெற்றோம்
    நண்பர்களைக் கண்டெடுத்தோம்
    தேவைகளைப் பூர்த்தி செய்ய
    அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.// மொத்த வாழ்க்கையை இதில் அடக்கிவிட்டீர்கள்

    ReplyDelete
  10. அருமையான
    படிப்பனையூட்டும் வரிகள்

    ".. ஒன்றை இழக்கையிலே
    ஓராயிரம் நாம் பெறுவோம்
    இழந்ததையே நினைத்திருந்தால்
    புதியதையே பெற மறப்போம்.."

    ReplyDelete