முடிவில் தொடர்ந்த வரலாறு
சிவாஜி முடிசூடிக் கொண்ட சில நாட்களிலேயே ஜீஜாபாய் காலமானாள். முடிசூட்டு நாளில் அவள் எண்ணியது போல அவள் கனவு நிறைவேறிய பரமதிருப்திக்குப் பின் இந்த உலகில் பார்க்கவும், பெறவும் அவளுக்கு எதுவும் இருக்கவுமில்லை.
சிவாஜி மேலும் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தான். பல வெற்றிகளும், சில தோல்விகளும் கண்ட அவன் தெற்கில் தன் ராஜ்ஜியத்தை நீட்டிக் கொண்டான். இறக்கும் வரை ஔரங்கசீப்புக்கு சிவாஜி சிம்ம சொப்பனமாகவே இருந்தான். தொலைநோக்குப் பார்வையுடன் ஆட்சி செய்து மக்கள் நலனில் உண்மையான அக்கறை செலுத்தினான். சுவாமி இராமதாசர் கேட்டுக் கொண்டபடியே தக்காணத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ”ராம் ராம்” என்று முகமன் கூறிக் கொள்வது வழக்கமாகியது. அந்த வழக்கம் இன்று வரை இருக்கிறது.
அவனுக்குப் பின் அரசனான சாம்பாஜியிடம் சிவாஜியின் வீரம் இருந்தாலும், விவேகமும், நிதானமும், கூரிய அறிவும் இருக்கவில்லை. ஆனால் முகலாயர்களை எதிர்ப்பதில் அவன் தளரவில்லை. சூழ்ச்சியினால் ஔரங்கசீப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட சாம்பாஜி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான். அவன் மனைவியும், மகன் சாஹூவும் ஔரங்கசீப்பால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் ராஜாராமும் அற்பாயுசில் இறந்தான்.
சிவாஜி கணித்தது போலவே பீஜாப்பூர் ராஜ்ஜியம் விரைவிலேயே அழிந்தது. அதே போல் கோல்கொண்டா சுல்தான்களும் அழிந்தார்கள்.
ஔரங்கசீப் நீண்ட காலம் (89 வயது வரை) உயிர்வாழ்ந்தான். அவன் வாழ்ந்த வரை எந்த மகனும் அரியணையில் ஏறாமல் பார்த்துக் கொண்டதே அவன் மகத்தான சாதனையாக இருந்தது. அவன் நேசித்த ஒவ்வொருவரையும் இன்னொரு காலக்கட்டத்தில் சந்தேகித்து விலக்கி வைப்பது அவன் வழக்கமாக இருந்தது. அவன் அன்பு செலுத்திய சகோதரி ரோஷனாராவும், மூத்த மகள் ஜெப் உன்னிசாவும் கடைசி காலங்களை மாளிகைச் சிறைகளில் கழிக்க வேண்டி வந்தது. இறுதி வரை அவன் அன்பையும் செல்வாக்கையும் இழக்காதது அவன் இரண்டாம் மகள் ஜீனத் உன்னிசா மட்டுமே.
ஜீனத் உன்னிசா தான் சாம்பாஜியின் மகன் சாஹூவின் மீது அக்கறை எடுத்துக் கொண்டு அவன் நல்ல முறையில் முகலாய அந்தப்புரத்தில் வளர்வதற்குக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது. சாம்பாஜியைக் கொல்லும் முன் மதம் மாற ஒத்துக் கொண்டால் விட்டு விடுவதாக ஔரங்கசீப் சொன்னதாக மராட்டிய வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஔரங்கசீப் சிறுவன் சாஹூவை மதம் மாற்றாமல் இந்துவாகவே தன் அந்தப்புரத்திலேயே வளர விட்டதற்கு ஜீனத் உன்னிசாவின் வேண்டுகோளே காரணம் என்கிறார்கள். ஜீனத் உன்னிசாவின் இரக்கத்திற்கும் கருணைக்கும் பிரத்தியேகக் காரணங்கள் தெரியவில்லை. அவள் தன் சகோதரி ஜெப் உன்னிசாவைப் போல் தன் எண்ணங்களையும், உணர்வுகளையும் பேசுபவளோ, வெளிப்படுத்துபவளோ அல்ல என்று முன்பே நாவலில் குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஔரங்கசீப் மரணம் வரை நிம்மதியற்றவனாகவே இருந்தான். அவன் கடைசி காலப் புலம்பல் கடிதங்கள் அவன் மனநிலையை வெளிப்படுத்துவதாக இருந்தன. ஒரு கடிதத்தில் அவன் எழுதியிருந்தான். “நான் யார் என்று தெரியவில்லை. நான் எங்கே செல்வேன் என்றும் தெரியவில்லை. நிறைய பாவங்கள் செய்திருக்கும் இந்தப் பாவிக்கு இனி என்ன ஆகும் என்றும் தெரியவில்லை. என் வாழ்க்கை வீணாகவே போய் விட்டது. இறைவன் என் இதயத்தில் இருந்தார் என்றாலும் என் இருண்ட விழிகள் அவர் ஒளியைக் கண்டுகொள்ளத் தவறி விட்டன. எனக்கு எதிர்காலத்திலும் எந்த நம்பிக்கையும் இல்லை. காய்ச்சல் குணமாகி விட்டது. ஆனால் எலும்பும் தோலும் மட்டுமே என் உடலில் எஞ்சி இருக்கின்றன. நிறைய பாவங்களை நான் செய்திருக்கிறேன். எனக்கு எந்த விதமான சித்திரவதைகள் காத்திருக்கின்றன என்பதை நான் அறியேன்....”
அவனுடைய மரணத்திற்குப் பின் இளவரசன் முவாசிம் பகதூர் ஷா என்ற பெயருடன் ஆட்சிக்கு வந்தான். அவன் மராட்டிய அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு சாஹூவை விடுதலை செய்தான். ஆனால் சாஹூவின் தாயாரை விடுதலை செய்யவில்லை. சாஹூவைக் கட்டுப்படுத்தி வைக்க அவன் தாயைப் பணயக்கைதியாக வைத்துக் கொள்வது அவன் எண்ணமாக இருந்தது. முவாசிம்மின் சில வருட ஆட்சிக்குப் பின் முகலாயப் பேரரசு சிதைந்து, சிறுத்துக் கரைய ஆரம்பித்து விட்டது.
சாஹூ முகலாய அந்தப்புரத்திலேயே வளர்ந்ததால் சிவாஜி, சாம்பாஜி இருவரின் வீரம் அவனுக்கு வரவில்லை. ஆனால் சிவாஜியைப் போலவே மனிதர்களை எடைபோடும் திறமையும், நேசிக்கும் பண்பும், பெருந்தன்மையும் மட்டும் அவனிடம் இயல்பாகவே இருந்தன. அதை மூலதனமாக வைத்து அவன் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களை முக்கியப் பொறுப்புகளில் வைத்தான். அவர்களுக்கு ஊக்கம் தந்தான். மரியாதையாக நடத்தி, நேசிக்கவும் செய்த சாஹூவை அவன் மந்திரிகளும், படைத்தலைவர்களும், அதிகாரிகளும் நேசித்து மரியாதை செலுத்தினார்கள். விரைவிலேயே தன் தாயை முகலாயர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் வரவழைத்துக் கொண்டான். அவன் காலத்தில் மராட்டியப் பேரரசு தெற்கில் மட்டுமல்லாமல் வடக்கிலும் நீண்டு பரவியது. பாரதத்தின் முக்கால் பகுதிக்கும் மேலாக மராட்டிய அரசு பரவி இருந்தது. சிவாஜி கண்ட சுயராஜ்ஜியக் கனவு பேரன் சாஹூவின் ஆட்சி காலத்தில் ஓரளவு நிறைவேறி விட்டது என்று சொல்லலாம்.
சாஹூவின் மரணத்திற்குப் பின் மராட்டியப் பேரரசும் சிதைய ஆரம்பித்தது. அவனுக்குப் பின் பேஷ்வாக்களும், அவர்களுக்குப் பின் ஆங்கிலேயர்களும் நம் நாட்டை ஆள ஆரம்பித்தது வரலாறு. ஆனால் சிவாஜியைப் போல் கூர்மையான பேரறிவு, அசர வைக்கும் வீரம், அசாத்தியத் துணிச்சல், தொலைநோக்குப் பார்வை, அப்பழுக்கற்ற ஒழுக்கம், தளராத மன உறுதி, தன்னிகரில்லாத தேசபக்தி, அடித்தள மக்களிடமும் பேரன்பு என எல்லா உன்னதங்களையும் உயர்நிலையில் சேர்த்துப் பெற்றிருந்த ஒரு மகத்தான மனிதனைப் பாரதத்தின் நீண்ட வரலாற்றில் இது வரை காண முடிந்ததில்லை. இனி நம் வரலாறு அப்படியொரு யுகபுருஷனைக் காணும் வாய்ப்பும் இல்லை என்பது மட்டும் நிச்சயம்!
வாழ்க சிவாஜி! வளர்க அவன் புகழ்!
முற்றும்.
என்.கணேசன்
இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
அடுத்த திங்கள் முதல் புதிய நாவல் தொடர்...
Great novel sir. You brought Sivaji's glory to Tamil readers. This novel will always remain a milestone in your writing career. Namaskar.
ReplyDeleteFantastic writing and gripping story telling is your hallmark. Keep it up always....
ReplyDeleteசத்ரபதி நாவல் வெளிவந்ததே, அது முழுமையானதா, அல்லது முதல் பாகம் மட்டுமா
ReplyDeleteமுழுமையானது தான்.
DeleteWonderful novel. Going go miss Shivaji on monday evenings...
ReplyDeleteGreat Book Sir. Thank you for sharing with us!. We felt like we also Travelled with the great warrior Shivaji's lifetime.
ReplyDeleteYou taught many Good things to your Readers through your books.
Keep up your good work.
Dear Sir, you have done a yeoman service to the non marathi reading population by this great work . You captured all the fine nuances . The books takes us through a graphic journey of the times of the Great Maratha. It's as if we can smell the wet earth , live the emotions and hear the war cries. Shivajis strategy, cunning, bravery, humanism, patriotism and keen intellect are on display for all to see. It's a wonderful book and every tamil reading community must read.
ReplyDeleteThank you!
இதுவரை நான் எந்த ஒரு வரலாற்று தொடரையும் படித்ததில்லை...
ReplyDeleteஆனால், சிவாஜி தொடரை வரலாற்று ஆவணம் போல் இல்லாமல்.... உங்கள் பாணியில் சுவாரஸ்யமான நாவலாக கொடுத்துள்ளீர்கள்... அற்புதம் 👌 ஐயா...
உங்கள் சேவைக்கு என் உளமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
விரலில் உள்ள ரேகைகள் மாறுவதைப் போல மனிதர்களும் ஒவ்வொருவரும் மாறுவார்கள்
ReplyDeleteஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் இளமை காலங்கள் எல்லாம் இந்த உலகில் நாம் தான் இருப்போம் நான் சொல்வது தான் நடக்கும் என்ற கனவிலேயே இருந்து விடுகிறார்கள் அதற்கு எடுத்துக்காட்டு அவுரங்கசீப்பின் புலம்பல்
நிரந்தரம் நிலையாமை ஒன்றே
ஆனால் நல்ல உள்ளங்களின் எண்ணங்களும் அந்த நல்லவர்களின் புகழும் நிலையாக வெகு நாள் வாழும்
நிலையற்ற வாழ்வின் சிறிய பயனாளிகளே நாம் இதை உணராமல் தான் நாம் வெகு நாள் இந்த வாழ்க்கையில் பயணிக்கிறோம்
நன்றி மிக அருமையான ஒரு பழைய சரித்திரத்தை கொடுத்ததற்கு
மிக்க மகிழ்ச்சி அடுத்த நாவலின் வரவிற்கு
I like very much your novel and end of the novel is great. I think at present we are living era of Shivaji II.
ReplyDeleteITS REALLY SUPER NOVEL. YOUR WRITING STYLE IS SOO IMPRESSIVE
ReplyDeleteThanks for such a wonderful presentation of one of the greatest visionary and leader Bharat has seen. Learnt and a lot of his greatness, traits, his vision and family details of this great man which most of us do not know due to the current education system
ReplyDeleteThank you very much for giving us a wonderful Novel. Wish you All the best sir... We expecting more interesting novels like this...வாழ்க வளமுடன்...
ReplyDeleteசத்ரபதி வெறும் நாவல் அல்ல ... ஹிந்து இளைஞர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய வரலாற்று ஆவணம் ... நன்றி கணேசன் சார் ...
ReplyDeleteமாவீரன் அலெக்ஸ்சாண்டர் கதையை எழுதுங்கள்
ReplyDeleteSir I would like you to write about Rajarajasolan or chola history
ReplyDelete