தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
அனைத்து தத்துவங்களும் அருமை சார்... அதிலும் 157-வது தத்துவம் போலிகளை கண்டறியவும், நம் உள்நிலையை சோத்தித்துக் கொள்ளும்படி கூறியிருப்பது..அருமையிலும் அருமை...
ReplyDeleteதங்களது கடைசி சிந்தனையைப்பற்றி ஒரு கேள்வி. பெரும்பாலும் ஒருவரிடம் ஆனுகும்போதோ அல்லது பேசும்போதோ அல்லது நம்மை வெளிட்டிக்கொள்ளும் போதோதான் நாம் இவ்வாறு நடக்க முற்படுகிறும். "அன்பே வடிவமாதல், சமநோக்குடன் இருத்தல்" என்பதெல்லாம் உள்ளமனத்தளவிலும் அல்லவா இருக்க வேண்டும் ? இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமா ஐயா ?
ReplyDeleteஆன்மீகத்தில் ஆழமாகப் போகப் போக நான் சொன்ன அந்த தன்மைகள் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது பலப்படும். சாதாரண ஆன்மீகவாதிகளுக்கே இப்படி என்றால் ஆன்மீகத்தில் மிக உயரிய நிலைக்குச் சென்று விட்டதாகக் கருதப்படுபவர்கள் இந்தத் தன்மைகளை உண்மையாகவே பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆன்மீகத்தில் அவர்களை உயர்நிலையில் இருப்பதாக எண்ணுவது ஏமாறுவது தான்.
Deleteநடைமுறைக்கு வராத எதனாலும் யாரும் பயன் அடைவதில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் நிறையவே முடியும். அதுவே ஆன்மீகத்தில் நாம் அடைந்திருக்கும் நிலைக்கான அளவுகோல்.
Delete