61. ஒரு மனிதனை அறிய அவன் பதில்களை விட்டு,
அவன் கேள்விகளைக் கவனியுங்கள்.
62. தேவையில்லாத அறிவு இரட்டிப்பு மடமை.
63. மூடன் கடைசியாகச் செய்வதை ஞானி முதலில்
செய்கிறான்.
64. மூடன் வெற்றி பெறுவதும் அறிவாளி தோல்வி
அடைவதும் உலகின் நிகரற்ற ஆச்சரியங்கள்.
65. யானை தன் தந்தங்களைத் தாங்க நீ போய்
உதவி செய்ய வேண்டியதில்லை.
66. சேற்றில் உள்ள முள்ளும், வேட்டை நாயின்
பல்லும், மூடனின் சொல்லும் அதிகமாகக் குத்தும்.
67. அறியாமையைப் போல வேறெதற்கும் அவ்வளவு
துணிவு கிடையாது.
68. முட்டாள் அமைதியாக இருக்க முடியாது.
69. சிறிது மட்டுமே தெரிந்தவன் அதையே
திருப்பித் திருப்பிச் சொல்வான்.
70. நாயோடு தாராளமாகப் பழகலாம். ஆனால்
குச்சியை நழுவ விடலாகாது.
தொகுப்பு: என்.கணேசன்
சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
ReplyDeleteதொடருங்கள்
அனைத்தும் அருமை ஐயா...
ReplyDeleteI like 62nd.
ReplyDeleteThank you,