சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, August 7, 2013

என் இரு புதிய நூல்கள்: வாழ்ந்து படிக்கும் பாடங்கள், சங்கீத மும்மூர்த்திகள்

அன்பு வாசகர்களே வணக்கம்.

என்னுடைய இரண்டு புதிய நூல்கள் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் மற்றும் சங்கீத மும்மூர்த்திகள் வெளியாகி உள்ளன.

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்



இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்கு என்று சில பாடங்கள் இருக்கின்றன. அந்தப் பாடங்களைக் கற்று மனதில் பதித்துத் தேர்ச்சி பெற்றால் ஒழிய வாழ்க்கைப் பரிட்சையில் அவன் தேறி விட முடியாது. அந்தப் பாடங்கள் சொல்லித்தர இங்கு தனிப் பல்கலைக்கழகம் இல்லை. அந்தப் பாடங்களை வாழ்ந்தே படிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கைப் பாடங்களில் பொதுவான பரிட்சைகள் முன்பே அறிவிக்கப்படுவதில்லை. நடந்த பிறகு முடிவுகளும் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் பரிட்சைகள் வாழ்வில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. பரிட்சை முடிவுகள் மன ஆழத்தில் உணரப்படுகின்றன.


எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித் தர முடியாத, வாழ்ந்து படிக்கும் பாடங்களை இந்த நூலில் சொல்லி இருக்கிறேன். இவற்றைக் கற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் வாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாது. இவற்றைக் கற்றுத் தேர்பவனே வெற்றி வாகை சூடுகிறான், வாழ்வில் நிறைவைக் காண்கிறான், காலமணலில் தன் காலடித் தடத்தை விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், குழம்பியும் வாழ்ந்து மடியும் போது இந்தப் பாடங்களை அறிந்து தெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து முழுமையாக வாழ்ந்து மனத்திருப்தியுடன் விடை பெறுகிறான்.


வாழ்ந்து படிக்கும் சிறந்த 32 பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக மிக எளிமையாகவும், வலிமையாகவும் இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்! வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்த நூலை வாங்குவது நல்ல மூலதனமாக இருக்கும். உங்கள் வசம் வைத்திருக்கவும், நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டும் மனிதர்களுக்கு நல்ல உபயோகமான பரிசளிக்கவும் தகுதியான சிறப்பான நூல் இது. விலை ரூ.110/-



சங்கீத மும்மூர்த்திகள்



இசையால் இறைவனை இசைய வைத்து, இறைவனை மட்டுமல்லாமல், கேட்பவர் அனைவரையும் அன்றும், இன்றும், என்றும் பரவசப்படுத்த முடிந்த மகாபுருஷர்களான சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் சிறிய நூல் இது. அவர்கள் பாடி இன்றும் அனைவரும் பாடிக் கொண்டிருக்கும் பல பாடல்களின் சுவையான பின்னணி சம்பவங்களையும் இந்த நூலின் மூலம் அறியலாம். இசைப்பிரியர்களுக்கும், இந்த மகான்களைப் பற்றியும், அவர்கள் பாடிய சில பிரபல கிருதிகள் பிறந்த விதம் பற்றியும் அறிய விரும்புபவர்களுக்கும், இந்த நூல் ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக இருக்கும். விலை ரூ.75/-


அன்புடன்

என்.கணேசன்

(பதிப்பகத்தாரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 9600123146

முகவரி:

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
தொலைபேசி : 9600123146 / 044 43054779
மின்னஞ்சல் : blackholemedia@gmail.com )


10 comments:

  1. " மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...!!! "

    "நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டும் மனிதர்களுக்கு நல்ல உபயோகமான பரிசளிக்கவும் தகுதியான சிறப்பான நூல் இது. "

    அருமை அருமை ....., இப்படியொரு நூலைத்தான் தேடிக்கொண்டிருந்தோம் .., ஒரு நல்ல நூலை மட்டுமல்ல ஒரு நல்ல எழுத்தாளரை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்த திருப்த்தி .. மன நிறைவு இருக்கும் ..,

    ReplyDelete
  2. நல்லதொரு மகிழ்ச்சியானத் தகவல். மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. உங்களுடைய புத்தகம்
    படிப்பவர்களுக்கு காட்டும் புதுஉலகம்
    மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  4. வரதராஜன்August 7, 2013 at 9:32 PM

    பலருக்கும் நிச்சயம் பயன்படும் எழுத்துக்கள் உங்களுடையது. புத்தகமாக வந்ததால் மேலும் பலரை சென்றடையும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்...
    இதுபோல் இன்னும் பல புத்தகங்களை எழுதுங்கள்..

    ReplyDelete
  6. Hi,

    Is this available as a e-book?

    Thanks

    ReplyDelete
    Replies
    1. No. The books are available as printed books only.

      Delete
  7. Canyou send me one copy of vaazhnthu padikkum paadangkal by VPP. OR where can I buy this? I am at Chennai.

    ReplyDelete
    Replies
    1. Please contact the publisher to no. 9600123146. He will assist you. Thank you

      Delete
  8. Hi,

    Thanks for your response. I had asked one of my friend to get it for me and he has purchased 2-3 copies of the book to distribute to his friends as well.

    Good luck and thanks for authoring such books.

    Thanks

    ReplyDelete