மூன்று நாட்களில்
மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி.
காதலென்பது தேவலோக வஸ்து.
- பாரதியார்
ஏழைகள்
கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக்
கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.
- டால்ஸ்டாய்
உயர்ந்த பொருள்களையே
புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை.
- பி. எஃப்.
பெய்லி
நாமே நமக்குச் சொல்ல
முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை மதிக்க முடியாத நண்பனாவான்.
-
எமர்சன்
நடத்தை என்பது ஒரு
கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தையே காட்டுகின்றனர்.
-
கதே
நாம் இல்லாமல்
உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும். ஆனால் நாம் அப்படிக் கருத வேண்டும்.
-
லாங்
ஃபெல்லோ
மனிதனை எது
அடிமையாக்குகிறதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
- போப்
அதிகாரத்தை அடிக்கடி
பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவது
போலாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால் அது ஏதோ அலையின் ஓசை போல், அதில் பயம்
தெளிந்து விடும்.
-
கோல்பெர்ட்
மற்றவர்களது
மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக்
காரணம்.
- தாம்சன்
முறை தவறிச் சேர்த்த
செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து எடுக்கும் போது
பயங்கரமான வேதனை ஏற்படும். அப்படி எடுக்கா விட்டாலோ அது அழிவையே ஏற்படுத்தி
விடும்.
-
ஜெரிமி
டெய்லர்
உலகத்தின்
சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக
விளங்க முடியாது.
-
ஷேக்ஸ்பியர்
ஓர் அபிப்பிராயம்
உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டாலும் அது உன்னுடையது என்பதற்காக அதைப்
பிடிவாதமாக நீ பற்றிக் கொண்டிருந்தாயானால் உண்மையை விட நீயே மேலானவன் என்று
கருதுவதாகும்.
- வென்னிஸ்
உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
ReplyDelete- ஷேக்ஸ்பியர்
அருமையான கருத்துகள் பகிர்வுக்கு நன்றி .
நல்ல பதிவ,
Deleteவாழுதுகள்!
தன் முன்னே நிற்பவர்கலயும் தாம் தான் என்று நிநைதால் எந்த பிரச்சனியும் தோன்றது.
- இராமனுசர்.
அட ! உண்மை சார் ! சிறப்பான பதிவு !
ReplyDeleteமிக மிக அருமை........
ReplyDeleteஅருமையான தேர்வு... வாழ்த்துகள் .
ReplyDelete'நித்திலம்' அறிமுகத்தில் இங்கே வந்தேன். பிரமித்துப் போய் விலக மனமில்லாமல் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.//
ReplyDelete- ஷேக்ஸ்பியர்
உண்மை.
தேவையான பதிவு.
நன்றி.
super sir! Pls continue Mr. Ganesh
ReplyDelete