Monday, September 1, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 11


  
·         நித்தம் சாவாருக்கு அழுவார் உண்டோ?


·         நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.


·         நெருப்பு சிறியதென்று முந்தானையில் முடியலாமா?


·         பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பு மூட்டாமல் விடுவதா?


·         பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்.


·         நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.


·         போன மாட்டைத் தேட மாட்டான், வந்த மாட்டைக் கட்ட மாட்டான்.


·         பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.


·         படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில்.


·         மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல.


·         பாதி சுரைக்காய் கறிக்கும், பாதி சுரைக்காய் விதைக்குமா?



தொகுப்பு: என்.கணேசன்

2 comments:

  1. சிலவற்றிற்கு அர்த்தம் புரிகின்றது. சிலவற்றிற்கு புரிய வில்லை. இம்மொழிகளின் அர்த்தத்தையும் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. " நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
    போன மாட்டைத் தேட மாட்டான், வந்த மாட்டைக் கட்ட மாட்டான்."

    Very powerful , Ganesan, thanks for bringing these, Seems your service is very useful for spiritual seekers!

    ReplyDelete