Wednesday, April 9, 2014

தினத்தந்தியில் ‘பரம(ன்) இரகசியம்’ புத்தக மதிப்புரை



இன்று (09-04-2014) தினத்தந்தியில் பரம(ன்) இரகசியம் நாவலின் விமர்சனம் வந்துள்ளது.

பரம(ன்) இரகசியம் நாவல் படித்து முடித்த வாசகர்களின் பாராட்டுகள் தொடர்ந்து எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பலர் இந்த நாவலை ஒரு கதையாக நினைக்க முடியவில்லை என்றும், படித்து முடித்த பின் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒருசில நாட்கள் தொடர்ந்து இருக்கின்றன என்றும் பலப்பல வார்த்தைகளில் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்து வருகிறார்கள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்று வள்ளுவர் கூறிய நிலையிலேயே நான் இருக்கிறேன். இந்த நாவலை எழுதி முடித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடப் பலமடங்கு அதிக மகிழ்ச்சியையும், நிறைவையும் நான் உணர்கிறேன்.

இந்த நாவல் மேலும் பல வாசகர்களை தன்னிடம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. வாசகர்களின் வாய்வழி விமர்சனங்களும், கண்டிப்பாகப் படிக்கச் சொல்லும் மனம் உவந்த பரிந்துரையும் இந்த நாவலின் மிகப்பெரிய விளம்பரமாகிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது.

படித்துப் பாராட்டிய, மற்றவர்களுக்கு பரிந்துரை செய்து கொண்டிருக்கிற, நான் முகமறியா அந்த வாசக அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- என்.கணேசன்


2 comments:

  1. வாழ்த்துக்கள் பல... நன்றி...

    ReplyDelete
  2. லக்‌ஷ்மிApril 10, 2014 at 8:03 AM

    எங்கள் கணேசன் அவர்களே உங்கள் எழுத்துக்கள் எல்லாமே முத்துக்கள் தான். தரம் அற்ற ஒரு சொல்லைக்கூட நாங்கள் அவற்றில் பார்த்தது இல்லை. அதிலும் பரமன் ரகசியம் கோஹினூர் வைரம். அதைப் படித்தவர்கள் யாருமே அதன் வசமாகாமல் இருக்க முடியாது.

    ReplyDelete