Wednesday, October 16, 2013

எனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?


கல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்மனசக்தி ஆர்வம், ஆன்மிக ஆர்வம், என்று நான் மற்ற துறைகளில் பயணப்பட்டு, முன்பு போல ஜோதிடத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாத போதும் ஜாதகங்கள் சம்பந்தமான கேள்விகளுடன் காத்திருந்தாவது என்னை அணுகுபவர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். எழுத்தாளராக அல்லாது ஒரு ஜோதிடராக மட்டுமே என்னை அறிபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இத்தனை வருட ஜோதிட அனுபவம் இருக்கும் எழுத்தாளரான நீங்கள் ஏன் ஒரு ஜோதிடம் சம்பந்தப்பட்ட நூல் எழுதக்கூடாது என்று என்னை அறிந்தவர்கள் அடிக்கடி கேட்பார்கள். ஜோதிடம் பற்றிய புத்தகங்கள் ஏராளமாக வந்து விட்டன. ஜோதிடத்தின் அடிப்படை அம்சங்கள் தொடங்கி ஜோதிடத்தின் மிக நுட்பமான விளக்கங்கள் வரை பல நூல்கள் மூலமாகச் சொல்லப்பட்டு விட்டன. ஜோதிட ஜாம்பவான்கள் முதல் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வரை நிறைய எழுதிக் குவித்து விட்டனர். அந்த வகை நூல்களில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்ட எனக்கு ஆர்வம் இருக்கவில்லை.  ஆனாலும் ஜோதிடத்தில் ஒரு நூல் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை என்னால் ஒதுக்க முடியவில்லை.

அதனால் வழக்கமான ஜோதிட நூலாக இல்லாமல் ஜோதிடத்தைப் பற்றி சாதாரண மனிதனைக் குழப்பும் விஷயங்களைத் தெளிவுபடுத்தும் நடுநிலையான, நேர்மையான, தெளிவான நூல் ஒன்றை வித்தியாசமாக எழுத எண்ணினேன். ஜோதிட நுட்பங்கள் அறியாத, புரியாத, சாதாரண மனிதர்களுக்கு ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, ஜாதகத்தைப் பயன்படுத்துவது எப்படி, நேர்மையற்ற ஜோதிடர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, போலிகளைக் கண்டுபிடிப்பதெப்படி, பெயரை மாற்றினால் விதி மாறுமா, அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் விலகி விடுமா, கிரகங்களின் நன்மை தீமைகளை பூஜை புனஸ்காரங்களால் மாற்றி விட முடியுமா,  கோசாரம் முக்கியமா, ஜாதகம் முக்கியமா, எல்லாமே ஜாதக விதிப்படி தான் என்றால் மனிதனின் அறிவுக்கும், முயற்சிகளுக்கும் மதிப்பே இல்லையா, ஜோதிட சாஸ்திரத்தில் எதை எந்த அளவு நம்பலாம், என்றெல்லாம் நேர்மையாகச் சொல்லக் கூடிய புத்தகம் எதுவும் நானறிந்த வரை, இது வரை வந்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

முக்கியமாக நல்லதாகவோ, கெட்டதாகவோ எப்படி ஜாதகம் அமைந்து விட்ட போதிலும் அதைப் பயன்படுத்தி நன்மைகளை பெருக்கிக் கொள்ளவும், தீமைகளைக் குறைத்துக் கொள்ளவும் அறிவுபூர்வமான வழிகளை இந்த நூலில் நீங்கள் காணலாம்.

இந்த நூலின் அத்தியாயங்கள் பின் வருமாறு-

1.ஜோதிடத்தின் மூலமும் ஆராய்ந்தவர்களும்
2. ஜாதகம் நம் பூர்வ ஜென்மக் கணக்கு
3. கிரகங்கள், நட்சத்திரங்கள், தசா புக்திகள்
4. லக்னம், 12 வீடுகள்,
5. கிரகங்களின் காரகத்துவம், பார்வைகள், உச்ச நீச்ச நட்பு வீடுகள்
6. சில ஜோதிட சொற்றொடர்களூக்கு விளக்கம்
7. ஜாதக பலன்களை அறியும் முறை
8. யோகங்கள்
9. சில அதிர்ஷ்ட ஜாதக உதாரணங்கள்
10. ஒரு துரதிர்ஷ்ட ஜாதக உதாரணம்
11. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?- ஒரு வித்தியாச ஜாதகம்
12. ஜாதகம் ஏன், எப்போது பார்க்க வேண்டும்?
13 ஜாதகம் எப்போது பார்க்கக் கூடாது?
14. மதியா? விதியா?
15. முழுமையான நல்ல கெட்ட காலங்கள் உண்டா?
16. கோசாரம் முக்கியமா? தசா புக்தி முக்கியமா?
17. நல்ல காலங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
18. கெட்ட காலங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
19. கல்கள், எண்கள், பூஜைகள் அதிர்ஷ்டம் தருமா?
20. கெட்ட காலங்களில் பரிகாரங்கள் என்னென்ன?
21. ஒருவர் விதியை இன்னொருவர் விதி மாற்றுமா?
22. ஜோதிடர்கள் கூறும் பலன்கள் வேறுபடுவதேன்?
23. ஏமாற்று ஜோதிடர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!
24. அரைகுறை ஜோதிட அறிவு அபாயமே!
25. விதி வழிப் பயணத்தில் மறக்கக் கூடாத உண்மைகள்!

நூலின் விலை ரூ.90.00

நூலைப் பெறப் பதிப்பாளரை 9600123146 எண்ணிலும், BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,   No7/1 3rd Avenue, Ashok Nagar,  Chennai-600 083 முகவரியிலும், blackholemedia@gmail.com  மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

                           
மேலே குறிப்பிட்டவற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்களும், ஜாதக ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும், அதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் இந்த நூலை வாங்கிப் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்

24 comments:

  1. வாழ்த்துக்கள் ஜி. இந்த செய்தியை பார்த்தபொழுது மிகவும் ஆச்சர்மாக இருந்தது. ஏனென்றால் ஜாதகம் தொடர்பான பதிவினை உங்களது வலைப்பதிவில் பார்த்ததாக நினைவில் இல்லை. இதிலும் நீங்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை அறியும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
    You have skills in different combination of subjects. I wish you great success.
    by,
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  2. இந்த நூல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் சார். ஜோதிடத்திலும் நீங்கள் புலமை பெற்று இருப்பது மகிழ்ச்சி. தங்கள் ஞானம் பலருக்கும் பயன்படட்டும்

    ReplyDelete
  3. அருமை அருமை .., அற்புதம் சார் வாழ்த்துக்கள் தங்கள் வாசகர் என்பதில் பெருமை கொள்கிறோம்....

    ReplyDelete
  4. பாராட்டுக்கள். வாழ்த்துகள். தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  6. ஜோதிடம் என்பது, கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இயல்பாகவே வரக்கூடிய கலை ஆகும். இறையருள் கூடுமானால் அவர்கள் சொன்னது பலிக்கும். தங்கள் நூலைப் படித்துப்பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  7. அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

    அன்புடன்
    என்.கணேசன்

    ReplyDelete
  8. I have started learning couple of years back from this site http://classroom2007.blogspot.com/, regular follower of this site. I have started it with skeptical mind how 12 blocks can affect ones life, it turned to be follower of that site, my days does not end without visiting your site and that site. Notable progress Ganesar sir.

    Congratulation and keep up the good work!!!

    I would like to have this book and other books ordered.

    ReplyDelete
  9. Great Sir. MOst of the headings are my doubts

    ReplyDelete
  10. Surprised to know that you are interested in horoscope. Nowadays so many fake people are looking horoscope making money. They cheat poor innocent people who are suffering from problems in their life. IT is very rare to find a reliable people. Looking forward to read this book. Congratulations!

    ReplyDelete
  11. நீங்க மனித மனங்களை பற்றிய ஆராய்ச்சியை பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் ஜோதிட ஆராய்ச்சியையும் செய்துள்ளீர்கள் என்று அறியும் போது வியப்பாக உள்ளது

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்.... வளரட்டும் உங்கள் பணி ...

    ReplyDelete
  13. Brother Ganeshan, Today I bought this book and including two more books from blackhole publishers, chennai. Started reading by evening and completed by now (today 4:40 AM). It answered most of my questions and doubts about astrology. Your have written without any compromise about both pros and cons. I believe you have something in you, a blessed one.
    Recommend this book to all who want to make happy life through astrology.

    ReplyDelete
  14. I bought the book and it is really excellent especially the final notes which explains the life works like a balance sheet. I am addicted to your blog and books.

    ReplyDelete
  15. அன்புள்ள கணேசன்,

    உங்கள் 'ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?' புத்தக அறிமுகம் பாலஹனுமான் தளத்தில்...

    http://balhanuman.wordpress.com/2013/11/24/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/

    ReplyDelete
  16. Sir where could i get this book at villupuram?

    ReplyDelete
  17. Long live ganesan your knowledge on various subjects really astonishinh

    ReplyDelete
  18. ஐயா வணக்கம் . நான் தங்களின் "ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?" என்ற நூலினை படித்தான். எளிமையான அற்புத நூல் . இப்புத்தகத்தை வாசித்த பின் இன்னும் ஆழமாக ஜோதிடம் கற்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது .
    நீங்கள் நல்ல ஜோதிடம் கற்ப்பிக்கும் புத்தகங்களை பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி .

    ReplyDelete
    Replies
    1. B.V Raman எழுதிய How to Judge a Horoscope, 300 important combinations நூல்கள் படிக்கலாம்.

      Delete
  19. Sir I bought this book. Very Useful

    Bharath.O
    Coimbatore

    ReplyDelete