Friday, April 10, 2009

சில வழக்கங்கள் எதற்காக?

ஆன்மீகம் சம்பந்தமாக எத்தனையோ செயல்களை தினமும் செய்கிறோம். அதன் பொருள் என்னவென்று கேட்டால் நமக்குத் தெரிவதில்லை. அர்த்தமில்லாத காரியங்கள் உண்மையான ஆன்மீகத்தில் இல்லை. அப்படி அர்த்தமில்லாமல் செயல்கள் இருந்தால் அது உண்மையான ஆன்மீகம் இல்லை. எனவே எதையும் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து அந்த பாவனையுடன் செய்வதே சிறப்பு.

தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்?

தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றுகிறோம். சந்தியா காலங்களான அதிகாலை, மாலை நேரங்கள் பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக நம் முன்னோர் கருதி வந்ததால் அந்த சமயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது நமது வழக்கமாக இருக்கிறது.

எண்ணெய், திரி இரண்டும் ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாகக் கருதுகிறார்கள். தீபம் ஒளிரும் போது எண்ணெயும், திரியும் சிறிது சிறிதாக அழிவது போல், ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்றும் தீபம் மூலம் உணர்த்தப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மேலும் தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே ஒளிர்கிறது. அது போல உண்மையான ஞானமும் நம்மை மேலான எண்ணங்களுக்கே தூண்டுகிறது. அந்த ஞானம் நமக்கு அமையட்டும், அந்த ஞான ஒளி நம் வாழ்க்கைப் பாதையில் ஒளிவீசி வழிகாட்டட்டும் என்ற பிரார்த்தனையோடு நாம் தீபம் ஏற்றுகிறோம்.

சடங்குகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வைப்பதும் அந்த ஞானாக்னியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.

இனி தீபம் ஏற்றும் போதும், ஏற்றிய தீபத்தைக் காணும் போதும் இந்த அர்த்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?

கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம். அது தவறு.

ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய முடியாது. இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் எல்லாம். அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம். இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருதுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right side என்றே அழைக்கப்படுகிறது.

எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம், அவனை நம் இதயத்தின் மையத்தில் வைத்தே அனைத்து எண்ணங்களும் எழ வேண்டும் என்ற பாவனையில் சுறி வந்து பாருங்கள். தொழுது விட்டு வெளியே வரும் போது உங்களுக்குள் அமைதியும் சக்தியும் அதிகரிக்கக் காண்பீர்கள்.

புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனிதமாகின்றன. புரியாமல் செய்யும் போது இவை வெறும் சம்பிரதாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.

-என்.கணேசன்

15 comments:

  1. Hi Ganeshan, I reading your blog since long back. Your articles are very nice and making me to think in different way. Thanks for such wonderful thoughts.
    By
    Ranganathan.

    ReplyDelete
  2. even simple things have deep meanings as you said. thanks for sharing.

    ReplyDelete
  3. /*புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனிதமாகின்றன. புரியாமல் செய்யும் போது இவை வெறும் சம்பிரதாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.*/
    உண்மை. பல விஷயங்கள் புரியாமல் செய்வதால் தான் சர்ச்சைக்குரியதாகிவிடுகிறது

    ReplyDelete
  4. அருமையான விளக்கங்கள். ஏன் செய்கிறோம் என்று இவ்வளவு நாட்களாக தெரியாமல் செய்து வந்திருக்கிறோம். இனி சந்தோஷத்துடன் செய்வோம். தங்களின் அர்பணிப்பு பாராட்டுக்குரியது.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  5. manathirkku iniya pathivu.vazhthugal.

    ReplyDelete
  6. உங்களின் கட்டுரைகள் எல்லாம் அருமை.. ஆனால் இக்கட்டுரை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து இருந்திருந்தால், மிக நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. Dear Sir,

    Nice to know these meanings. I once read a book called 'olaicchuvadi'...you can get lot of details like this!
    If possible pls go thru it and publish more things..Thank you.

    ReplyDelete
  8. amaam kadavul kal atharku eatharaku maali mariyaadhai. sari anna gandhi nehhrau etac etc silagala vaithu atharku maalai podugiraargale. athu yaarai emaatra?ketri maharaja ketta ithe kelvikku vivekandar avarthu velaiaalai rjaavin padathai konduvaracholli athil tuppachonapozhudu anta velai aall maruthuvittaar. enendraal athil avar maharajavai partahaar, iha paeriya aazwar nammazwar ulan enil ulan ilai enil ilan. endru solliirukkiraar. avaravar manam pol.

    ReplyDelete
  9. புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனிதமாகின்றன. புரியாமல் செய்யும் போது இவை வெறும் சம்பிரதாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.//

    உண்மை தான். புரிந்து செய்யும் போது நமக்கு நல்ல பலன் ஏற்படும்.

    நல்ல பதிவை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Fantastic article..Even personally, I would like to know reason for such rituals. Not because I do not believe them, but to do the rituals with the inner meaning of it. Which would definitely yield good results. Gudos!!

    ReplyDelete
  11. I am quite thrilled to read your articles. Fantastic Ideas and written in a concise and EFFECTIVE Format - the choice of words and sentence construction are excellent.

    ReplyDelete
  12. I really enjoy your article. Thank you so much for your effort.

    ReplyDelete
  13. thaks anna........

    ReplyDelete