அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
தாங்கள் ஆவலுடன் படித்து வரும் “இருவேறு உலகம்” நாவல் அச்சில் வெளிவந்து விட்டது.
மர்ம மனிதன் யார்? அவன் நோக்கம் என்ன? அவன் சக்திகளை அடைந்த விதம் என்ன? அவனை மாஸ்டரும், க்ரிஷும் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? மாஸ்டருக்கும், மர்ம மனிதனுக்கும் காளிகோயிலில் கிடைத்த வரைபடம் எதைக் குறிக்கிறது? அதை இருவரும் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? அதில் பொதிந்துள்ள ரகசியம் என்ன? மாஸ்டரிடம் க்ரிஷ் என்ன, எப்படிக் கற்றுக் கொள்கிறான், அவன் கற்றுக் கொண்டது எதிரியைச் சமாளிக்க உதவுகிறதா? தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தின் விளைவுகளை க்ரிஷ் குடும்பம் எப்படி சமாளிக்கிறது? மர்ம மனிதன் க்ரிஷை அழிக்க எடுக்கும் முயற்சிகள் என்ன? அதை எல்லாம் க்ரிஷ் எப்படி சமாளிக்கிறான்? சங்கரமணி, மாணிக்கம் கோஷ்டி எதிரி கையில் எப்படி எல்லாம் இயக்கப்படுகிறார்கள், முடிவில் என்ன ஆகிறது? மர்ம மனிதன் - மாஸ்டர் - க்ரிஷ் என்ற முக்கோண சக்திகளில் யார் யாரை எப்படி மிஞ்சுகிறார்கள், ஜெயிக்கிறார்கள்? ஆகிய கேள்விகளுக்குப் பதிலைப் பல திருப்பங்களுடன் இந்த நாவலில் ஒரேயடியாகப் படிக்கலாம்.
அது மட்டுமல்லாமல், இன்றைய அரசியல்வாதிகள் உட்பட பலராலும் பலகாலமாகப் பேசப்பட்டு வரும் இல்லுமினாட்டி ரகசிய அமைப்பு இந்த நாவலின் பிற்பகுதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த இல்லுமினாட்டி அமைப்புக்கும், மர்ம மனிதன், மாஸ்டர் இருவருக்கும் கிடைத்த வரைபடத்திற்கும் மிக முக்கிய தொடர்பு இருப்பதும், யார் கை ஓங்குகிறது என்பதை அது தீர்மானிக்கும் நிலை உருவாவதும் மிக மிக சுவாரசியமாகச் சொல்லப்படுகிறது. தொடங்கியபின் முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி நகர்கிற இந்த நாவலில் 140 அத்தியாயங்கள், 672 பக்கங்கள் உள்ளன. நாவலின் விலை ரூ.700/-
கதையின் மர்ம முடிச்சுகள் விலகி முடிவு தெரிந்த பின்னரும் மீண்டும் பல முறை திரும்ப நிதானமாகப் படிக்க வைக்கும்படியான தத்துவங்களும், படிப்பினைகளும் இந்த நாவலில் பின்னப்பட்டிருக்கின்றன. படித்து முடித்த பின்னர் என்றும் இந்த நாவல் உங்கள் மனதில் தங்கும் என்பது மட்டும் உறுதி.
(வழக்கம் போல் இந்த வலைப்பூவிலும் இந்த நாவல் வாரா வாரம் தொடரும். வலைப்பூவில் 2019 ஆம் ஆண்டு ஜூன்மாதம் முடிவடையும்)
நூலை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
நன்றி.
அன்புடன்
என்.கணேசன்
thank u sir... is this available in chennai book fair?
ReplyDeleteYest at Stall No.489
DeleteVery glad to hear the news sir. Congrats. The descriptions you have given here induce us to buy the book immediately. Seems very interesting. Thanks.
ReplyDeleteநன்றி G.....
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி கணேசன் சார். உங்கள் பொங்கல் பரிசுக்கு. உடனே வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. இல்லுமினாட்டியும் இதில் இடம்பெறுவது சுவாரசியத்தை இரட்டிப்பாக ஆக்குகிறது. நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteBought ur iru veru ulagam book and reading now, very very interesting
ReplyDeleteWhy dont you make your books available to buy through Amazon? It will be easy for most of us to use such methods. Kindly consider
ReplyDeletebooka vangiyachu ..kizha vaikka manadhe varavillai.500 pakkam padichachu .. super interesting..
ReplyDeleteஏற்கனவே... சஸ்பென்ஸ்...தாங்க முடியல.... இத வேற சொல்லிட்டிங்களா...? விரைவில் வாங்க முயற்ச்சிக்கிறேன்...ஐயா....நன்றி....
ReplyDeleteபுத்தகத்துடன் தங்கள் கைய்யப்பம் கிடைத்தால் இரட்டிப்பு ஆனந்தமாக இருக்கும். புத்தம் சரணம் கச்சாமி நாவல் வாங்கியதிலிருந்து தங்கள் கைய்யப்பத்திற்காக காத்திருக்கின்றேன்.
ReplyDeleteபல வாசகர்கள் சென்னை புத்தகக்காட்சியில் இதே கருத்தைச் சொன்னதாய் பதிப்பாளர் சொன்னார். அடுத்த முறை ஏதாவது ஏற்பாடு செய்கிறேன். நன்றி
Deleteஅவரிடம் கேட்டவர்களில் நானும் ஒருத்தி என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கருத்தை ஏற்றதற்கு மிக்க நன்றி
Deleteபுத்தகத்துடன் தங்கள் கைய்யப்பம் கிடைத்தால் இரட்டிப்பு ஆனந்தமாக இருக்கும். புத்தம் சரணம் கச்சாமி நாவல் வாங்கியதிலிருந்து தங்கள் கைய்யப்பத்திற்காக காத்திருக்கின்றேன்.
ReplyDeletePurchased the book at chennai book fair. While coming out of the fair I was reading the back wrapper. Seeing that, an old man came to me and asked the exact location of the book stall where N.Ganeshan's books. He said he came to the fair only to buy the book. Sir you have won hearts of young and old alike. I wanted to share this with you.
ReplyDeleteஇங்கு புதன் கிழமை அன்று தான் கிடைக்குமாம்... விஜயா பதிப்பகத்தில்....4 நெடிய நாட்கள் காத்திருக்க வேண்டும்....
ReplyDeleteநாவலை நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு தான் படித்து முடித்தேன். அற்புதமான நாவல் கணேசன் சார். திரும்பவும் நிதானமாய் ஒரு முறை ரசித்துப் படிக்க எண்ணியுள்ளேன். இது போல் மேலும் பல நாவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteCan we get it from Delhi ?
ReplyDeletePlease enquire the publisher. His mobile No. 9600123146
DeleteSir, got this book from exhibition ...book of par excellence ... stealed all our time ...
ReplyDeleteSir, got this book from exhibition ...book of par excellence ... stealed all our time ...
ReplyDeleteHello Mr.Ganeshan it would be great if the book is available in an ebook format for those of us who isn't able to get our hands on a hard copy.
ReplyDeleteI listened to the audio novel Paraman ragasiyam three times to grasp the essence. A combination of spirituality, crime, occult and human emotions. Of course the climax was a bit cinematic…. Please let your readers listen to more of your writings as audio books, as we seniors prefer to listen rather than reading. Thank you very much.
ReplyDelete