Friday, August 1, 2014

எனது நூல் “அறிவார்ந்த ஆன்மீகம்” வெளியீடு!

 
ம் ஆன்மிகச் செயல்கள் சம்பிரதாயமாகவும், எந்திரத்தனமான சடங்குகளாகவும் மாறி விட்டிருக்கின்றன. நம் முன்னோர் நம்மிடம் விட்டுப் போயிருக்கும் எத்தனையோ பேரறிவுக் களஞ்சியங்கள் நம்மில் பெரும்பாலானோருக்கு எட்டவே இல்லை. இதற்குக் காரணம் அறியாமை. ஒரு காலத்தில் புரிந்து செய்தது பின் வந்த காலங்களில் புரியாத சடங்குகளாகவும், கட்டாயமாகவும் மாறி விட்டது. ஏன் என்ற கேள்வி எழுப்பாமலேயே அப்படி ஆட்டுமந்தையாகப் பின்பற்றியதால் பின்வரும் தலைமுறையினர் கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்லத் தெரியாமல் போன பரிதாபநிலை உருவாகி விட்டது.

மாபெரும் ஆன்மிக உண்மைகளைப் பாமரருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தினத்தந்தியில் தொடர்ந்து ஒருவருடம் நான் எழுதி வந்த அறிவார்ந்த ஆன்மிகம் பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இந்த நூலில் இருப்பவை-

1)      ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மிகச் செயல்கள் பின்னிருக்கும் காரணங்களை அலசிய கட்டுரைகள்.

2)      நாம் பின்பற்றும் ஆன்மிகச் செயல்களின் காரணங்களை விஞ்ஞான ஆராய்ச்சிகளும் நிரூபித்த கட்டுரைகள்.

3)      இந்த மண்ணில் உதித்த சில ஞானிகள் பற்றியும் அவர்களது உபதேசங்கள் பற்றியும் விளக்கும் கட்டுரைகள்.

4)      புனித நூல்கள் மூலமாகவும், அறிவுபூர்வமாகவும், உண்மையான ஆன்மிக ஞானத்தை அலசிய கட்டுரைகள்.

ஆன்மிக உன்னதங்களின் ஆழமான அர்த்தங்களையும் பலன்களையும் 52 கட்டுரைகளில் எவருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்கும்  இந்த நூல் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய நூலாகவும், ஆன்மிக நண்பர்களுக்கு பரிசளிக்க உகந்த நூலாகவும் இருக்கும். இதன் விலை ரூ.200/-

நூலை வாங்க பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் – 

Mobile: 9600123146

email: blackholemedia@gmail.com


- என்.கணேசன்


ப்ளாக்ஹோல் மீடியாவில் இருந்து தபாலில் நூல்கள் பெற:

தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com )மூலமோ, மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும்
blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.

வங்கி எண்:

name: blackhole media publication ltd
indian overseas bank, current/account no:165302000000377
branch:alandur, chennai
ifsc code: ioba 0001653


மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க 9600123146


5 comments:

  1. சினிமாவும் சின்னத்திரையும் நுழைந்து, இள உள்ளங்களை பாழடித்து விட்ட நிலையில், தங்கள் தொண்டு காலத்தால் மறக்க இயலாதது. நிச்சயம் தமிழக ஆன்மிக உள்ளங்களுக்கு மன நிறைவைத் தரும் செயல்! வாழ்க உங்கள் தொண்டு!!
    மதி நிறை செல்வன்,
    ஆகஸ்ட் 01, 2014

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னிங்க மதி sir. மனமார்ந்த வாழ்த்துக்கள் கணேசன் ஜி.
      https://www.facebook.com/groups/nganeshanfans/

      Delete
  2. சுவாமிநாதன்August 1, 2014 at 5:27 PM

    வாழ்த்துக்கள். அருமையான தொடர் அது. நூலாக வந்ததில் மகிழ்ச்சி. அட்டைப்படம் சூப்பர். தொடரட்டும் உங்கள் நற்பணி.

    ReplyDelete
  3. Vaazhthukkal Sir! Nichayam vaangi padipom.

    ReplyDelete
  4. The front picture is eye catching!

    ReplyDelete