Wednesday, April 2, 2014

உலகப் பழமொழிகள்-3




·         21.செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி- இவர்கள் வாழ்க்கை இன்பமாய் இருக்கும்.

·         22. வீட்டுத் தலைவன் மீது தான் வீட்டில் உள்ளோரது குப்பைகள் கொட்டப்படும்.

·         23. மரணம் – கடைசி வைத்தியர்.

·         24. குருடனை விருந்துக்கழைத்தால் கூட ஒருவன் வருவான்.

·         25. கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால் சைத்தானையே ஏமாற்றி விடலாம்.

·         26. நோயைக் கொன்றாலும் ஆளைக் கொன்றாலும் வைத்தியருக்கு ஃபீஸ் உண்டு.

·         27. ஆறடி நிலம் அனைவரையும் சமமாக்குகிறது.

·         28. நண்பனை ஆபத்தில் அறியலாம். யோக்கியனைக் கடனில் அறியலாம். மனைவியைத் தரித்திரத்தில் அறியலாம். உறவினனை கஷ்டகாலத்தில் அறியலாம்.

·        29. பண்டைக் காலம் முதல் மாறாமல் இருப்பவை நீரின் ஓட்டமும், காதலின் போக்கும்.

·         30. முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, மன அமைதி உள்ள இடத்தில் வைத்தியனுக்கு வேலை இல்லை.

தொகுப்பு: என்.கணேசன்


3 comments:

  1. சமமாக்குகிறது உட்பட அனைத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  2. எனக்கு நாவல் புத்தகம் படிக்கும் ஆர்வமோ அல்லது பழக்கமோ இதுவரை இருந்ததில்லை. ஆனால் "பரம(ன்)ரகசியம்" புத்தகம் படித்ததும் (ஒரே நாளில்,சாப்பிடுவதையும் துாக்கத்தையும் மறந்து முழுவதையும் படித்தேன்)உங்களுடைய எழுத்திற்கு நான் ரசிகனாக மாறிவிட்டேன்.

    ReplyDelete