Wednesday, January 8, 2014

பரம(ன்) இரகசியம் நாவல் வெளியீடு!



அன்பு வாசக நண்பர்களுக்கு,

வணக்கம். நீங்கள் ஆவலுடன் படித்து வரும் பரம(ன்) ரகசியம் நாவல் இன்று அச்சு வடிவில் வெளியாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தக வடிவில் வர வேண்டும் என்று பல வாசகர்கள் ஆவல் தெரிவித்திருந்தார்கள். முழு நாவலையும் ஒரே வாசிப்பில் படித்து முடிப்பது திருப்திகரமாக இருக்கும் என்று சிலரும், கணினியில் படிப்பதை விடக் கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதில் கிடைக்கும் திருப்தியே அலாதி என்று சிலரும், கணினியில் படிக்கும் வாய்ப்பில்லை  என்பதால் புத்தகமாக வெளியிட்டால் தாங்களும் படித்து மகிழ்வோம் என்று இணைய வசதி இல்லாத சிலரும் தெரிவித்திருந்தார்கள். இத்தனை பேருடைய விருப்பமும் இந்த புத்தக வெளியீடு மூலமாக நிறைவேறி உள்ளது.

640 பக்கங்களில், 90 அத்தியாயங்களில், தரமான தாள்களில், கண்களை உறுத்தாத எழுத்துகளில்  வெளிவந்துள்ள பரம(ன்) இரகசியம் நாவலின் விலை ரூ550/-   

வாசக நண்பர்கள் தங்கள் நல்லாதரவை இந்த நூலிற்குத் தர வேண்டுகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இந்த நாவல் வெற்றிகரமாக அமையுமானால் “அமானுஷ்யன்நாவலும் அடுத்ததாக புத்தகமாக வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவல் வழக்கம் போல வியாழன் அன்று இந்த வலைப்பூவில் அப்டேட் ஆகும். புத்தகம் வாங்க முடியாதவர்கள் வாரா வாரம் படித்துக் கொள்ளலாம்.

வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கும் உங்களுக்கும் கூட ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும். கடைசி அத்தியாயம் படிக்கும் போது உங்களுக்கு அது புலப்படலாம். உங்களுக்குள் உறைந்திருக்கும் சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்...


நாவல் வாங்க பதிப்பாளரைத் தொடர்பு கொள்ள – 
Mobile: 9600123146

email: blackholemedia@gmail.com 


BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No.7/1 3rd Avenue, Ashok Nagar, 
Chennai-600 083 
Tel : 044 43054779

Bank Details

Name: blackhole media publication ltd

Indian overseas bank, current/account no:165302000000377

Branch:alandur, chennai

Ifsc code: ioba 0001653


நாவல் முன்னுரையில் இருந்து சில வரிகள்....

.... பலர் இந்த சம்பவங்கள் நிஜமா, சில கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களைச் சுட்டிக் காட்டுகிறதா என்றும் அடிக்கடிக் கேட்டதுண்டு. தனிப்பட்ட நிஜ மனிதர்களை மையமாக வைத்து நான் இந்த நாவலை எழுதவில்லை. சித்தர் உட்பட எல்லா கதாபாத்திரங்களும், இதில் வரும் சம்பவங்களும் கற்பனையே. ஆனால் கதாபாத்திரங்களிலும், சம்பவங்களிலும் உண்மையின் சாயலை நீங்கள் பார்க்க முடியும். அந்த சாயலில் நீங்கள சிலரை அடையாளம் காண்பதாக உணரவும் வாய்ப்புண்டு. அப்படிக் கண்டால் அது தற்செயலானதே!

இந்த நாவலின் விசேஷ மானஸ லிங்கமும் என் தனிக் கற்பனையே. ஆனால் அந்தக் கற்பனையில் மகத்தான உண்மையை நான் கலந்து படைத்திருக்கிறேன்.  நம்முள்ளே இருக்கக் கூடிய, கடுமையாக முயற்சித்தால் உணரக் கூடிய மகாசக்தியைச் சில கற்பனை பூச்சுக்கள் பூசி இதில் காட்டி இருக்கிறேன்.

இந்த நாவலில் இரண்டு இடங்களில் என்னை மீறிய ஒரு சக்திக்குப் பங்குண்டு. அது என் ஆழ்மன எண்ண வெளிப்பாடா, இல்லை ஏதோ ஒரு வெளிசக்தியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது நியாயமாக இருக்கும் என்பதால் தெரிவிக்கிறேன்.

ஒன்று விசேஷ மானஸ லிங்கம் குறித்த ஓலைச்சுவடிகளில் ஒரு செய்யுள் போன்ற வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கினேன். மறு நாள் காலை செய்யுள் தயாராக என் மனதில் இருந்தது. கதைக்குப் பொருத்தமாய் ஒரு மாபெரும் உண்மையை உள்ளடக்கியதாய் அந்த இருவரிச் செய்யுள் வந்தது எப்படி என்று இன்னும் எனக்கு திகைப்பாகவே இருக்கிறது.

இன்னொன்று விசேஷ மானஸ லிங்கத்தின் முடிவு. நான் ஆரம்பத்தில் வேறொரு முடிவைத் தான் எண்ணி வைத்திருந்தேன். கடைசி நேரத்தில் ஒரு நாள் கனவாய் வந்து மறைந்த காட்சி தான் இந்த நாவலில் விசேஷ மானஸ லிங்கத்தின் கடைசிக் காட்சியாக மாறி விட்டது. விசேஷ மானஸ லிங்கம் கடைசிக் காட்சியில் தன்னை அப்படி எழுதி முடிக்க என்னைப் பணித்ததோ என்று பிரமிப்பும் கூட எனக்கு மிஞ்சுகிறது.....

அன்புடன்
என்.கணேசன்


24 comments:

  1. சுந்தர்January 8, 2014 at 7:21 PM

    இரட்டை மகிழ்ச்சியான செய்தி. அமானுஷ்யனும் வெளிவர வேண்டிய நாவல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பரமன் ரகசியம் வெளியானதில் எல்லை இல்லாத மகிழ்ச்சி. கடைசி அத்தியாயம் பற்றி சொல்லி ஆவலை மேலும் கிளப்பி விட்டீர்கள். புத்தகமாக பல ஆண்டுகள் இந்த நாவல் வாழும். அடுத்ததாக ஆங்கிலத்திலும் இது வெளி வரவும், சீரியல் அல்லது திரைப்படமாக வெளிவரவும் வாழ்த்துகிறோம் சார். புத்தகம் வெளிவர ஆசைப்பட்டோம் நடந்தது. அது போல் இந்த இரண்டு ஆசையும் நிரைவேறுமா?

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி, அன்பர் கூறியபடி இந்த நாவல் திரைப்படமாகவோ, அல்லது சீரியலாகவோ வந்தால் இந்த உலகில் ஒரு மாற்றம் வரும் என்று நிச்சயம் கூறலாம். ... .

    இது அனைவருக்கும் ஒரு புதிய மனநிலையை கொண்டுவரும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. ... .

    ReplyDelete
  4. பாராடுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவல்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. அன்பு கணேசன் ஜி ,
    மிகவும் மகிழ்ச்சி. எங்களுடைய ஆதரவும் பிராத்தனையும் எப்போதும் உண்டு.பரமன் இரகசியத்தை நூலில் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
    அந்த இரு நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல. இந்த நாவல் முழுவதுமே ஒரு தூய சக்தியின் துணையுடன் வெளிப்பட்டது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இருப்பினும் நீங்கள் கூறிய இரு நிகழ்வுகளும் கேட்கும் பொழுது, உங்களின் எழுத்துக்களை படிக்க கொடுத்து வைத்ததாக உணர்கிறேன்.

    என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் காலையில் முதல் வேலையாக எனது computerல் உங்களுடைய வலைத்தளத்தையும் மற்றொரு ஆன்மீக வலைத்தளத்தையும் open செய்து சிறிது படித்த பின்பே என்னுடைய வேலைகளை தொடங்குவேன். ஏன் இந்த இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த வலைத்தளத்தை பார்த்த உடனே என் புருவ மத்தியில் விவரிக்க முடியாத உணர்வை உணர்கிறேன். அதுவும் பரமன் ரகசியத்தில் சில அத்தியாயங்கள் படிக்குபொழுது அந்த உணர்வு அதிகரித்து உடலின் தொடு உணர்வைக்கூட உணரமுடியவில்லை. என்னால் முழுமையாக வார்த்தைப்படுத்த முடியவில்லை. உணர்ந்ததினாலே கூறுகிறேன் உங்களுடைய எழுத்தில் ஒளிநிலையடைந்த ஞானிகளின் உணர்வு கலந்துள்ளது அந்த உணர்வை இந்த நாவலை படிக்கும் அனைவரும் உணர பிராத்தனையுடன் வாழ்த்துக்கறேன்.

    ReplyDelete
  6. I wish you all the best sir. This is really an excellent novel. Thursdays became more valuable to me than Sundays only because of paraman ragasiyam novel. You make us to visit the spot and be with the characters. Like Saravana Kumar B said something extra is always in this novel.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் கணேசன்... நாவலின் விலை சற்றே கூடுதலாக இருப்பதால் நான் வலைப்பூவிலேயே படித்துவிடுகிறேன்...

    ReplyDelete
  8. Good to hear. I have bought all other books and gone through two of yours last year. This year I will buy this book.

    Thanks for the treat...

    ReplyDelete
  9. Congratulation sir... Thanks a lot for sharing the front page of the book...

    ReplyDelete
  10. Mr.Ganesan - Great work. Please let me know how to order your book online. I am from Dubai and wish to get the books couriered to my Mumbai address.

    ReplyDelete
    Replies
    1. Please contact the publisher in 9600123146 for the details.

      Delete
  11. Sir,

    Wish you all Success. Thanks for the upbringing of this book.
    Some of my sugestions/ opinion for ur kind review...

    1. considern abt NRIs buying medium./ e-book
    2. transln in english & other Indian lang.
    3. Pricing...a bit high?!

    thanks & regards


    ReplyDelete
  12. வாழ்த்துகளும் இன்னும் தொடரை இணையத்தில் பதிய நன்றிகளும்

    ReplyDelete
  13. Hi Ganeshan,

    Congratulations. I'm in London. How can I buy this book. Can I pay using my credit card so that you can send it by post.

    ReplyDelete
    Replies
    1. Please contact the publisher in 9600123146 for the details.

      Delete
  14. Nice to hear the novel will be published as book. Congratulations!. No surprise that novel made you attempt to finish by itself (the 2 incidents). I think most of them read this novel, will have special intuition feelings happens.

    ReplyDelete
  15. வலையிலையே தொடர்கின்றேன்.புத்தகவெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  16. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. Surely I'll buy this fantastic book as this book is a favorite book of mine. Thank you for bringing it as printed book. Consider to translate it in English. It will get great response.

    ReplyDelete
  18. பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக பெரும் பரபரப்புடன் நான் படித்தது பரமன் ரகசியம் தான். அது அச்சில் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி விடுகிறேன்.

    ReplyDelete