Sunday, January 12, 2014

பரம(ன்) இரகசியம் தந்த அனுபவங்கள்!


அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம்.

நான் பெரும்பாலும் என் எழுத்துக்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிவிக்கும் கருத்துக்களை வலைப்பூவில் எழுதுவதில்லை.

ஆனால் பரம(ன்) இரகசியம் நாவலை வாங்கி முழுவதுமாகப் படித்து முடித்து விட்டு சிலரும், வலைப்பூவில் சில அத்தியாயங்களைப் படித்து விட்டு சிலரும் தங்களுக்கு வித்தியாசமான வர்ணிக்க முடியாத சிலிர்ப்பும், அசாதாரண உணர்வுகளும் ஏற்பட்டதாக அலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எனக்கு தெரிவித்த அனுபவங்கள் சாதாரணமானதல்ல. அதனால் அந்த அனுபவங்களின் தனி வர்ணனைக்குப் போகாமல் நல்ல அனுபவங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்பதனை மட்டும் பொதுவாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர்கள் தெரிவித்த உணர்வுகளில் பல உணர்வுகள் நானும் உணர்ந்தது தான் என்பதாலேயே அவர்கள் சொல்லாமல் விட்டதையும் சேர்த்து என்னால் உணர முடிகிறது.

பரம(ன்) இரகசியம் மிக சுவாரசியமாகப் போகிறது என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. சில பயனுள்ள செய்திகள் அதில் கிடைத்திருக்கின்றன என்பது சிலரின் கருத்து. அதோடு விசேஷ உணர்வுகளையும் சேர்ந்து பெற்றிருக்கிறோம் என்பது மிகச்சிலரின் அனுபவம். சுவாரசியம் என்று சொன்ன முதல் சாரார்களுக்கு நான் எழுத்தாளன் என்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். செய்திகள் கிடைத்ததாகச் சொன்னவர்களும், விசேஷ உணர்வுகள் உணர்ந்ததாகச் சொன்னவர்களும் ஒரு சென்சிடிவான பக்குவ நிலையில் இருப்பவர்கள். ஒருவர் எதற்குத் தயாராக இருக்கிறாரோ அதை மட்டுமே பெறவோ, உணரவோ முடியும். அதை ஏற்படுத்திய நிமித்தமாக மட்டுமே பரம(ன்) ரகசியம் இருந்திருக்கிறது. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் கிடைத்ததைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள், இழந்து விடாதீர்கள் என்ற அக்கறை மிகுந்த ஆலோசனையைத் தான்.

(ஒரே ஒரு எச்சரிக்கை. பெற்றதை பெற்றபடியே உணர்வது மிக முக்கியம்.. கற்பனை இதில் சேர்ந்து கொண்டால் உண்மையான நன்மை இருக்காது)

அவர்களுக்குள்ளே ஆழத்தில் இருந்த ஏதோ ஒரு இறையுணர்வைத் தொட்டு எழுப்ப பரம(ன்) இரகசியத்திற்கு முடிந்ததில் எனக்கு பரம திருப்தி. இந்த நாவலை எழுத வைத்த பரமனுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள், ஊக்குவித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
என்.கணேசன்

16 comments:

  1. கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ளுங்கள்... இழந்து விடாதீர்கள்... சரியாகச் சொன்னீர்கள்... மிகச் சிறந்த நாவல் அண்ணா.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. This novel is very interesting. I bought the book on friday at Chennai fair and read the chapters 80 to 90 at one stretch. I have no words to express. A superb novel. Some places are touching like Guruji-Ganapathi interactions, Guruji's final talk with Manasa Lingam is fantastic.The climax was not that I expected. But it is the best possible climax I think. Regarding some special sensations I felt, I thought it was weird. Now only I come to know many people have felt like that. I don't know what to make of it, but it is still a great experience.Sir, my sincere request is please write more and more.

    ReplyDelete
  3. கண்டிப்பாக தக்க வைத்துக்கொள்கிறோம் சார்...!!!

    மென் மேலும் தங்கள் சேவை சிறக்க வேண்டுகிறோம்....

    ReplyDelete
  4. sir.. i am arun from coimbatore... i want parama(n) ragasiyam book... can you please tell me.. where can i get this ?

    ReplyDelete
    Replies
    1. This book will be available in stalls only in last week of January, after the completion of book fair.After that you can get the book from Vijaya Pathippagam, Town hall and Madhu Book stall (next building to Ganapathi silks), Gandhipuram. If you want the book before that you can contact publisher 9600123146. He will send the book through courier.

      Delete
  5. சரோஜினிJanuary 13, 2014 at 2:48 PM

    நானும் நாவலை வாசித்து முடித்து விட்டேன். எனக்கு வித்தியாச உணர்வுகள் ஏற்படவில்லை என்றாலும் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் நேரில் பார்ப்பது போல் இருந்தது. கடைசி பத்து அத்தியாயங்களும் வாயு வேகம். படித்து முடித்த போது கிடைத்த திருப்தியே அலாதி. இது போல் விறுவிறுப்பான நீண்ட நாவல் படித்து பல காலம் ஆகி விட்டது. வாழ்த்துக்கள். அடுத்த நாவல் எப்போது? எது பற்றி?

    ReplyDelete
  6. Wish all your other novels can also be published as books!
    Iniya Thaithirunaal vaalthukkal!

    Need 1 episode today as a Pongal bonus?

    ReplyDelete
  7. After reading all these comments i am getting very anxiety to read the climax but i cannot as i am in Europe. It is ok i'll wait until to finish, it is also a great experience.
    (eagerly waiting for next episode.....is there any Pongal Bonus for us Mr.Ganesh?
    Maryfergin

    ReplyDelete
  8. Finished the novel. A great reading experience.

    ReplyDelete
  9. I am very jealous of the people who finished the novel. no one is coming from India for me? what to do ?

    ReplyDelete
  10. எனக்கு விசேஷ மானஸ லிங்கம் குறித்த வர்ணனைகளின் போது மெய் சிலிர்ப்பும், காரணம் தெரியாமல் கண்ணீரும் வந்தது. பிறகு தானாக மனம் லேசானது போல உணர்ந்தேன். மற்ற யாருக்காவது இது போல் அனுபவம் வந்துள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு வித சிலிர்பை நானும் உணர்ந்தேன். நினைவு அலைகள் யாவும் சிவன் இருக்க கண்டேன்

      Delete
  11. த்யான நிலையில், இருக்கும்பொழுது எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வு எப்படி மனகண்ணில் தெரிகிறது ? உங்களுக்கு எப்பேர்பட்ட அனுபவங்கள் இருந்திருந்தால் இப்படி எழுதி இருப்பீரகள் ? அருமையான நாவலுக்கு, சிறந்த எழுத்துநடைக்கும் நன்றி.

    ReplyDelete
  12. yes. I also felt that.

    ReplyDelete