Sunday, November 10, 2013

தினமணியில் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் பற்றி...


அன்பு வாசக நண்பர்களே,

வணக்கம். தினமலர், தினத்தந்தி, துக்ளக்கைத் தொடர்ந்து தினமணியில் இன்று “இந்த வாரம்” பகுதியில் நமது ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகம் பற்றி சிறப்பாக திரு.கலாரசிகன் எழுதியுள்ளார்.

பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள், சுயமுன்னேற்றம், வசியம், மனோதத்துவம் சார்ந்த நூல்கள் படிப்பதில் ஆர்வமில்லை என்று குறிப்பிடும் அவர் தொடர்ந்து எழுதியுள்ளதாவது -

“அன்று ஏனோ வித்தியாசமான எண்ணம். மாறுதலுக்காக என்.கணேசன் என்பவர் எழுதிய “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்துப் படித்தேன். கோவையில் வங்கி ஒன்றில் பணிபுரிபவர் என்று அட்டை குறிப்பு சொன்னது. புரட்டிப் படிக்கப் படிக்க எத்தனை எத்தனையோ புதுப்புது செய்திகள், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள். நிஜமாகவே நான் வசமிழந்து விட்டேன்.

விபத்துக்களை முன்கூட்டியே அறிந்தவன், இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டிய ஆழ்மனசக்தி, மறுபிறவி நினைவுகள் உண்மையா?, நோய்களுக்கு எதிராக ஆழ்மனசக்தி ஆகிய கட்டுரைகள் எனக்கு புதியதொரு பார்வையை ஏற்படுத்தின.

ஒருமுறை படித்து விட்ட புத்தகத்தை இப்போது மீண்டும் ஒருமுறை படிக்க எடுத்து வைத்திருக்கிறேன். நான் முதலில் சொன்ன கருத்துக்களை இனிமேல் மாற்றிக் கொண்டாக வேண்டும். மொழிபெயர்ப்பு உள்பட!”

நன்றி: தினமணி - 10-11-2013

(தற்போது தான் எனக்கு திரு கலாரசிகன் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியர் உயர்திரு வைத்தியநாதன் அவர்கள் என்கிற உண்மை தெரிந்தது. அவர் போன்ற ஒரு மனிதர் இந்த நூலைப் படித்ததோடு இதைப் பற்றி நல்ல விதமாக எழுதவும் செய்தது என்னை நெகிழ வைக்கிறது.

அவருக்கும், இந்த நூலை எழுதும் போது பாராட்டி ஊக்குவித்த அனைத்து அன்பு வாசகர்களுக்கும்  முறையாக நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.  நன்றி... நன்றி... நன்றி.... 

உங்கள் கணேசன்)


http://epaper.dinamani.com/c/1894393

9 comments:

  1. வாழ்த்துக்கள் கணேசன் சார். கலாரசிகன் என்ற பெயரில் எழுதுவது தினமணி பத்திரிக்கையின் ஆசிரியரான வைத்தியநாதன் அவர்கள் தான். பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு இது தெரியும். அவர் போன்ற அறிஞர் இப்படி சிலாகித்து சொல்லி இருப்பது தங்கள் எழுத்துக்கு மகுடம் சூட்டுவது போல தான். வாழ்த்துக்கள்.

    - ஒரு பத்திரிக்கையாளன்

    ReplyDelete
    Replies
    1. இந்த உண்மையை எங்களைப்போன்ற வாசகர்களும் அறிந்து கொள்ள காரணமான திரு.பத்திரிக்கையாளர் அவர்களுக்கு வாசகர் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
      BY,
      https://www.facebook.com/groups/nganeshanfans/

      Delete
  2. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஜி.
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அண்ணா...
    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

    ReplyDelete
  5. வாழ்த்துகள் கணேசன் சார்..

    ReplyDelete
  6. திணமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களிடம் இருந்து பெற்ற இந்த பாராட்டு ஒப்பற்ற விருதுக்கு சமம் ...,

    “தமிழகத்தில் இருந்து பிரதமருடன் (வெளிநாடு) பயணம் .. செய்யும் ஒரே பத்திரிக்கையாளர். இவர் மட்டும் தான்...,என்பது குறிப்பிடத்தக்கது.., அந்த அளவுக்கு மூத்த பத்திரிக்கையாளர் .., பிரதமருடன் பயணம் செய்தாலும் பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடும் நேர்மையானவர் கே.வைத்தியநாதன் அவர்கள் என்றும் சமீபத்தில்” படித்தேன் ..,

    அவரின் “தலையங்கங்கள்” பற்றி சொல்லவே வேண்டாம் ..., ஆனால் அவரின் கருத்தை கண்ணோட்டத்தையே தங்கள் எழுத்துகள் சீர் திருத்தியிருக்கின்றன என்றால்..... கே.வைத்தியநாதன் அவர்களிடம் இருந்து பெற்ற இந்த பாராட்டு ஒப்பற்ற விருதுக்கு சமம்....

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  7. Why dont u write the 2nd part of this book.

    ReplyDelete