என்னுடைய
மூன்றாவது நாவலான “அமானுஷ்யன்” ஐத் தொடர்ந்து அடுத்த நாவல் ஒன்றை
எழுதும் படி பல வாசகர்கள் தொடர்ந்து என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி என் வலைப்பூவிலேயே ”பரம(ன்) ரகசியம்” என்ற சுவாரசியமான நாவலைத்
தொடங்குவதாக உத்தேசித்து இருக்கிறேன்.
அமானுஷ்யம்,
அறிவியல், ஆழ்மனசக்தி, ஆன்மிகம், நாத்திகம், பிரபஞ்ச சக்தி ஆகியவற்றோடு குடும்பம், காதல்,
நினைவில் நிற்கக் கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்களை இணைத்து சஸ்பென்ஸ், விறுவிறுப்பும்
கலந்ததாக இந்த நாவல் இருக்கும்.
என்னுடைய
வலைப்பூவில் 400 பதிவுகளுக்கு மேல் இருந்தும் பயனற்ற ஒரு பதிவும் இருந்ததில்லை. பல
நேரங்களில் எத்தனையோ கட்டுரைகளில் விளக்க முடியாத விஷயங்களை கதை மூலமாகவும்,
கதாபாத்திரங்கள் மூலமாகவும் விளக்க முடியும். அப்படி விளங்குவது மனதிலும்
நிரந்தரமாகத் தங்கும் என்ற காரணத்தினாலேயே இந்த வலைப்பூவிலேயே இந்த நாவலை எழுதத்
தீர்மானித்தேன். ஜனரஞ்சக விஷயங்கள் மாத்திரமே அல்லாமல் ஆழ்மனதின் அற்புத
சக்திகளிலும், மற்ற ஆன்மிகக் கட்டுரைகளிலும் சொன்ன சிலவற்றையும் அவற்றில் சொல்லாத
பலவற்றையும் சேர்த்து நான் தரவிருக்கும் இத்தொடர் அடுத்த வியாழன் (ஜுலை 19, 2012) முதல் ஆரம்பமாகும். பின்
ஒவ்வொரு வியாழனும் ஒவ்வொரு அத்தியாயமாக இந்தத் தொடர்கதை இந்த வலைப்பூவில் பதிவு
செய்யப்படும்.
ஒவ்வொரு
வாரமும் அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் விதமாகவும், சிந்தனைக்கு
விருந்தாகவும், இதயத்தில் நிற்பதாகவும், அனைத்து தரப்பினருக்கும் சிறந்த
வாசிப்பனுபவமாகவும் இந்த நாவல் இருக்கும் என்று
உறுதியளிக்கிறேன்.
என்
மற்ற படைப்புகள் வழக்கம் போல ஒவ்வொரு திங்கள் அன்றும் பதிவு செய்யப்படும்.
வழக்கம்
போல உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
வழக்கம் போல உங்களின் படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....!
ReplyDeleteகணேசன் சார், நான் உங்க அமானுஷ்யனோட தீவிர ரசிகன். அதே மாதிரி உங்க மனிதரில் இத்தனை நிறங்களோட சிவகாமியும் ரொம்ப பிடிச்ச கேரக்டர். இந்த ரெண்டு தொடரும் நிலாச்சாரல்ல வந்தப்ப திங்கள் கிழமை எப்ப வரும்னு ஆவலா காத்துகிட்டு இருப்பேன். இப்ப உங்க புது நாவல் அறிவிப்பு சந்தோஷப்படுத்துது. அடுத்த வியாழனுக்காக வெயிட்டிங். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவில் 400 பதிவுகளுக்கு மேல் இருந்தும் பயனற்ற ஒரு பதிவும் இருந்ததில்லை.//
ReplyDeleteநிச்சயமாக
பதிவுலகில் பயனுள்ள தரமான பதிவுகளை மட்டுமே
தரும் பதிவர்களில் நீங்கள் நிச்சயம் முதன்மையானவரே
தங்க்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து...
கணேசன் சார், நான் உங்கதீவிர ரசிகன்.தங்கள் தொடரை ஆவலுடன்
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன்,வாழ்த்துக்கள்.
Vaalthukkal !
ReplyDeleteExpecting your new novel soon..
Thanks for your contribution and looking forward....
ReplyDeleteawaiting eagerly Mr. Ganesan
ReplyDeleteநிலாச்சாரலில தங்கள் தொடர்கள் வந்தபோது திங்கள் கிழமை காத்திருந்து படித்திருக்கிறேன்..
ReplyDeleteஒருபோதும் இது போல் காத்திருந்து ஒரு கதையைப் படித்து ரசித்ததில்லை..
இனி வியாழ்க்கிழமைகளுக்காக காத்திருப்போம் !
பாராட்டுக்கள் தங்களின் அருமையான கதைகளுக்கு !
தங்கள் தொடர் வெற்றி பெற வாழ்த்துகள் , ஆவலுடன் காத்திருக்கிறோம்
ReplyDeleteUngal valaipoovinai dhinamum padikkum ungal rasikan naan.
ReplyDeleteUngal navalai aavaludan edhiparkkiren..Nenjam nirai nanrikal.
Sakthivel - Tiruppur
தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteகரும்பு தின்னக் கூலியா? மிகவும் ஆவலுடன்...
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteHai ganeshan
ReplyDeleteI expect this novel will do something good for the society.
shva paramasivam
I'm fond of ஆழ்மனதின் அற்புத சக்திகள் and கீதை காட்டும் பாதை and more...
ReplyDeleteAll the best Mr.Ganesan.....
I'm so proud of you that you are from my home town and from my great school.....
I'm excitingly waiting for your next novel...
nan oru malaysia tamilan, nan ungkal tivira rasigan . unggal padaipugal atanayum arumai .unggal padaipukalil nan niraya payan adainten.mikka nandri,todaruddum unggal pani.vaaltukkal
ReplyDeletewaiting for your பரம(ன்) ரகசியம்
ReplyDeleteI wish you all the best
ReplyDeleteMuch happier to hear this Good News… Again and again thanks a lot for your inspirational, valuable blog posts.
ReplyDeleteI've been reading/read ஆழ்மனதின் அற்புத சக்திகள் and கீதை காட்டும் பாதை.
ReplyDeleteI don't find your earlier novel here.
Can you please provide the link please?
You may read my other novels at nilacharal.com at thodar section. I've written three novels nee naan thaamirabarani, manitharil eththanai nirangal and amaanushyan at nilacharal.
DeleteThank you for your reply.
DeleteI'll read all the novels referred by you.
thanks.
I read all your novels except "manitharil eththanai nirangal". I could not find any hard copy too.
DeleteAlso that novel starts only from episode 17 in nilacharal. Please guide me to read the novel.
Manitharil eththanai nirangal is published as ebook by nilacharal.
DeleteI tried to buy from booksamillion site, but it is only of US & canada clients. Please share the link or site to buy that book.
DeleteTry this link. Change the currency as Indian Rupees
Deletehttp://nilashop.com/product_info.php?products_id=1680
Thank you
DeleteCongrats Sir :)
ReplyDeleteபரமரகசியம் இரண்டு பாகங்கள் படித்தேன். நிறுத்த முடியவில்லை. தொடரச்சொல்லி மனம் அழைக்கிறது. ஆரம்ப பாகத்தில் சிவலிங்கத்தை நேர் பார்வை பார்த்தவாறு பத்மாசனத்தில் அமர்ந்திருந்த ஒரு முதியவரை பயம் என்பதே அறியாத ஒரு கொலைக்காரன் கொன்றுவிடுகிறான். அதன்பின் தொடக்கூடாது பூஜை அறைக்குள் செல்லக்கூடாது என்ற வார்த்தையை மீறி அதன்பின் என்ன நடந்தது என்பதை சஸ்பென்ஸாக வைத்து அவன் மரணம் ஒரு பீதியாக இருந்தது என்று இரண்டாம் பாகத்தில் தொடரந்தது மிக மிக அருமைப்பா... தொடர்கிறேன் அடுத்தடுத்த பாகங்களை. வெற்றிகள் உங்களை சேரட்டும். அன்பு வாழ்த்துகள்பா..
ReplyDelete