- காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல்
போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
* அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று
சொல்லுவதா?
- ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.
- சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.
- இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.
- வாய் நல்லதானால் ஊர் நல்லது.
- கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.
- காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.
- மயிர் சுட்டுக் கரியாகாது.
- ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
- விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)
- திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)
- பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)
- ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.
- ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.
- ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
- தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.
- அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.
- அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.
- தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.
- எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.
- வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.
- தொகுப்பு: என்.கணேசன்
அருமையான பழமொழித் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅருமையான பழமொழிகள்!
ReplyDeleteநல்ல பழமொழித் தொகுப்பு.... தொடருங்கள் நண்பரே.
ReplyDeleteநல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteநல்ல தொகுப்பு . நன்றி
ReplyDeleteஅருமை சார்
ReplyDeletearivukkum virundu alippavai
ReplyDeleteஅருமையான பழமொழி தொகுப்பு.
ReplyDeleteவாய் நல்லதானால் ஊர் நல்லது//
இந்தப் பழமொழி மிகவும் பிடித்து இருக்கிறது.
அருமை நண்பரே...
ReplyDeleteநீண்ட நாள்களுக்குப் பிறகு பழமொழி படித்துள்ளேன்...
நன்றி...
https://www.youtube.com/watch?v=GnmzA8pNJHk
ReplyDelete"வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே."
ReplyDeleteஇதன் அர்த்தம் என்ன சார் ?
பொருள்கள் கொடுத்து மனிதர்களைக் கவர்வதைக் காட்டிலும் வாய்ப்பேச்சால், முக்கியமாக முகஸ்துதியால், அதிகமாகக் கவர முடியும் என்பதைச் சொல்லும் பழமொழி இது.
Delete