Monday, April 16, 2012

அட ஆமாயில்ல! 3




கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.
                  - போவீ


ஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.
                                        - தோரோ


உலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.
                                       - டாமிஸ்டீல்


பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.
                                      - ஷேக்ஸ்பியர்


மனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.
-         கோல்டன்


அபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.

-         ஸர் தாமஸ் ப்ரௌன்


அதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..
-         ஃபீல்டிங்


தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
-         போப்


ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.
-         பாஸ்கல்


தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.
-         ஆல்காட்


அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
-         கோல்டுஸ்மித்

ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.
                                         - யங்

தொகுப்பு - என்.கணேசன்
                                 


7 comments:

  1. நல்ல தொகுப்பு நண்பரே..

    ReplyDelete
  2. சூப்பருங்க..... ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  3. //கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.//



    தேவையில்லா பீதிகளைக் கிளப்பும் எண்ணங்களில் பல ஆதாரமற்றவில்லை.
    உண்மையே. ஆயினும் பீதி வருகையிலே (on panic attacking ) இது வெறும் பீதியே,
    நிஜமல்ல என்று மனதை நம்பச்செய்வதும் சிரமமே. இந்த பீதி அடிக்கடி வந்து
    வாழ்க்கையின் தரத்தை குறைக்கும்பொழுது வேறு வழியின்றி மன நல மருத்துவரை
    அணுகையில் அவரும் venlafax அல்லது desvenlafidine என்னும் மருந்து தருகிறார்.
    இந்த மருந்தின் பின் விளைவுகள் ஆபத்தாக இருக்கின்றன. இரத்த அழுத்தம்
    அதிகமாகிறது. இது இந்த மருந்தினால் தான் வருகிறது என்று புரியாமல், தனது
    மன அழுத்தம் அல்லது பீதியினால் தான் என்றும் அல்லல் படுபவருக்கு புரியவில்லை
    அல்லது தனது மனதை ஒப்புக்கொள்ளச்செய்ய இயலவில்லை.

    உண்மையில் மனதை இயக்கச்செய்ய இயலாதவன், அதை அடக்கி வைக்க இயலாதவன்
    படும் துன்பங்கள் பல.

    அண்மையில் ஒரு வார இதழின் ஒரு கதையில் இந்த வாக்கியத்தைப் படித்தேன்.
    மனசுக்குப் பின்னே போகும் மனுசன் மிருகம்.
    மனுசனுக்குப் பின்னே மனசு போனால் அவன் தெய்வம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. hi friend

    good thoughts. nice quotes.

    thanks for publish.

    visagan

    ReplyDelete
  5. sir, what about geedha we are egarley waiting .

    ReplyDelete