Monday, March 26, 2012

அதிசயம் ஆனால் உண்மை!



தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு விதி அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1.        ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2.        இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3.        இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4.        இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5.        இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6.        ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7.        இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8.        இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9.        பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10.     லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life  பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை...இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது. 

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார்.  இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதியை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

-என்.கணேசன்

36 comments:

  1. பல காரியங்களுக்கு நேரடி காரணங்கள் நமக்குத்தெரிவதில்லை. ஆனாலும் ஏதாவது காரணம் இருந்தே ஆகவேண்டும். ஆண்டவன் எல்லாவற்றையும் மனிதனுக்குத் தெரியும்படி வைத்திருந்தால் ஒருக்கால் மனித சமுதாயம் இன்னும் சீர்கெட்டுப் போயிருக்கலாம்.

    ReplyDelete
  2. எல்லாமே அதிசயமாக உள்ளது. நீங்கள் சொல்வது சரி தான். எல்லாமே கடவுள் விதித்தபடி ஒரு ஒழுங்குடந்தான் நடந்துகொண்டிருக்கிறது!

    ReplyDelete
  3. உண்மை தான்.என்னோடு தபாலகத்தில் ஒரு கிரேக்க நாட்டு இளைஞன் வேலை செய்கிறான்.25 வயது. இப்போது தான் தன் காதலியை தன் குடும்பத்தினருக்கு அறிமுகப் படுத்தி இருக்கிறான்.

    அதில் அதிசயம் என்னவென்றால் மூன்றாவது பரம்பரைக்கு முற்பட்ட தாய் வழிப் பேரனின் பெயர் கிறீஸ்.இவனது பெயரும் அது தான்.பேரனின் மனைவியின் பெயர் கிறீஸ்டீனா. இவன் காதலியின் பெயரும் கிறீஸ்டீனா தான்.இவனும் இவன் காதலியும் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர்கள்.தம் மூலத்தை ஆராய்ந்து பார்த்த போது பேத்தி கிறீஸ்டினாவும் இந்தக் கிறீஸ்டீனாவின் பூர்வீகமும் கூட ஒன்றுதானாம்.(ஒரே ஊர்).

    கடந்த வாரம் தான் இந்தத் தகவலை அறிந்தேன். அதிசயம் தான்.

    ReplyDelete
  4. நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது சத்தியமான உண்மை. இது போன்ற நிகழ்வுகளே அதற்கான ஆதாரம். இன்னும் தெரியாத அதிசயங்கள் எத்தனை எத்தனையோ.....

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    நிறைய விஷயங்கள் முன் கூட்டியே தீர்மானிக்கப் படுகின்றன. நாம் கருவிகள் தான். இதை விதி என்று சொல்லலாம்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. சிந்திக்க வைத்த பதிவு! நன்றி சார் !

    ReplyDelete
  7. இந்த பதிவை நான் வேறு கோணத்தில் பார்கிறேன். ஏறத்தால பல நூரு கோடி மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியில் இது போன்றதொரு ஒற்றுமைகள் இருப்பது ஏன் தற்செயல் என்று கூரக்கூடது. ஒருவேலை இது ஒரு மையத்தின் செயல் என்றால் ஏன் இந்த சில மனிதர்களிடம் மட்டும் நடக்க வேண்டும். சில மனிதர்களிடம் நடக்கும் இவ்வித்தியாத்தை கொண்டு நாம் நம்பிக்கையை ஏன் தீர்மானிக்கிறோம். அப்படியானால் பல மனிதர்களின் ஒற்றுமையின்மையை புறம் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்.

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் தோன்றியதை அழகாய் வார்த்தையில் தெரிவித்துவிட்டீர்கள் .

      Delete
    2. மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

      Delete
    3. வேரை அறிந்து கொண்டால் அழகிய புதிய மலரை படைக்க வழியை அறிந்து கொள்ள முடியும் அல்லவா ?

      Delete
    4. you can try to understand and support it but cannot try to reveal it that is thondipparkka muyalvathu.. it may die.

      Delete
    5. உண்மையாகவே தங்கள் கருத்தும் ஏற்புடையதே இவ்விஷயத்தில் தற்செயல் ,அதிசயம் , என்பதைத் தவிர்த்து இது ஒரு மையத்தின் செயல் என்றும் இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் சொல்வதற்கு எதுவும் இல்லை

      Delete
  8. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் எடுத்த முடிவு...... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அதிசயம் ஆனால் உண்மை!

    என்ன சார் இந்த மாதம் நாளே நாலு போஸ்ட் தானா? என்ன அநியாயம் ? குறைந்தபட்சம் ஏழு போஸ்ட்டாவது போடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வேலைப்பளுவால் இனி சில காலம் ஒவ்வொரு திங்கள் கிழமை மட்டும் பதிவிடுவதாக உள்ளேன். பிறகு வழக்கம் போல் மாதம் ஏழு பதிவு தொடர்கிறேன். நன்றி.

      Delete
  10. வியக்க வைக்கும் செய்திகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. பூசைகள், வழிபாடுகள், அலகு குத்துவது, பரிகாரம் செய்வது மற்றும் தாலி கட்டுவது இவைகள் எல்லாம் எங்கிருந்து வந்தன என்பதை முதலில் ஆன்மீகவாதளிடமோ அல்லது குருக்களிடமோ கேட்டுப்பாருங்கள். இதற்கு சரியான பதில் கிடைக்குமேதவிர உண்ம இருக்காது.இதன் பின்னால் ஆண்டவனின் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆண்டவனத்தேடி போகும் வழியில் இவைகளை காண்பீர்கள். இது மனிதனை தெய்வமாக்கும் ஒரு ரகசிய கல்வி. இதற்கு ஆண்டவனே துணை.

    ReplyDelete
  12. தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாத அதிசய நிகழ்வுகள்..

    ReplyDelete
  13. Amazing facts.......sir..we expect more and factable information like this..

    ReplyDelete
  14. நாம் இன்னும் கண்டு பிடிக்க வேண்டியது நிறைய உள்ளது என இது சுட்டி காட்டுவதை தோன்றுகிறது!
    "இரகசியம் காக்கபடட்டும் " என்ற கொள்கையே இந்த மர்ம முடிசுகளை காட்கும் பூதம் !

    ReplyDelete
  15. Super.... ungaloda intha blog super..

    ReplyDelete
  16. Unmaiyave super information sir.... Amazing....

    ReplyDelete
  17. ஆச்சர்யமாக உள்ளது

    அமர்க்களம் கருத்துக்களம்

    www.amarkkalam.net

    ReplyDelete
    Replies
    1. Your a very great person, Harts off, thank you so much.

      Delete
  18. எல்லாம் அவன் செயல்
    அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அவனின்றி இந்த அகிலம் ஏது?

    செயல்படும் நாம் ஒரு கருவியே அன்றி வேறில்லை

    ReplyDelete
  19. ஆதாரபூர்வமான அறிய தகவல்.
    நன்றி கணேசன் அவர்களே.

    நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை உலா வருகிறேன்.
    உங்கள் பணி தொடர இறைவன் துணையிருப்பான்

    ReplyDelete
  20. idhalaam padichirukan sir.. but idhukkum ESP kkum enna sammandham konjam puriyura sollungalen sir PLZ.. Am waiting for u'r valuable answr..!!

    ReplyDelete
  21. True but only that person can realize

    ReplyDelete