சில அறிஞர்களின்
கருத்துக்களைப் படிக்கிற போது ”அட ஆமாயில்ல?” என்று நமக்குத் தோன்றுவதுண்டு அல்லவா?
எத்தனையோ அறிஞர்களின்
ஓருசில வரிகள் என்னை நிறைய சிந்திக்க வைத்ததுண்டு. எழுத வைத்ததுண்டு. இழந்த
உற்சாகத்தை மீட்டுத் தந்ததுண்டு. சோதனைகளைத் தாங்கும் பக்குவத்தைத் தந்ததுண்டு.
சிரிக்க வைத்ததுண்டு. என் செயல்முறைகளை மாற்றியதுண்டு. அதை எழுதி வைத்துக்
கொள்ளும் பழக்கம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு உண்டு. அப்படி எழுதி வைத்துக்கொண்ட
அறிவுபூர்வமான, சுவாரசியமான, வழிநடத்தக்கூடிய சில வரிகளை இங்கு பதிவு செய்ய
எண்ணியதன் விளைவு தான் இந்த “அட ஆமாயில்ல?”. முதல் தவணையாய் இதோ சில வாசகங்கள்...
இதில் எல்லாமே
எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லா விட்டாலும் ஓரிரண்டு உங்களை
சிந்திக்க வைக்கலாம், உலுக்கி எடுக்கலாம், பாதைகளை மாற்றலாம், வெறுமனே
புன்னகைக்கவாவது வைக்கலாம். படியுங்கள். நன்றி அந்த அறிஞர்களுக்கு.
-என்.கணேசன்
பணத்திற்கு நாம் தான்
அதிக மதிப்புக் கொடுக்கிறோமே தவிர இறைவன் அதற்கு மதிப்புக் கொடுத்ததாய்
தெரியவில்லை. இல்லா விட்டால் அதைத் தகுதி இல்லாதவர்களிடமும், அயோக்கியர்களிடமும் கொடுத்து
வைப்பாரா?
-யாரோ
உனக்கு உரிமை இல்லாத
பொருளை எடுத்துக் கொண்டு போனால் அழிவு தான். இராவணன் சீதையைக் கொண்டு போன
மாதிரி.
-ராஜாஜி
ஒரு மனிதனை நன்கு
தெரிந்து கொள்ள வேண்டுமா? அவன் பதில்களைப் பாராதே. கேள்விகளைப் பார்.
-வால்டேர்
மற்றவர்களின் தீய
குணங்களை நாம் கற்களில் செதுக்குகிறோம். ஆனால் அவர்களது நற்குணங்களை ஓடுகிற
தண்ணீரில் எழுதுகிறோம்.
-விகடர்
ஹ்யூகோ
உன் அழகிலே
மனமகிழ்கிறாயா? ரோஜாவும் கூடத்தான் மிக அழகாய் இருக்கிறது. ஆனால் அது சீக்கிரம்
வாடிப் போய் விடுகிறது. மலருக்கும் அழகுக்கும் அற்ப வாழ்வு தான் அளிக்கப்படுகிறது.
ஆகவே அதை எண்ணி மகிழாதே.
-கிரேக்கக்
கவிதை
அனுபவம் என்பது நமது
பொருள்களையெல்லாம் இழந்தபின் எஞ்சியிருப்பது.
-காரனெட்
எல்லாம் போய்
விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத
உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
-மில்டன்
காதலம்புகள் மலரால்
ஆனவை. ஆனால் அது இதயத்தைத் துளைக்கும் போது மலராக இருப்பதில்லை.
-மெக்ஸ்கோமதாஸ்
சின்ன விஷயங்களைப்
பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கப்பலின் அடித்தளத்தில் விழும் ஓட்டை
கப்பலையே கவிழ்த்து விடுமல்லவா?
-ஃபிராங்க்ளின்
பசியுள்ள ஒரு நாயைக்
காப்பாற்றினாயானால் அது உன்னைக் கடிக்காது. மனிதனுக்கும், நாயிற்கும் இடையே உள்ள
வித்தியாசம் இது தான்.
-மார்க்
ட்வெயின்
ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையும் ஒரு குறிப்புப் புத்தகம். ஒரு கதை வரைய நினைத்து மற்றொன்றை
வரைகிறான். எழுத நினைத்ததோடு எழுதியதை ஒப்பிடுங்கால் அதுவே வாழ்க்கையின் மிக இழந்த
காலமாகும்.
-ஹென்றி ஃபீல்டு
அருமையான வைர வரிகள். அதிலும் காதலம்புகளும், நாய் உசத்தியும் மிக உண்மையான அசத்தலான வரிகள். நன்றி
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
ReplyDeleteமிக்க நன்றி.
arumaiyaana pathivu
ReplyDeleteMy Comment also அட ஆமாயில்ல ! . Sir you are putting ? mark instead of ! .
ReplyDeleteThanks for pointing out Shiva. I have corrected it.
ReplyDeleteஅற்புதமான பொன்மொழிகளைத் தொகுத்துள்ளீர்கள்.
ReplyDelete