நன்மையும், தீமையும்
கலந்ததே வாழ்க்கை.
ஆனால் அதைப்
பிரித்தறியும் அறிவும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நமக்குத்
தரப்பட்டிருக்கிறது.
நாம் எதையெல்லாம்
முக்கியமாக நினைக்கிறோமோ, எதெல்லாம் அதிகமாக எண்ணங்களில் தங்குகிறதோ, எதில்
எல்லாம் அதிக ஆர்வம் காட்டுகிறோமோ, அதெல்லாம் நம் மனத்திலும், சொல்லிலும்,
செயலிலும் வியாபித்து நம் வாழ்வில் பிரதானமாகி பலம் பெறுகிறது.
நாம் எதையெல்லாம் முக்கியமாக
நினைப்பதில்லையோ, எதையெல்லாம் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோமோ, எதை
எல்லாம் அதிகம் எண்ணுவதில்லையோ அதெல்லாம் நம் வாழ்வில் மங்கி பலவீனம் அடைகிறது.
இதுவே வாழ்வியல்
ரகசியம். இது வரை நம் வாழ்வை நாம் எப்படி தீர்மானித்திருக்கிறோம் என்பது இதை
வைத்தே அமைந்தது. இனி வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வோம் என்பதும் இதை வைத்தே
தீர்மானிக்கப்படும்.
இந்த வகையில் இந்தப்
புத்தாண்டில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைச் சுருக்கி புத்தாண்டைக் கொண்டு
செல்லும் அறிவையும், மன உறுதியையும், பக்குவத்தையும் தந்து எல்லாம் வல்ல இறைவன்
நமக்கு அருள் புரிவானாக!
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
- என்.கணேசன்
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Very happy new year...Vvlthukal.
ReplyDeleteVetha.Elangathilakam.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஞானாம்பாள் வெங்கடேசன், ஹோசூர்.
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனைக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்தப் புத்தாண்டில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைச் சுருக்கி புத்தாண்டைக் கொண்டு செல்லும் அறிவையும், மன உறுதியையும், பக்குவத்தையும் தந்து எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக//
ReplyDeleteநல்ல செய்தியை சொல்லும் புத்தாண்டு.
வாழ்த்துக்கள்.