Friday, December 17, 2010

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?




”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

-என்.கணேசன்

44 comments:

  1. theethum nandrum perar thara vaara ....!

    ReplyDelete
  2. வணக்கம் கணேசன்

    இது வரை உங்களுடை வலை பூவில் நிறை படித்து இருக்கிறேன்.
    அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.



    நன்றி
    S . A .பாபு

    ReplyDelete
  3. what u said is true. I believe in "blessing in disguise", so that I can live happily.

    ReplyDelete
  4. ஒரு கட்டுரையென்பது மேற்போக்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அடிப்படையான விடயத்தை மிகத்தெளிவாக விவரிக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. தங்களின் படைப்புகள் எப்போதும் அடிப்படையான பல விடயங்களை தெளிவாக விவரிக்கின்றது என்பத்தற்க்கு இப்படைப்பு மேலும் ஒரு சான்று!!

    ReplyDelete
  5. நல்ல நடை.
    கவனிப்பும் புலப்படுகிறது
    ஆனால்....

    சுவாமி சுகபோதானந்தா அவர்கள் உவமானம் யதார்த்த வாழ்விற்கு முற்றிலும் ஒத்து போகாதது.

    A video cassette can be played only to temporarily engage. But what we go through is a part of our life. That cannot be alienated.

    மேலும்,
    இந்த சனாதன தர்மம் மனம் எனும் ஒரு அறிவை தாண்டி, பல அறிவுகளை அறிமுகப்படுத்துகிறது.
    அதில் மிக முக்கியமான ஒன்று,
    கர்மா.

    இதன் செயலானது, நமது இந்த வாழ்வு, நமது முந்தைய பதிவுகளாலும், செயல்பாடுகளாலும், ஏக்கங்களாலும் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதே.

    அந் நோக்கில்,
    பல பரிமானங்களாலே இந்த வாழ்வு நிச்சயிக்க படுகின்றது

    தெளிவான நடையில் எழுதும் நாங்கள்,
    இன்னும் சிறக்க,
    சிந்திக்க.

    ReplyDelete
    Replies
    1. மிளிர்வன்May 7, 2021 at 12:46 AM

      மிகச்சரி.. என் மனதில் தோன்றியதும் இதுவே..

      Delete
  6. வணக்கம் ஐயா...

    தங்கள் கட்டுரைகள் அனைத்தும் நன்றாக உள்ளது..

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. Great One Sir ! most of the articles helped me. I am trying these things in my life..

    Will expect more from you like this!!!

    ReplyDelete
  8. தாங்கள் எழுதி வரும் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் தகவல் செறிவோடு உள்ளன.
    சித்தர்களைப் பற்றி ஒரு சில கட்டுரைகளே எழுதி உள்ளீர்கள். மேலும் எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. This is my first visit to your blogspot.

    This article is very nice.

    ReplyDelete
  10. The last few lines are absolutely true.only v loose our happines by pining over the past but the person who has hurt us will remain the same.

    ReplyDelete
  11. An excellent article. Not because of the quality of points mentioned , but because it has both original and reference materials presented in a nice way

    ReplyDelete
  12. Indian youngsters need only this kind of articles which will definitely help them to overcome pressure, keep them away from immoral activities.

    I request you to continuously post such articles.

    Regards,
    Subramani.V

    ReplyDelete
  13. மனதிற்கு புத்துணர்வு தருவது போல் இருக்கிறது நண்பரே...
    பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. nice thanks for this kind of posts. keep it up
    Thanks
    anbu
    chennai

    ReplyDelete
  15. It's very great Mr.Ganesan

    ReplyDelete
  16. if possible to follow the rules at least we will lead the life without burdon

    ReplyDelete
  17. என் நண்பன் உங்கள் பதிவை அறிமுகம் செய்து வைத்தான். இரண்டு பெரிய உண்மைகளை எளிமையாக கொடுத்தததர்க்கு நன்றி.

    ReplyDelete
  18. அநீதி இழைத்தது இறைவன்னானால்? எந்த கர்மத்தின் வினை என்று எப்படி தெரியும். ஆறாத வடுக்கள் இருக்க தான் செய்கின்றன. I have read your articles regarding aazh mana sakthigal and geethai kaattum paadhai. My dad was a sincere follower of your writings too. Thanks for your great service.

    ReplyDelete
  19. nalla pathivugal. feeling of relief is remarkable .
    nandrigal/anbu/vanakkam.
    ncsr.janarthanam. saudi arabia

    ReplyDelete
  20. நமது முன்னேற்றம் எதிர்காலம் பாதிக்கப்படும் படியாக ஏற்படுத்தப் பட்ட மனக்காயங்கள் கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவங்கள் செயல்களில் ஈடுபடும் போது அனிச்சையாக முன்னால் வந்து நிற்கிறதே.

    ReplyDelete
  21. அருமை . நன்றி . திரு .கணேசன் அவர்களே .

    ReplyDelete
  22. அடுத்தவர் செய்ததை விட நாம் நமக்கு செய்வது தான் அதிகம் . அதை நாம் சுமந்து கொண்டு இருப்பது தான் மன்னிக்க முடியாதது .

    ReplyDelete
  23. In fact your article clearly says that we ruined ourselves for others statements/comments.We live for only to ourselves NOT for others.I like your every words are worthy ,practical appilicable.ALL THE BEST FOR FURTHER POSTS.
    by DK. (D.Karuppasamy.)

    ReplyDelete
  24. நான் சென்ற நான்கு மாதத்திற்கு முன் படித்தபோது சரியாக புரிந்து கொள்ளவில்லை மீண்டும் இன்று படித்தபோது இதில் உள்ள உண்மை பொட்டில் அடித்ததுபோல் உணர்ந்தேன் நல்ல பதிவு

    ReplyDelete
  25. thank you Ganesan sir,very useful,keep it up,mana nimmathiyum magilvum kidaithathu

    ReplyDelete
  26. வலைச்சரம் மூலம் உங்கள் வலைதளம் வந்தேன்! அருமையான கட்டுரை! வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  27. vazhkaiyin karkavendia miga mukkiamana padangal..

    ReplyDelete
  28. அருமையான பதிவு
    காலம் தாழ்த்தி படித்திருப்பினும் பயன் குறையாதது என நம்புகின்றேன்

    ReplyDelete
  29. நச்சென்று சொன்ன கருத்து நன்று. நம்பி ஏமாந்து ஆறாமல் இருந்த என் மனதிற்கு மிக ஆறுதலாகவும், சில உண்மைகள் அறிந்தும் நம்பிக்கை குறைந்து இருந்த வேளையில் (வினை உண்மையா?, தெய்வம் உண்மையா? என்று குழம்பிகொண்டிருதேன் ) உங்கள் பதிவை படித்ததற்கு இறைவனுக்கு நன்றி, உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  30. good articles.great

    ReplyDelete
  31. கோமதி அரசு அவர்களின் தளம் மூலமாக உங்கள் தளம் பற்றி அறிந்தேன். வாழ்த்துகள். பதிவுகள் மூலகமாகத் தொடர்வோம்.

    ReplyDelete
  32. நன்றி ஐயா. ரணமாக இருந்த மனம் லேசா ஆனது .

    ReplyDelete
  33. so true sir.. By Rajalakshmi

    ReplyDelete