Tuesday, February 5, 2008

படித்ததில் பிடித்தது - ஒழுக்கம் ஒரு குதிரைச் சவாரி


ரஜினிகாந்த் உட்பட பலர் தங்களது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்த சுவாமி சச்சிதானந்தா அவர்களின் அருளுரைகளை சமீபத்தில் படித்தேன். ஒழுக்கம் பற்றி அவர் கூறி இருந்த கருத்துகள் எளிமையாக இருந்ததோடு ஆணியடித்தாற்போல் மனதில் பதிந்தது. அதுவும் அவர் குதிரைச் சவாரி உதாரணம் சொல்லி விளக்கியிருப்பது மிக அருமை. மாபெரும் உண்மை.

இன்றைய கால கட்டத்தில் கல்விக்கோ, பணத்திற்கோ நம் சமூகம் தரும் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட ஒழுக்கத்திற்கு தருவதில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் ஒழுக்கமில்லாத கல்வியும், பணமும் இன்று எப்படியெல்லாம் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கின்ற இக்கால கட்டத்தில் இந்த அருளுரையை நாம் படிப்பதும், பின்பற்றுவதும், மற்றவர்களுக்கு வலியுறுத்துவதும் மேன்மையைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒழுக்கம்

மிகச்சிலரே உண்மையில் ஓர் உயர்ந்த உன்னதமான நிலையை அடையவும், அதற்கான விலையைக் கொடுக்கவும் விரும்புகின்றனர். ஒழுக்கமே அந்த உயர்ந்த விலை.

ஒரு மனிதனை நிலவுக்கு அனுப்ப எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது? ஒரு ஒலிம்பிக் வீரனாக உருவாக எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது? வீரர்கள் புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அவர்களுக்குத் தடைச்சட்டங்கள் உள்ளன. இடைவிடாது அவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆம், இவையெல்லாம் பதக்கம் என்ற ஒரு சிறு தங்கத் துண்டுக்காகத் தான்.

ஒரு சாதாரண மலை மீது ஏறுவதற்கே எவ்வளவு பயிற்சி அவசியம்? அவ்வாறானால் எவரெஸ்டின் மீது ஏறுவதற்கு எவ்வளவு அதிகமான ஒழுக்கம் அவசியம். இங்கு நாம் ஏற முயற்சிக்கும் மலையின் பெயர் Everest என்னும் அமைதி.

பலர் ஒழுக்கம் என்றால் ஏதோ சுதந்திரக் குறைவு, மகிழ்ச்சியற்ற அல்லது புழுங்கி வாழும் வாழ்வு என பயப்படுகிறார்கள். மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.

- சுவாமி சச்சிதானந்தா

7 comments:

  1. Dear Sir,

    Accidently I happened to come to your blog today. So Inspiring. I should say it sowed a seed to change myself. Thank you. I spent whole day reading all your posts and short stories (except self improvement articles). The stories are really good and they are with purpose. I should say every single story is very touching. one of the rarest blog that has real stuff. thank you,
    Sundar

    ReplyDelete
  2. Thank you very much, Sir.

    N.Ganeshan

    ReplyDelete
  3. good example

    ReplyDelete
  4. ////நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.///
    சரியா சொன்னிங்ண்ணா..நான் உங்களின் பதிவுகளை வாசித்திருக்கிறேன்..அருமைங்ண்ணா...now i am writting blogs.this my site"http://malarkootam.blogspot.com/

    ReplyDelete
  5. I like this example lot...I will keep this in mind from now on...thanks a lot sir

    ReplyDelete
  6. உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.
    romba romba correct brother.nan unga fan.
    unga pala katturaigal yenakku nalla message solli
    irrukku brother.
    en vazhethugal.
    Abishek.Akilan...

    ReplyDelete
  7. மிக நன்று. ஐம்புலன்களுக்கும் கடிவாளம் போடும் திடம் இருந்தால் வாழ்க்கை பயணம் இனிதாகும்!!!

    ReplyDelete